Friday, June 21, 2019

vikramadhithyan



விக்ரமாதித்தன் கதை   J.K SIVAN                              
                                 
            3  நம்பினால் நம்புங்கள். நடந்தது தான். 
விக்ரமாதித்தன் புகழ்,  சாதுரியம், மதி யூகம், வீரம், அறிவு  ஈரேழு லோகங்களிலும்  பிரசித்தம் என்றால்  தேவலோகத்தில் கட்டாயம் அவனை அறிந்திருப்பார்களே.   ஆம்  தேவலோகத்தில் இந்திரன் ஒரு இக்கட்டில் இருந்தபோது  இது  நிகழ்ந்தது. 

தேவேந்திரன் சபையில்  ஊர்வசி ரம்பை  திலோத்தமை போன்ற அப்ஸரஸ்கள் உண்டு.  அவர்களில் 
 ரம்பையும் ஊர்வசியும், அழகிலும், நாட்டிய திறமையிலும் சிறந்தவர்கள். ஒருவரை ஒருவர் மிஞ்சுபவர்கள்.  நாட்டியத் தலைவியாக ஒருவளை நியமிக்கவேண்டும்.  யாரை தேர்ந்தெடுப்பது?  ஊர்வசியா, ரம்பையா?  எவ்வளவோ முயன்றும் தேவேந்திரனால் முடியவில்லை. அவன் சோர்ந்து போயிருந்தசமயம்  சில ஆலோசகர்கள் அவனிடம் ''தேவேந்திரா, இந்த மாதிரி கடினமான  போட்டிகளில், தேர்வுகளில்  முடிவெடுக்க முடித்தவன் ஒருவர் இருக்கிறார். விக்ரமாதித்தன் என்கிற குப்த ராஜா. உஜ்ஜயினியில் அவரை நாடு . உனக்கு உதவுவார் '' 

தேவேந்திரனின் தேர் உஜ்ஜயினியில் விக்ரமாதித்தன் அரண்மனையின் முன் நின்றது.  இந்திரனை உபசரித்து மரியாதைகள் செய்தன விக்ரமாதித்தன். அவனது சிக்கல்  புரிந்தது. ''தேவேந்திரா, நான் உன்னோடு வருகிறேன். ஒரு சில நாள் தங்கி என்னால் முடிந்த உதவி செய்கிறேன்''  என்று  விக்ரமாதித்தின் இந்திரனோடு தேரில் சென்றான். 

முதல் நாள்  ரம்பை ஊர்வசி இருவரும்  இந்திரன் சபையில் சேர்ந்து ஆடினார்கள்.  அன்று விக்ரமாதித்தனால் எவர் சிறந்த நாட்டிய மேதை என்று  தீர்மானிக்க முடியவில்லை.   ''அருமையான நாட்டிய நாரீமணிகளே,  நான் நாளையும் உங்கள் ஆடலை ரசிக்க விரும்புகிறேன்''  என்றான் விக்ரமாதித்தன். தனது  அறைக்கு சென்ற விக்ரமாதித்தன்  ரெண்டு பூச்செண்டுகளைத்  தயாரிக்கச்   சொன்னான். 

 மறுநாள்  ஆடல் போட்டி துவங்கும்போது  விக்ரமாதித்தன் புதியதாக தயாரிக்கப்பட்ட  ரெண்டு பூச்செண்டுகளை கொண்டுவரச்சொன்னான். ''இதை ஒவ்வொருவரும் கையில் வைத்துக் கொண்டு ஆடுங்கள்'' என்றான். ஆட்டம்  துவங்கியது.  மிகவும் கடினமான ஒரு  பாடலுக்கு  நெருடலான நாட்டியம். அடவும் அசைவும் வேகமும் அதிகமானது. 

ரம்பையும் ஊர்வசியும் விடாமல் ஆடினார்கள். நேரம் ஓடியது. இருவரும் சளைக்காமல் ஆடினாலும் திடீரென்று ரம்பை முகம் சுளித்தாள். ஆட்டம் தடுமாறியது. அவள்  வலியால் கத்தினாள். 

விக்ரமாதித்தன் ''ஆட்டத்தை நிறுத்துங்கள்'' என்றான்.  ''தேவேந்திரா  இந்த இருவரில் ஊர்வசி சிறந்த நாட்டிய கலை அரசி''  என்று தனது முடிவை சொன்னான்.

''விக்ரமாதித்தா , எப்படி இந்த முடிவை எடுத்தாய் நீ"? என்ற  தேவேந்திரனிடம் ஷெர்லாக் ஹோம்ஸ் போல் விக்ரமாதித்தன் பதில் என்ன சொன்னான்?
''இருவருமே  தலைசிறந்த நாட்டிய அரசிகள். அவர்களை மேலும் சோதிக்க நான் இருவரிடமும்  ஒவ்வொரு மலர்ச்செண்டு கொடுத்து கையில் பிடித்துக்கொண்டு ஆடுங்கள் என்றேன்.  அந்த பூச்செண்டுக்குள் ஒவ்வொன்றிலும் கடுமையாக கொட்டும் வண்டுகளை உள்ளே  விட்டிருந்தேன். ரம்பை ஆடும்போது தந்து கையிலிருந்த பூச்செண்டை அசைத்து, அழுத்தி,   அமுக்கி,உள்ளே இருந்த வந்து வெளியே வந்து அவளை கொட்டியது. கடினமான ஆட்டம்  ஆடினாலும், தனது கையில் உள்ள பூச்செண்டு கசங்காமல், நலுங்காமல் ஊர்வசி ஆடினதால்  உள்ளே இருந்த வண்டுகள் வெளியே வந்து அவளை தாக்க வில்லை.  ஊர்வசியிடம் நளினம் அதிகம் என்று தீர்மானித்தேன்'' என்றான் விக்ரமாதித்தன்.

