சூர் சாகரம் J K SIVAN
ஸூர்தாஸ்
ஹரி தர்சனம்
பாலும் கசந்ததடி, பஞ்சணை உறுத்துதடி, தூக்கம் மறைந்ததடி, கண்ணீர் பார்வையை மறைத்ததடி, நெஞ்சம் பிளந்ததடி, இதயம் வெடித்ததடி, வாழ்க்கை வெறுத்ததடி, இன்னும் இது போன்ற எத்தனையோ வருத்தங்கள். யாருக்கு? ஒருவராக இருந்தால் அடையாளம் பெயர் சொல்லலாம். ஊரே இப்படி எனும்போது? ஆம், பிருந்தாவனத்திலிருந்த அனைத்து கோபியர் நிலையும் இதே என்றபோது எப்படி சொல்வது?
ஏன் என்ற கேள்விக்கு வேண்டுமானால் பதில் சொல்கிறேன்.
அந்த ஊரின் ஜோதி வெளியேறிவிட்டது. மகிழ்ச்சி மதுராபுரி நகருக்கு குடி பெயர்ந்தது. ஆனந்தம் அடுத்த ஊருக்கு போகிறானே.
கோகுலத்தை விட்டு பிருந்தாவனத்தை விட்டு, கண்ணன் சென்றுவிட்டானே. கண்களே, இன்னுமொரு முறை அவனை கண்டு ஆனந்தியுங்கள். அவன் இதோ இன்னும் சற்று நேரத்தில் மறைந்து விடுவான்.
அவன் தாமரைக் கண்களை கண்டு மகிழ்ந்த எங்கள் கண்கள் இனி பனித்து , துயரத்தை தான் ஒவ்வொருநாளும் வெளிப்படுத்தும்.
எங்கே அவன்? அழகிய கரு நீல நெற்றியில் சிவந்த சிந்தூரத்திலகன். கண் முன்னாலேயே நிற்கிறதே அவன் கருநீல கழுத்தில் ஜொலிக்கும் வெண்ணிற முத்து மாலைகள். அவன பேசும்போதெல்லாம் எவ்வளவு அழகாக அவை அசையும்! இத்தனை நாள் எங்களை மகிழ்வித்த அந்த தெய்வத்தை இனி பிருந்தாவனத்தில் எங்கே பார்க்கமுடியும்?
எங்கள் அனைவரையும் அன்பினாலே பிணைத்து இன்பமூட்டிய அவன் எங்கள் கயிற்றில் சுறுக்கை மாட்டி விட்டதை போல் அல்லவா இருக்கிறது இப்போது?
உள்ளே இத்தனை உணர்ச்சிகளை கழுத்து வரைக்கும் கொண்டுள்ள கோபியர் வெளியே துன்பத்தை துயரத்தை காட்டிக் கொள்ளாமல் அன்றாட வேலைகளைச் செய்து கொண்டு பேசாமல் இருக்கிறார்களே, அடடா, இது என்ன நிலைமை என்கிறார் சூர்தாஸ். அவர்கள் சிரித்து சாதாரணமாக இருப்பதாக காட்டிக் கொண்டாலும் உள்ளே ஒரு தாங்கமுடியாத எரிமலையை அல்லவோ சுமக்கிறார்கள்!
கிருஷ்ணா, நீ இன்றி காசியே கூட அல்லவோ அமைதி இழந்து விட்டதாமே அப்படி இருக்க பிருந்தாவனத்தில் எங்கள் நிலையை சொல்லவா வேண்டும்''என்று கோபியர்கள் கூறுவதை கேட்டுவிட்டு சொல்கிறார் சூர் தாஸ் .
Hari darshan ki pyasi akhiyaan hari darshan ki pyasi
dekhyo chahe kamal nayan ko nis din rahat udaasi
akhiyaan hari darshan ki pyasi
kesar tilak motin ki maala vrindavana ke vaasi
neh lagaai tyag gayen trin sam daal gayen gal phansi
akhiyan hari darshan ki ......
kahoo ke mana ki ko jaanat logan ke man haasi
surdas prabhu tumhare daras bin leho karvat kashi ankhiyaan
hari darshan ki pyasi hari darshan ki........
dekhyo chahe kamal nayan ko nis din rahat udaasi
akhiyaan hari darshan ki pyasi
kesar tilak motin ki maala vrindavana ke vaasi
neh lagaai tyag gayen trin sam daal gayen gal phansi
akhiyan hari darshan ki ......
kahoo ke mana ki ko jaanat logan ke man haasi
surdas prabhu tumhare daras bin leho karvat kashi ankhiyaan
hari darshan ki pyasi hari darshan ki........
No comments:
Post a Comment