Saturday, June 15, 2019

FATHER'S DAY



 அப்பா தான் அம்மாவுமே !  J K SIVAN 

இது ஒரு  அப்பா தின குட்டிக்கதை. என்னால் இயன்ற சிறு பரிசு 

வெங்கிட்டு  என்கிற வெங்கட்ராகவநாராயணாச்சாரி படிக்காதவன். எப்படியோ ஏதோ வேலை  செய்து குடும்பத்தை காப்பாற்றினான்.  அவன் பெண்ணை கஷ்டப்பட்டு   வளர்த்து படிக்கவைத்தான்.
அவள் படித்த பள்ளிக்கூடத்திலேயே  தோட்ட வேலை அவனுக்கு கிடைத்தது.

தோட்டத்தில் பாத்தி கட்டி நீர் வார்த்துக் கொண்டி
ருந்தபோது  '' யோவ்  வெங்கு  உன்னை பிரின்சிபால் மேடம் கூட்டிட்டு வர சொன்னாங்க. வா''

''அந்த அம்மாள் பார்க்கவே கடுகடு என்றிருப்பாள். எல்லோரிடமும் கத்துவாள்.  கடவுளே கிருஷ்ணா நான் என்ன தப்பு செய்து இன்று மாட்டிக்கொண்டேனோ.''  உடல் மடங்கு வியர்த்து பயத்தோடு அவள் அறையில் கைகட்டி நின்றான்.

"வெங்கு  வாங்க  உள்ளே ''  அழைத்தாள் . ஆண்வர்க்க  அதிகாரக்  குரல் கொண்ட பெண்!  சிறந்த நிர்வாகி அதனால் தானோ?   அவனை  ஏற இறங்க மூக்கு கண்ணாடி வழியாக பார்த்தாள் .  தாடி மீசை கிழிந்த வேஷ்டி. மேலே துண்டு.   அவள்  எதிரே மேசையில் ஒரு பேப்பர்.
''இதைப்படி ''
''வேண்டாங்க, இல்லீங்க''
''படி   நீயே  படி ''
''எனக்கு  இங்கிலிஷ் தெரியாதுங்க. அம்மா  நான் ஏதாச்சும் தப்பு பண்ணிருந்தா மன்னிச்சுடுங்க. இனிமே அப்படி செய்யமாட்டேம்மா. சத்தியமா ''  கண்களில் நீர் வழிய குரல் தழுதழுக்க சொன்னான்.
"என்ன  நீ  ஏதோ இல்லாத கற்பனை பண்ணி அழுவறே .நிறுத்து.   உன் பொண்ணு  கீதா ரொம்ப கெட்டிக்காரி.ரொம்ப உழைத்து படிக்கிற பொண்ணு.  அவள் வகுப்பு ஆசிரியை இதை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் தந்தாள். உன் பொண்ணு எழுதியதை நீயே படின்னு சொன்னேன்.''

''அம்மா  தாயே  என் பொண்ணு எதிர்காலத்தையே உங்க கிட்டே  ஒப்படைச்சிட்டேன் தாயே. அவள் நல்லா படிச்சு முன்னேறினா போதும் மா. எனக்கு சம்பளம் கூட  வாணாம். நிறைய வேலை செய்றேன்''.-- வெங்கு.

இரு ஒரு டீச்சரை கூப்பிட்டு படிச்சு உன் பொண்ணு எழுதியதை உனக்கு தமிழிலே சொல்ல சொல்றேன்
டீச்சர் படித்து தமிழிலே என்ன சொன்னாள் ?

