Tuesday, June 4, 2019

DHAKSHINAMURTHI


ஆதி சங்கரர் J K SIVAN
தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்

3 ஆனந்த சுதந்திரம்

विश्वं दर्पणदृश्यमाननगरीतुल्यं निजान्तर्गतं
पश्यन्नात्मनि मायया बहिरिवोद्भूतं यथा निद्रया ।
यः साक्षात्कुरुते प्रबोधसमये स्वात्मानमेवाद्वयं
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥१॥

Viswam darpana drusyamana nagari,Thulyam nijantargatham,
Pasyannathmani mayaya bahirivoth,Bhutham yatha nidraya,
Ya sakshath kuruthe prabodha samaye, Swathmanameva dwayam,
Thasmai sri guru murthaye nama idham, Sree Dakshinamurthaye., 2

1) விஸ்வம் தர்பண த்ருஷ்யமான நகரீ துல்யம் நிஜாந்தர்கதம்
பஷ்யன்னாத்மனி மாயயா பஹிரிவோத்பூதம் யதா நித்ரயயா
ய:ஸாக்ஷாத்குருதே ப்ரபோதசமையே ச்வாத்மான மேவாத்வயம்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

அவர் ஒருவரால் மட்டுமே முடியும். பரிபூர்ண சாந்தம் அமைதி மௌனம் மூலமாக சகல உலக, பிரபஞ்சத்தையும் அறிந்துகொள்ள வேறெப்படி முடியும்? தென்திசை நோக்கி அமர்ந்த பிரபு, இந்த பிரபஞ்சமே ஓரு கண்ணாடியில் பிம்பமாக பார்க்கும்போது அதன் உணர்ச்சி, அசைவு, வேகம் செயல் எல்லாம் புரிகிறது தெரிகிறது. சப்தம் இல்லாமலேயே. சர்வமும் வெளியே கண்ணாடி பிம்ப நகரமே தான். கண்ணாடியில் தோன்றி மறைவது போல நிலையில்லாதது.
ஆத்மாவுக்குள் நடக்கும் ஒரு காட்சி. மாயையால் இயக்கப்படுத்துவது. தூக்கத்தில் காணும் காணவைப் போன்றது. எல்லாமே நிஜமாக நடந்தது போல் தோன்றினாலும், அத்தனையும் நிழல் பிம்பம். மனதில் ஆத்ம ஞானம் விளைந்தவுடன் இதெல்லாம் வெறும் பயாஸ்கோப் நிலையில்லாத வேடிக்கை மாயத் தோற்றம் என்று புரியும். மௌனம் அதை விளக்கும். சாஸ்வத பிரம்மம் ஒன்றின் மாறுபட்ட வெளிப்பாடு. பல பிம்பங்கள் என புரியும்.
கண்டசாலா உலகே மாயம் வாழ்வே மாயம் நிலையாக நாம் காணும் சுகமே மாயம் வெறும் பாட்டாக தான் அப்போது மனதில் புகுந்தது இப்போதல்லவோ அர்த்ததோடு அது வெளிப்படுகிறது. ஆம் . உலகமே கண்ணாடி பிம்பம் தான் இந்த மாத்திரை விலகினால் தான் ஆத்ம ஞானம், ப்ரம்ம ஜோதி தெரிகிறது. என் மனம், புத்தி, புலன்கள் மூலம் இப்போது தான் வேறு ஒரு புதிய பாடம் கற்கிறோம். என்னுள் ஆத்ம ஜோதி விளக்கு எரியும் போது தானே மாயை இருட்டு அகல்கிறது. வார்த்தைகள் விளக்க இயல முடியாதபோது மௌனம் மட்டுமே கைதூக்கி விடுகிறது. பிரபஞ்சம் வெளியே இல்லவே இல்லை என்னுள்ளே தான் எல்லையற்று காண்கிறது. தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டேன். கனவு மறைந்தது. இது தான் ''விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்'' என்ற சொல்லா?
ரமணர் ஏன் மௌனமாக ஸ்வானுபவத்தில் (சுய அனுபவம்) திளைத்தார் என்று இப்போதல்லவோ புரிகிறது. ஆம். நாம் கண்ணால் கண்ட ஒரு சமீப கால ப்ரம்ம ஞானி. அவர் விளக்கிய விழிப்பும் கனவும் ஒன்றே என்பது இப்போது கண்ணாடியில் பிம்பமாக புரிகிறது. மனம் இரு நிலைகளிலும் ஒன்றே. காண்பது, காண்பவன், காட்சி எல்லாம் ஒண்ணு தான் ஸார் . இதை த்ரிபுடி என்று சமஸ்க்ரிதத்தில் சொல்வோம். மூணும் வெவ்வேறு மாதிரி தோன்றுவது அப்பட்டமான பொய் . மாயையின் வேலை. இல்லாவிட்டால் உடல், மனம், ஐம்புலன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக மாறி மாறி செயல்படுவதை நிஜம் என்று நம்புவோமா? அவை இழுத்த இழுப்புக்கு அசைவோமா? ஆடுவோமா? இப்போது இது புரிந்தபின் ''ஆடுவோம், பள்ளு பாடுவோம்,ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் -- 15 ஆகஸ்ட் சுதந்திரம் இல்லை இது -- ஒருநாள் சுதந்திரம் இல்லை பர்மனண்ட் சுதந்தரம் - என்று பாடுவோம். ப்ரம்ம ஞானி அப்படி தானே சுகமாக இருக்கிறான்.

தக்ஷிணாமூர்த்தே, உனது மௌனத்தின் சக்தி, ஞானமாக, இதை விளக்க நான் என்ன பாக்யம் செய்தேன் .உனக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...