Saturday, April 27, 2019

ADHI SANKARAR



ஆதி சங்கரர் J K SIVAN
பவானித்வம் - 4
வடக்கே, மராத்தியர்கள் வழிபடும் ஒரு அருமையான கோவில் தான் ஸ்ரீ க்ஷேத்ர துளஜா பவானி ஆலயம். மஹாராஷ்டிராவில் உஸ்மானாபாத் ஜில்லாவில் துளஜாபூர் என்கிற ஊரில் உள்ள இந்த ஆலயம் பிரதான 51 சக்தி பீடங்களில் முதன்மையானது என்பார்கள்.

ஷோலாப்பூரிலிருந்து 45 கி.மீ தூரம். இப்போது முன்போல் நடக்கவேண்டாம். நிறைய வண்டிகள் தூக்கிச் செல்லும். 600 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பித்தது. நமது பக்கத்திலும் ஈரோட்டில் பவானி ஆறாக ஓடுகிறாள்.

ஒருவரி க்ஷேத்ர கதை சொல்லட்டுமா. மகிஷாசுரனை வதைத்தது போல் தேவர்கள் குறை தீர்க்க மதங்கன் எனும் ராக்ஷஸனை அம்பாள் மற்ற சக்திகளான வராஹி, பிராம்மி,வைஷ்ணவி, கௌமாரி, இந்திராணி, சாம்பவி ஆகியோரின் சக்தியையும் சேர்த்துக்கொண்டு, வதம் செய்து யமுனாச்சல மலையில் துளஜாப்பூரில் கோவில் கொண்டு பவ ரோகங்களை தீர்க்கும் பவானிஆனாள் . சிவாஜி மஹாராஜாவுக்கு வழிபாட்டு தெய்வம் பவானி.

இனி ஆதி சங்கரரின் பாவானித்வம் அஷ்டகத்தின் கடைசி ரெண்டு ஸ்தோத்ரங்களுடன் நிறைவு செயகிறேன். தவறு ஏதாவதிருந்தால் என்னை க்ஷமிக்கவும். இன்னும் கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கிறதே.

விவாதே விஷாதே ப்ரமாதே ப்ரவாஸே
ஜலே சானலே பர்வதே சத்ருமத்யே |
அரண்யே சரண்யே ஸதா மாம் ப்ரபாஹி
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ ||7||

विवादे विषादे प्रमादे प्रवासे
जले चानले पर्वते शत्रुमध्ये ।
अरण्ये शरण्ये सदा मां प्रपाहि
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥७॥
Vivaade Vissaade Pramaade Pravaase
Jale Ca-[A]nale Parvate Shatru-Madhye |
Arannye Sharannye Sadaa Maam Prapaahi
Gatis-Tvam Gatis-Tvam Tvam-Ekaa Bhavaani ||7||

கண்டுகொண்டேன் நான் கண்டுகொண்டேன். ஓ அம்பா, பவானி என் தாயே, நான் உன் சேய் . தகராறுகள், சண்டைகள், குடிவெறி ,தப்பான சிநேகிதம், துன்பம் துயரங்களில் சிக்கியவன், நீரிலும் நெருப்பிலும், மாலையிலும், காட்டிலும், துயருற்று வாடுபவன், என்னைக் காத்தருள் அம்மா, நீயின்றி வேறில்லை தாயே.

अनाथो दरिद्रो जरारोगयुक्तो
महाक्षीणदीनः सदा जाड्यवक्त्रः ।
विपत्तौ प्रविष्टः प्रनष्टः सदाहं
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥८॥

அநாதோ தரித்ரோ ஜரோரோகயுக்தோ
மஹாக்ஷீணதீன: ஸதா ஜாட்யவக்த்ர: |
விபத்தௌ ப்ரவிஷ்ட: ப்ரணஷ்ட: ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ ||8||

Anaatho Daridro Jaraa-Roga-Yukto
Mahaa-Kssiinna-Diinah Sadaa Jaaddya-Vaktrah |
Vipattau Pravissttah Pranassttah Sadaaham
Gatis-Tvam Gatis-Tvam Tvam-Ekaa Bhavaani ||8||

நான் ஒரு விளையாட்டு பொம்மை என்று அடிக்கடி நவரச கானடாவில் பாடுவேன். நான் உண்மையில் ஒரு அனாதை அம்மா. வயது ஏறி விட்டதே தாயே. உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக அதை அறிவுறுத்துகிறது, தலை சுற்றுகிறது, தள்ளாடுகிறேன். அடிக்கடி விழுகிறேன். ஒரேயடியாக இன்னும் இல்லை. ஏதேதோ வியாதிகள் வலிகள், தலை நீட்டுகிறது. இப்போதும் நாம் கோவில் பக்கம் தலை காட்டாமல் அடிக்கடி டாக்டர் வீட்டில் தான் இருக்கிறேன். எனக்கு யாரும் தெரியாது உன்னைத் தவிர. என் அம்மா, ஓ பவானி நீ தான் எனக்கு ரக்ஷை. என்னை காப்பாற்று, நல்வழிப் படுத்து இன்னும் கூட எனக்கு திருந்துவதற்கு கொஞ்சம் நேரம் இருக்கிறது தாயே.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...