Saturday, June 1, 2019

SUR SAGAR



சூர் சாகரம்  J K SIVAN
சூர் தாஸ்      

                         அன்புக்கு   நீ  அடிமை

எதெல்லாம் உயர்ந்தது என்று பல நாள் யோசித்தேன். புனிதமான இதயத்தில் நிரம்பிய அன்பு, பிரேமை யாரிடம் வைக்கிறோமோ அது மட்டுமே மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று உணர்ந்தேன். கண்ணா, அதை உன்னிடமே வைத்தேன். அது ஒன்றே உன்னையும் என்னையும் கெட்டியாக பிணைத்துள்ளது.

நீ இதை யாரிடமெல்லாம் கண்டு உன் மனதை பறிகொடுத்தாய் என்றும் எனக்கு தெரியும். ஞாபகப் படுத்தட்டுமா கிருஷ்ணா?

சமாதானம்  பேச  தூது சென்றாயே அப்போது யார் வீட்டில் தங்கினாய்?  விரும்பி ஆகாரம் உண்டாய்? விலையுர்ந்த சுவையான அபூர்வ பழங்கள், உணவுகள் உனக்கு அளிக்க துரியோதனன் முன் வந்தானே, ஒரு கணமும் யோசிக்காமல் ''நன்றி துரியோதனா வேண்டாம்,  நான் விதுரன் குடிசைக்கு செல்கிறேன். அவருடன் பேசி நாளாயிற்று'' என்று பதிலளித்து விதுரன் அளித்த பழங்களின் தோலை மட்டுமே உண்டாய். இது  மட்டுமா? நீயே முன் அவதாரத்தில் ராமனாக இருந்தபோது அதே போல் சபரி எனும் காட்டில் வாழ்ந்த முதியவள் அளித்த எச்சில் பழங்களை ரசித்து ருசித்து உண்டவன் அல்லவா?. 
''சபரி, நீ கொடுத்த பழங்கள் போல் இனிய பழங்கள் நான் சாப்பிட்டதே இல்லை '' என்றவன் ஆயிற்றே..

''ஐயோ , அர்ஜுனன் தவறு செய்யாமல் என்னை மட்டும் கேட்க வேண்டுமே, என் படைகளை அல்ல'' என்று நீ உள்ளூர கவலைப்பட, அவன் நீ விரும்பியபடியே,    உனது நாராயணி சேனை எனக்கு  தேவை இல்லை.  எனக்கு  நீ மட்டுமே  இருந்தால் போதும்'' என்று துணிந்து கேட்டானே .  
எல்லோராலும் மதிக்கப்பட்ட விருஷ்ணி   யாதவ  குல பேரரசன், சர்வ சக்தி வாய்ந்தவன் நீயும் அவனுக்கு தேர்ப்பாகனாக தேர் தட்டில் கீழே அமர்ந்து அவனது காலின் கீழே இருந்து தேரை செலுத்தினாயே .  அது எதனால்?? 

மனமொப்பிய அன்பினால், பிரேமையால், நட்பின் பாசத்தால் மட்டும் அல்லவா?

நீ எங்கே? ஒன்றுமறியாத சாதாரண பிருந்தாவன கோபியர் எங்கே?

அவர்களோடு ஒருத்தனாய் கை கோர்த்து விளையாடியதும் அவர்கள் உன் மேல் வைத்த பாசத்தாலும் கள்ளங்கபடற்ற நேசத்தாலும்,  அன்பாலும்,  கவரப்பட்டதால் தானே.

அன்புக்கு அடிமையான உன்னை இந்த சூர் தாஸ் எவ்வளவு கடுமையாக வார்த்தைகளால் நிந்தாஸ்துதியாக பாடுவதும் கூட உன் மேல் உள்ள அபரிமித அன்பினால் மட்டுமே தான்.

நீ எல்லா சக்திகளிலும் மிக உயர்ந்த சக்தி, என்று தெரிந்தும் உன் மேல் கொண்ட பரிவினால் தானே தீன ரக்ஷகா?

சூர்தாஸின் அந்த அற்புத பாடல் இது தான்

 sabse unchi prem sagaai  duryodhana ko meva tyagyo saag vidur ghar khai
sabse unchi...juthe phal sabri ke khaaye
bahu vidi swada batayi sabse unchi prem ....
prem ke bas arjun rath hakyo bhool gaye thakurai
sabse unchi prem ... aisi preet barhi vrindavana  gopin naach nachaai 
sabse unchi ....sur kroor is laayak nahi
kah lag karehu badhai



                       

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...