தேவேந்திரன் மகிழ்ந்தான். ரம்பையும் தோல்வியை ஒப்புக்கொண்டாள் .      தேவேந்திரனிடம் விடைபெற்று விக்ரமாதித்தன் திரும்பும்போது  அவனுக்கு ஒரு பரிசு கொடுத்தான் இந்திரன். நவரத்தினம் பதித்த தங்க 32 படிகள்  அமைந்த சிம்மாசனம் ஒன்று .  ஒவ்வொரு படியிலும் ஒரு தெய்வீக பொம்மை அதை கண்காணித்தது. இன்னும் ஒரு ஆயிரம் வருஷங்கள் நீ  ஆளவேண்டும் ''என்று வாழ்த்தினான் தேவேந்திரன்.

உஜ்ஜயினி திரும்பிய ராஜாவை மந்திரி பட்டி அப்படியே கட்டிக்கொண்டான். மகிழ்ந்தான். . விவரங்கள் கேட்டறிந்தான்.  '' அரசே நான் ஆயிரம் ஆண்டுகள் உன்னோடு வாழ  முடியாதே.எனக்கு ஆயுசு கம்மி. எதற்கும் இன்று இரவு காளி கோவில் சென்று அவளை வேண்டுகிறேன் அவள் உதவுவாள் என்று நம்பிக்கை இருக்கிறது. 
வெளியே சென்றிருந்த காலி  கோவிலுக்கு திரும்பும் வரை பட்டி  காத்திருந்தான். நடுநிசி. காளி  திரும்பினாள்.            
''பட்டி , எதற்கு இந்நேரத்தில் இங்கு வந்தாய், சொல்?''
''தாயே, எனக்கு  விக்ரமாதித்தனுடன் ஆயிரம் வருஷம் இருக்கவேண்டும். நீ தான் அருளவேண்டும்.''
''நீ கேட்கும் வரம் தருகிறேன். ஆனால் விக்ரமாதித்யன் தலையை வெட்டிக்கொண்டு வா ''
''சரி '' என்று  பட்டி விக்ரமாதித்தனிடம் வந்து நடந்ததை சொன்னான்.  விக்ரமாதித்தன் தனது தலையை
வெட்டச்சொல்லி அதை எடுத்துக்கொண்டு பட்டி காளியிடம்  செல்கிறான்.   விக்ரமனின் தலையை கண்ட காளி  ''பட்டி, நீ  2000 வருஷங்கள் வாழ்வாய்'' என்றதும் பட்டி சிரித்தான். ''
''என்ன சிரிப்பு உனக்கு?''  என்றாள்  காளி .
''என் அண்ணா விக்ரமாதித்தன்  ஆயிரம் வருஷம் இருக்க வரம் பெற்றவன். ஒரு வாரம் கூட ஆகவில்லை தேவேந்திரன் வரம் கொடுத்து. ஆனால் இதோ இறந்து போய்  என் கையில் அவன் தலை.நான் எப்படி 2000 வருஷம் இருப்பேனோ சந்தேகம் தான்  என்றான் பட்டி .
''முட்டாளே, என்னையும் தேவேந்திரனையும் ஒன்றாக எடை போடாதே. நீங்கள் இருவருமே ரெண்டாயிரம் வருஷங்கள் இருப்பீர்கள்.  விக்ரமாதித்தன் மீண்டும் தலை சேர்ந்து  உயிர்பெற்றான். 
ஆயிரம் வருஷங்கள் நீ  அரசனாக எப்படி இருக்கமுடியும். எப்படி  நான் 2000 வருஷங்கள் 
உன்னோடு இருப்பேன்  என்றான் பட்டி.  யோசித்து ஒரு முடிவுக்கு  வந்தார்கள். 
''அண்ணா  விக்ரமா, ஒரு வழி இருக்கிறது.  நீ  ஆறுமாசம் அரசனாக நாட்டில் இரு. ஆறுமாசம் காட்டில் இருப்போம். அப்போது ரெண்டாயிரம் வருஷங்கள் இருந்தும் ஆயிரம் வருஷம் நாட்டுக்கு அரசனாக இருந்து வரம் பலிக்குமே  என்றான் பட்டி.
++
மேலே கண்ட விஷயம் எல்லாம்  போஜ ராஜன் தனக்கு கிடைத்த விக்ரமாதித்தன் சிம்மாசனத்தில் முதல் படியில் காலை வைத்ததும்  முதல் படிக்கான பொம்மை சொன்னது அல்லவா. மீண்டும் ஆரம்பத்தில் கதையை பாருங்கள். மறந்து போயிருக்க போகிறீர்கள்.
''என்ன  போஜா, நீ  விக்கிரமாதித்தனுக்கு ஈடு ஆவாயா? அல்லது அவனை விட உயர்ந்தவனா சொல்?'' என்றது 
போஜன் ஸ்தம்பித்து நின்றான். பதில் தோன்றாமல்  இரவாகிவிட்டதால்  அரண்மனைக்குள் சென்றுவிட்டான்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...