Tuesday, April 2, 2019

KALIDASA

கவிதைக்கோர் காளிதாசன்
J K SIVAN

அவன் பிறந்து வாழ்ந்து மறைந்து 16 நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் நினைவில் நிற்கிறான். அவன் கருப்பா சிகப்பா, குள்ளமா, உயரமா என்று எவருக்கும் தெரியாது. எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அவன் எழுத்து, எண்ணத்தின் வடிவங்கள் வாடாது, மறையாது, குறையாது. அவனை அமரனாக்கிய அவனது தலைசிறந்த ஸமஸ்க்ரித காவியங்கள் காலத்தை வென்றவை அல்லவாஒன்றா இரண்டா, அடடா, அபிஞான சாகுந்தலம், மேகதூதம், இரகுவம்சம், குமாரசம்பவம், மாளவிகாக்னிமித்திரம், விக்கிரமோர்வசியம், ருது சம்ஹாரம் போன்ற எத்தனை எத்தனையோ. அவனே காளிதாசன். இந்திய ஷேக்ஸ்பியராம். வெட்கமாயில்லை? காளியின் வரம் பெற்ற வரகவிக்கு இது அவமானம். ஷேக்ஸ்பியரை வேண்டுமானால் வெள்ளைக்கார காளிதாசன் என்று சொல்லிக்கொள்ளட்டுமே.

காளிதாசன் ரெண்டாம் சந்திர குப்தன் என்கிற விக்ரமாதித்தன் காலத்தில் 4ம் - 5ம் நூற்றாண்டு) வாழ்ந்தார் என்கிறார்கள். விக்ரமாதித்தன் என்கிற பெயர் ஒவ்வொரு ஹிந்துவுக்கும், இந்தியனுக்கும் தெரிந்த பெயர். வேதாளம் கதை தெரியாதவர் உண்டா? அந்த விக்ரமாதித்யன் வடக்கே உஜ்ஜயினி ராஜா. மஹா வீரன். நீதிமான். ஞானஸ்தன். அவனுடைய அரண்மனை அரசவையில் நவரத்தினங்கள் என்று பெரும் புகழ் பெற்ற ஒன்பது புத்திமான்கள் பண்டிதர்கள் இருந்தார்கள். வானசாஸ்திரம், மருத்துவம், கலைஞானம் கல்வியில் சிறந்தவர்கள். காளிதாசன் விக்ரமாதித்தன் காலத்தில் உஜ்ஜயினியில் வாழ்ந்தவன். விக்ரமாதித்தனால் ஆதரிக்கப்பட்டவன். போற்றப்பட்டவன்.


காளிதாசன் நிஜப்பெயர் இல்லை. பெயர் வந்த கதை பின்னால் வரும்.

காளிதாசனை நிறைய பேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள். இமயமலையின் அருகில் வாழ்ந்தவர் என்கிறார்கள். மால்வாப் பகுதியில் உஜ்ஜைனிகாரர் ஒரிஸ்ஸா காரர் திரா ஆகிய மாநிலங்களின் பகுதிகளில் இருந்த கலிங்க நாடு போன்ற பல்வேறுப் பகுதிகளில் வாழ்ந்ததாக அறிஞர்கள் ஊகிக்கின்றனர்.[6]

காளிதாசன் காஷ்மீர் காரர் என்று சிலர் நேரில் பார்த்தது போல் சொன்னாலும், இல்லை விதர்பாவை சேர்ந்தவர். அப்படியெல்லாம் யார் சொன்னது, காளிதாஸ் வங்காளி தான் பேரைப் பார்த்தாலே தெரியவில்லையா? என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ரோஜாவை எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் அழகும் நறுமணமும் குறையப்போவதில்லை. ஒளவையார் கம்பர் இயற்பெயர், காலம் பற்றியே சரியாக தெரியாதவர்கள் நாம்.

ஐந்து வயதில் பெற்றோரை இழந்த அநாதை ப்ராம்மணச்சிறுவன் காளிதாசனை காசியில் ஒரு எருது ஓட்டுபவன் எடுத்து வளர்த்தான். படிப்பற்ற மூடனாக வளர்ந்தான்.