''இன்னிக்கு  அப்பா தினம் பத்தி எழுத சொன்னாங்க டீச்சர்.  நான்  கொடுக்காப்புளி பட்டி. அங்கே பள்ளிக்கூடம்  ஆஸ்பத்திரி இல்லை.  நிறைய பேர்  வைத்தியம் படிப்பு இல்லாமே  வாழ்ந்து  செத்தவங்க.  கடுமையான ஜுரத்திலே மருந்து இல்லாமே   செத்தவங்களில் எங்க அம்மாவும் ஒருத்தி. என்னை கையிலேந்தி கொஞ்சினதா ஞாபகம் கூட இல்லே.  எங்க அப்பா  தான் எனக்கு அம்மா. எனக்கு ஊட்டி, தூக்கி, கதை சொல்லி, வளர்த்தவர். இந்த பெரிய உலகத்திலே எனக்குன்னு இருக்கிற ஒருத்தர்.  எல்லோரும் நான் ''அம்மாவையே முழுங்கியவள்'' னு தான் ஊர்லே சொல்லுவாங்க. அப்படி அப்பா ஒருநாளும் நினைக்கலே. எங்கப்பாவை, பாட்டி தாத்தா, ஊர்க்காரங்க  எல்லாம்  இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க.  முடியாதுன்
னுட்டார்.  அவங்க தொந்தரவு தாங்காமே  ஊரை விட்டு ஒருநாள் என்னை தூக்கிக்கிட்டு வந்துட்டாரு.இந்த ஊருக்கு வந்தூட்டோம்.   எட்டு வருஷமா எங்கெல்லாமோ வேலை செஞ்சு இங்கே வந்தோம் . எல்லா  கிடைக்கறது என் பெண்ணுக்கு கிடைக்கல்லீன்னா அது எனக்கும் வேணாம்  என்று ரொம்ப பக்ஷணங்கள் அவர் சாப்பிடறதில்லே. கிடைச்சதெல்லாம் எனக்கு தான் கொண்டு வந்து கொடுப்பார்.  இப்போ கொஞ்சம் வயசானவுடன் தான் எனக்கு புரியுது அவர் செஞ்சது. எவ்வளவு வசதி கொடுக்க முடியுமோ அதெல்லாம் கஷ்டப்பட்டு எனக்கு கொடுத்தவரு  எங்கப்பா.  இந்த பள்ளிக்கூடம் ரொம்ப பேரும் புகழும் பெற்றது. இங்கே படிச்ச பசங்கள் வாழ்க்கையிலே ரொம்ப முன்னேறி வசதியா வாழறங்கன்னு கேள்விப்பட்டு எப்படியோ என்னை இங்கே சேர்த்தாரு . ஆறு வருஷம் ஆயிடுச்சு.  எப்படியோ ஒரு வேலையும் இங்கேயே கிடைச்சு அப்பப்போ என்னை பார்க்கறார்.

கருணை, தயை, பாசம், தியாகம்   இதெல்லாம் அம்மாவுக்கு மட்டும்  தான் ன்னு சொன்னா  அது எங்கப்பாவிடம் ஜாஸ்தின்னு நான் அனுபவத்தில் சொல்வேன்.ப எங்கப்பா தான் எனக்கு சிறந்த அம்மா
அம்மா தினம் பற்றி எழுத சொன்னா இதை தான் எழுதுவேன். இந்த பள்ளிக்கூடத்தில் கடினமாக மனநிறைவோடு உழைக்கும் தோட்டக்காரர் தான் என் அப்பா வெங்கட்டராகவநாராயணச்சாரி. நமஸ்காரம் அப்பா.''

கீதாவின் ஆங்கில கட்டுரையை டீச்சர் படித்தபோது பூரண அமைதி. வெங்குவின் விக்கி விக்கி அழும் சத்தம் மட்டும் கேட்டது. அந்த பேப்பரை வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டு மார்பின் மேல் அழுத்தி வைத்துக்கொண்டான்.

மேடம் அவனை ஒரு நாற்காலியில் அமர்த்தி குடிக்க  குளிர்ந்த நீர் கொடுத்தாள். ''வெங்கு சார் இந்த வருஷம் எங்கள் பள்ளியில்  ஆண்டு விழாவில்  நீங்க  சிறப்பு விருந்தினர். இந்த பள்ளிக்கூடத்தில்  இதுவரை குழந்தைகள் எழுதிய கட்டுரையில் இது தான் சிறந்தது. பள்ளி முழுதும் உங்கள் பெண்ணுக்கு கடமைப்பட்டிருக்குது. பாராட்டுகிறது. ஒரு பெண்ணுக்கு தந்தையின் மேல் உள்ள நம்பிக்கை, பாசம், அன்பு எல்லாமே சில வார்த்தைகளில் முழுமையாக எழுதப்பட்டுள்ளது. எனவே  சிறந்த பெற்றோர் விருது உங்களுக்கு தரப்போகிறோம். அப்பாவும் அம்மாவாகலாம் என்று நிரூபித்தவர் நீங்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...