பவானித்வம் - 3
நாளை நிறைவு செய்கிறேன்.
न जानामि पुण्यं न जानामि तीर्थ
न जानामि मुक्तिं लयं वा कदाचित् ।
न जानामि भक्तिं व्रतं वापि मातर्गतिस्त्वं
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥४॥
ந ஜானாமி புண்யம் ந ஜானாமி தீர்த்த
ந ஜானாமி முக்திம் லயம் வா கதாசித் |
ந ஜானாமி பக்திம் வ்ரதம் வாபி மாதர்கதிஸ்தவம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ ||4||
Na Jaanaami Punnyam Na Jaanaami Tiirtha
Na Jaanaami Muktim Layam Vaa Kadaacit |
Na Jaanaami Bhaktim Vratam Vaapi Maatar-Gatis-Tvam
Gatis-Tvam Gatis-Tvam Tvam-Ekaa Bhavaani ||4||
அம்மா, பராசக்தி, பவானி அம்பா, உன்னையன்றி வேறே யாரம்மா எனக்கு ஆதரவு? எனக்கு என்ன தெரியும்? புண்யத்தை கண்டேனா?, திவ்ய க்ஷேத்ர யாத்திரை ஏதாவது சென்றேனா?, மோக்ஷம், கைலாசம், வைகுண்டம் என்று எதையாவது பற்றி தெரியுமா? புராணம் இதிகாசம் பக்தி பூர்வமான புஸ்தகம் எதையாவது படித்தேனா? பாராயணம் செய்தேனா? எந்த கோவிலுக்காவது சென்றேனா? நான் தான் பக்தி கிலோ என்ன விலை என்று கேட்பவன்ஆயிற்றே. இதெல்லாம் என் குறை என்று தெரிந்துகொண்டேன் அது ஒன்றே என் நிறை. உன் பாதமே கதி என்று சரணடைந்து விட்டேன் தாயே. என்னைக் காத்தருள்.
कुकर्मी कुसङ्गी कुबुद्धिः कुदासः
कुलाचारहीनः कदाचारलीनः ।
कुदृष्टिः कुवाक्यप्रबन्धः सदाहं
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥५॥
குகர்மீ குஸங்கீ குபுத்தி: குதாஸ:
குலாசாரஹீந: கதாசார லீன: |
குத்ருஷ்டி: குவாக்ய ப்ரபந்த: ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ ||5||
Ku-Karmii Ku-Sanggii Ku-Buddhih Kudaasah
Kula-[Aa]caara-Hiinah Kadaacaara-Liinah |
Ku-Drssttih Ku-Vaakya-Prabandhah Sada-[A]ham
Gatis-Tvam Gatis-Tvam Tvam-Ekaa Bhavaani ||5||

உலகத்திலேயே மோசமான கடைநிலை ஜீவன் ஒருவனைக்காண நீங்கள் வேறு எங்கும் செல்லவேண்டாம். இதோ எதிரிலேயே நிற்கிறேனே. எவ்வளவு பாதக செயல்கள், தீய எண்ணங்கள், கெட்ட சகவாசம், தவறான செயல்கள் புரிகின்றேன். என் வாயில் வரும் வார்த்தைகளைக் காட்டிலும் மோசமான மொழி, சொல், இன்னும் பிறக்கவில்லையே. இப்படிப்பட்ட நான் உன்னைக் கண்டு கொண்டேன். என் தாயே. நீயே அடைக்கலம். என்னைக்கு காத்தருள் தாயே, ஓ அம்பா பவானி மாதா. உன் பாதாரவிந்தங்களே சரணம்.
प्रजेशं रमेशं महेशं सुरेशं
दिनेशं निशीथेश्वरं वा कदाचित् ।
न जानामि चान्यत् सदाहं शरण्ये
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥६॥
ப்ரஜேசம் ரமேசம் மஹேசம் ஸூரேசம்
திநேஷம் நிஸிதேஸ்வரம் வா கதாசித் |
ந ஜானாமி சாந்யத் ஸதாஹம் சரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ ||6||
இதோ உன் முன்னே நிற்கிறேன் என்னை நானே அறிமுகம் செய்து கொள்ளவேண்டாமா? ரத்தன சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நான் ஒரு கெடு கெட்ட பிறவி, இந்திரன், சந்திரன், ராமன், சோமன், ஹரனோ, ஹரியோ தேவர்களோ ரிஷிகளோ, ஒருவரையும் எனக்கு தெரியாதே. ஆனால் எப்படியோ நான் செய்த ஒரே ஒரு நல்ல காரியம், உன்னைத் தெரிந்து கொண்டது. அதுவே போதும் என் தாயே, என்னை நல்வழிப்படுத்து. உன் சரணங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டுவிட்டேன். என்னைக் காப்பாற்றுவது உன் கடமையாகி விட்டதல்லவா?. அம்மா தாயே, பவானி, வேறே யார் எனக்கு துணை?
பவானித்வம் எனும் பவானி அஷ்டகம் நாளை நிறைவுபெறுகிறது.
No comments:
Post a Comment