காசி ராஜாவுக்கு ஒரு அழகிய பெண். சரஸ்வதி போன்று ஞானம் உள்ளவள். தனக்கேற்ற ஒரு அறிவாளி கணவனை தேடிக்கொண்டிருந்தாள். ராஜாவின் மந்திரி அவளை காதலித்தான். அவனை ஏற்கவில்லை அவள். அவன் அவளை பழிவாங்க, நிர்மூடனான காளிதாசனை தெருவில் ஒருநாள் பார்த்து அவனை சிங்காரித்து பட்டாடை உடுத்தி அரண்மனைக்கு அழைத்து செல்கிறான். '' இளவரசி, நான் ஒரு உயர்ந்த கல்வி கேள்விகளில் தேர்ந்த ஞானியை தேடித் பிடித்து அழைத்து வந்திருக்கிறேன் அவன் உங்களுக்கு ஏற்றவனாக இருப்பான் என்று எல்லோரும் கருதுகிறோம்'' என்றான்.
''அழைத்து வாருங்கள் உங்கள் பண்டிதனை என் முன்னே''
ஏற்கனவே காளிதாசனிடம் கட்டளை இட்டுவிட்டு தான் வந்திருக்கிறான் மந்திரி.

''இதோ பார் நீ எந்த காரணத்தைக் கொண்டும் இளவரசி முன் உன் வாயைத் திறக்க கூடாது'' திறந்தால் இந்த வாளால் உன்னை வெட்டி கொன்றுவிடுவேன்'' .

பயத்தில் இளவரசி முன் காளிதாஸன் நிற்கிறான். இளவரசிக்கு அவன் கம்பீரம், அழகு பிடித்துவிட்டது. என்னென்னவோ கேள்விகள் கேட்கிறாள். அவன் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு நிற்கிறான். ஓஹோ எவ்வளவு ஞானம் உள்ளவர். அமைதி காக்கிறார்'' என்று எடைபோடுகிறாள் இளவரசி.
திருமணம் நடந்துவிட்டது இருவருக்கும். தாலி கட்டி கல்யாணம் ஆகி காளிதாசன் திரும்புகிறான் தூர ஒரு காளை மாடு ஓடுகிறது. காளைகளை மேய்த்து அனுபவப்பட்ட அவனுக்கு அதை அடக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. ..டுர்ர்ர்ர் என்று கத்திக்கொண்டு காளையைத் துரத்தி ஓடி அடக்குகிறான்.... அவன் ரகசியம் வெளிப்பட்டு விட்டது. அவன் மனைவி ராணிக்கு பேரதிர்ச்சி. இனி என்ன செய்வது.? முட்டாளாக இருந்தாலும் தாலி கட்டிவிட்டானே? குலதெய்வம் காளிமாதாவின் கோயிலுக்கு சென்று கதறுகிறாள். கணவன் முட்டாளாக, ஞான சூன்யமாக இருக்கிறானே. அவனை கொஞ்சம் கல்விகற்றவனாக மாற்று என்று கெஞ்சுகிறாள். அவனையும் வேண்ட சொல்கிறாள். அவன்மனதார வேண்டுகிறான். காளி அருள்கிறாள். அவள் அருளால் ஞானம் பெற்ற முட்டாள் வாலிபன் தனது இயற்பெயர் அழிந்து காளிதாசனாகிவிட்டான்.



தனது மனைவியால் தான் காளி ஞானம் தந்தாள் என்பதால் மனைவியை தனது குருவாக போற்றுகிறான். அவனது இந்த நடவடிக்கை அவன் மேல் இன்னும் அதிக கோபம் கொள்ள செயகிறது அந்த ராணிக்கு. அவனுக்கு ஒரு சாபம் இடுகிறாள்: ''படுபாவி, உன் மரணமே ஒரு பெண்ணால் தான் போ'' என்கிறாள். காளிதாசன் மரணம் பற்றி சொல்லும்போது இந்த விஷயம் வரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...