ஓட்டம் J K SIVAN
இருவரும் ஒருநாள் மாலை நடந்து போய்கொண்டிருக்கும்போது பின்னால் ஒரு வெள்ளை போலீஸ்காரன் வருவதை பார்த்ததும் அனுமதிசீட்டு உள்ளவன் அடுத்தவனை ஓடி எல்லையை தாண்டிவிடு என்றான். அவன் அப்படியே பறக்க ஆரம்பித்தான். அனுமதி சீட்டுக்காரனும் பின்னால் ஓடினான்.
ரெண்டு கறுப்பர்கள் ஓடுவதை பார்த்த போலீஸ் காரன் விசில் அடித்து நிற்க சொன்னான். ரெண்டு பெரும் இன்னும் ஸ்பீட் அதிகமாக எடுத்து ஓடினார்கள். போலீஸ் காரன் துரத்தினான். சிறிது நேரத்தில் ரெண்டாவது கருப்பனை பிடித்து விட்டான்.
''என்னாடா என்னை விட வேகமா ஓடுவதாக நினைப்பா?''
''ஐயோ அப்படியெல்லாம் இல்லிங்களே''
''பின்னே எதுக்கு ஒடினே. எங்கே உன் அனுமதி சீட்டு. காட்டு''
போலீஸ் காரனோடு பேச்சு கொடுத்துக்கொண்டே ரெண்டாமவன் தாமதப்படுத்தினான். அதற்குள் முதல் கருப்பன் சிட்டாக பறந்துகொண்டிருந்தான். அங்குமிங்கும் தேடுவதாக பாவலா பண்ணி ரெண்டாமவன் அனுமதி சீட்டை எடுத்துக் காட்டினான்.
போலீஸ் காரனுக்கு ஆச்சர்யம். எதற்காக இந்த முட்டாள் பயந்து ஓடினான்?
''உன்னிடம் தான் அனுமதி சீட்டு இருக்கிறதே எதற்காக என்னை பார்த்து விட்டு ஓடினாய்?''
''ஐயா நான் உங்களை பார்த்து விட்டு ஓடவில்லை. டாக்டர் ஓடச்சொன்னார்.''
''ஓ உடற் பயிற்சியா. அப்படியென்றால் சரி. எதற்காக உன் நண்பன் ஓடினான்?''
''அவன் டாக்டரும் ஓடச்சொல்லி இருந்தார்'' ரெண்டுபேரும் ஓடினோம்.
போலீஸ் காரன் வெள்ளை முகம் சிவந்தது.
''என்னை ஏமாற்றப்பார்க்கிறாயா?
''டாக்டர் சொல்லி ஓடினவனாக இருந்தால் நான் நிற்க சொல்லும்போது ஏன் நீ நிற்கவில்லை'' நான் நிற்கச்சொன்னது காதில் விழவில்லை, உன்னை துரத்தி ஓடிவந்ததை பார்க்கவில்லை என்று சொல்லாதே. கொன்றுவிடுவேன்'' நான் ஓடிவந்தது உனக்கு தெரியுமல்லவா?
''ஐயா நீங்கள் என் பின்னால் ஓடிவந்ததை நான் பார்த்தேன்.''
''அப்போ நீ ஏன் நிற்கவில்லை?
''நான் ஒரு முட்டாளுங்க. உங்களையும் உங்க டாக்டர் ஓட சொல்லி இருக்காருன்னு நினைச்சிட்டேன்''
No comments:
Post a Comment