வாய் திறவாய் - J K SIVAN
இது எல்லோரும் வாய் திறக்கும் நேரமா? ஒவ்வொருவரும் என்னென்னமோ பேசுகிறார்களே? ஒரு பேச்சாவது பொது நலம் கருதியோ, அன்பின் பிரதிபலிப்பாகவோ, அனைவரும் ஒன்று, உடன் பிறப்புகள் என்ற எண்ணமோ இல்லாததாகத்தானே இருக்கிறது. ஒட்டு கேட்கவேண்டும் என்றால், நான் என்ன செய்வேன், அதனால் மக்களுக்கு என்ன பலன், பயன் கிடைக்கும் என்று ஆணித்தரமாக, ஆதாரங்களோடு ஒருவரும் சொல்லமாட்டேன் என்கிறார்களே . மற்றவர் செய்வதை தடுப்பேன். அவர்களை மாற்றுவேன். நான் ஜெயிப்பேன். பொதுமக்கள் தந்த வரிப்பணத்தை வாரி வீசுவேன் என்கிறார்களே. சிலருக்கு மற்றவர் மனத்தை புண் படுத்தவும், ஜாதி வகுப்பு கலவரங்களை உண்டுபண்ணுவதற்கும் தான் பேச்சு உபயோகமாகிறது. நுணலும் தன் வாயால் கெடும் ஆசாமிகளாக சிலர். கூடா நட்பு கூட்டு சேர்கிறது. உண்மை எங்கோ பேசாமல் கருமமே கண்ணாக இருக்கிறது. அதன் குரல் வெளியே வரவே இல்லையே. தருமம் வெல்லும். சூது மாளும் . இறைவன் எல்லோர் மனத்திலும் இருக்கிறானே. சரியானபடி வழி நடத்த மாட்டானா? மௌனமாக இருப்பது சக்தி அற்று இருப்பதாக அர்த்தம் அல்ல. சொல்வதற்கு எதுவும் இல்லை என்று பொருள் தராது. நன்றாக புரிந்து கொள்ள சில விஷயங்கள் சொல்கிறேன்.
மௌனம் சர்வார்த்த சாதகம். அதாவது மோனம் ஒன்றே சகலத்தையும் பெறும் ஒரு வழி. நாலு பேருக்கு நடுவே ரொம்ப பேசாமல் ஒரு ஆசாமி இருந்தால் அவனை அதிகமாக படித்தவன், அநேக விஷயங்கள் தெரிந்தவன், எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு வாய் திறவாமல் இருக்கிறான் என்று தான் எல்லோரும் கருதுவார்கள். மதிப்பார்கள். ''ராபணா'' என்று வாயைத் திறந்தால் தானே சாயம் வெளுக்கும். இப்படி சிலர் தான் உண்டு. மற்றபடி மௌனம் உடம்புக்கு நல்லது. ஆரோக்யமானது.
அதிக சப்தம் ( 30 decibel க்கு மேல்) இருந்தால் ரத்த அழுத்தம், கவலை, மூச்சு திணறல், நரம்பு தளர்ச்சி வந்துவிடும். மாவு மெஷின், மிளகாய், சீயக்காய் பொடி அரைக்கும் ஆசாமிகள் ரகசியம் பேச முடியாது, கேட்கவும் முடியாது. மௌனமாக நமது பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் எளிது. ரத்த அழுத்தம், பெருமூச்சு, ஆத்திரமே இருக்காதே . மனது என்கிற பாட்டரிக்கு ரீ-சார்ஜ் இந்த மௌனம் தான்.
வெளியில் இருப்பதை விட வம்பும் கூச்சலும் ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும் நமக்கு உள்ளே ரொம்ப அதிகம். அதை குறைப்பது மௌனம் ஒன்றே. கதைவை சாத்திவிட்டு ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து உள்ளே நடக்கும் வேடிக்கைகளை கூர்ந்து கவனித்தால், வகுப்பறையில் கணக்கு வாத்தியாரைப் பார்த்த பையன்கள் போல் உள்ளே எல்லாமே தானாகவே 'கப் சிப்'.
ஒட்டமும் ஆட்டமும், விரட்டலும் துரத்தலும் கொண்ட அன்றாட மனித இயந்திரங்கள் ஒரு நாளைக்கு ஒரு தரமாவது ஒரு பத்து நிமிஷம் அமைதியாக அமர்ந்து கண் மூடி மௌனமாக உள்ளே நோக்கினால் புத்துணர்ச்சி பெறலாம். இயந்திரன் மனித இதயன் ஆகலாம்.
மௌனம் வியாதிகளை கிட்டே சேர்க்காது. மௌனம் மூளை வேலை சீராக செய்ய உதவுகிறது. நல்ல முடிவுகள், நல்ல எண்ணங்களை உற்பத்தி செய்கிறது. உடலின் சக்தி விரயமாகாததால் இளமையோடு இருக்கலாமே தம்பி.
மன அழுத்தம் (stress) ரத்தத்தில் கொலஸ்ட்ரால், அட்ரீனலின் அளவுகள் குறைய மௌனம் பெரிதும் உதவுகிறது. ஒரு அரைமணி வாய் பேசாமல் இதை தினமும் சம்பாதிக்கலாமே. வாழ்க்கைப் பாதையையே வேறு ஒருநல்ல சுறுக்கு வழியாக மாறிவிடும்.
நமது உடலில் நல்ல ஹார்மோன்கள் பெருக மௌனம் ரொம்ப உதவுகிறதாம். நமது வயிறு, இதய பகுதிகள் நன்றாக வேலை செய்வதால் ரத்த ஒட்டம் அழகாக தமனிகள், சிரைகள் வழியாக உள்ளே சுற்றிவர டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வேண்டாம். மௌனம் காசு கொடுத்து வாங்கவேண்டாம். சீசாவில் மாத்திரையாகவோ , ஊசி குத்தி உள்ளே இறக்கவோ முடியுனது. உடலுக்கு தூக்கம் இன்றியமை யாதது போல உள்ளத்துக்கு மௌனம் அவசியம்.
மௌனமாக இருப்பவன் ரகசியத்தை வெளியிட்டு OVM (ஓட்டை வாய் மாரி முத்து) என்று பேர் வாங்க மாட்டான். அவனால் எவருக்கும் சிக்கலே வராதே. அவரவர் மனதில் உறுதியானதை தக்க நேரத்தில்
No comments:
Post a Comment