யார் இந்த பெண்மணி ''வள்ளிநாயகி ராமகிருஷ்ணன்''? எந்தெந்த தேதியில் நான் என்னென்ன எழுதினேன் என்று நேரம் செலவழித்து அந்தந்த தேதியில் இதற்கு முன்னால் நான் எழுதிய கட்டுரைகள் கதைகள் ஏதாவது ஒன்றை தினமும் முகநூலில் போடுகிறாரே . வணக்கம் அம்மா. நன்றி ரொம்ப. மூன்று வருஷங்களுக்கு முன்பு இந்த தேதியஹில் 9.6.2016 அன்று எழுதியது இது என்று போட்டிருக்கிறாரே . ஒரு ஸாதாரண சின்ன எழுத்தாளனுக்கு இது மனதுக்கு சந்தோஷமாக இருக்காதா?
தியாகம்..... J.K. SIVAN 16.6.2016
காலண்டரில் அன்றைய சீட்டை கிழிக்கும்போது தான் தெரிந்தது. சிரிப்பும் வந்தது. அட இன்னும் ஒன்றா?? கிருஷ்ணா தேங்க்ஸ் டா.
சிவ தாத்தாவுக்கு அன்று பிறந்தநாள். அவரைப் பொறுத்தவரையில் அது வழக்கமான ''இன்னொரு' நாள். அவ்வளவே. கூட இருந்தோர் சும்மா இருப்பார்களா? அவரை புது வேஷ்டி சட்டை அணிய வைத்து போட்டோ எடுத்து அட்டகாசம். வழக்கத்தை விட அன்று நிறைய தொலை பேசிகள். யாரோ செய்தியை வெளியே கசியவிட, எங்கிருந்தெல்லாமோ நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகள். நன்றாகத்தான் இருக்கிறது. அவரும் நான் இன்றுவரை உழைக்கிறேன். இனியும் உழைக்க கிருஷ்ணன் அருளட்டும் என்றார்..
''நல்ல மனசினாலே தான் மார்க்க பந்து. நல்ல இதயம் நிறைய நட்பை பெறுகிறது. (எனக்கு நிறைய நண்பர்கள் சேர்ந்து விட்டார்களே. ஒருவேளை நான் நல்லவனோ?) நல்ல குணம் எண்ணற்ற இதயங்களை கவர்கிறது என்று சொல்கிறார்களே. மகிழ்ச்சியை அள்ளி வாரி வீசுகிறது! எனது சின்ன 'லெவல்' லேயே இதை நான் அனுபவிக்கிறேனே.
அன்போடு, நட்போடு ஒருவனைத் தொடும்போது அவனது துன்பம் பாதிக்கு மேல் விலகுகிறது . உண்மையான அன்புக்கு அத்தனை பவர். மந்திரக் கோல் மாதிரி. கள்ளங்கபடற்ற ஒரு சிரிப்பு போதுமே. கனிவான பார்வை ஒன்றே போதுமே. பொட்டுக் கூடை பேச்சு அதுவே பேசுமே. ''உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்'' என்று அதனால் தான் வள்ளலார் பாடினாரோ?
ஒரு குட்டிக்கதை சொல்லட்டுமா?
தோட்டத்தில் நிறைய மரங்கள். ஒரு மரத்தில் தேனீ ஒன்று சுறு சுறுப்பாக தேனை சேகரித்து வந்து கூட்டில் நிரப்பிக் கொ ண்டிருந்ததை பார்த்து விட்டு ஒரு பறவை கேட்டது.
''நீ ஒரு முட்டாளா? ஓடி ஓடி இவ்வளவு தேனை சேகரித்து வைக்கிறாயே. எல்லாம் அந்த மனிதன் வந்து ஒருநாள் கொண்டு போகப் போகிறானே. அதை மறந்து விட்டாயா? தேனைக் கோட்டை விட்டால் உனக்கு அப்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கா தா?''
சிரித்துக்கொண்டே தேனீ பதில் சொன்னது:
''இல்லை நண்பா. என்றைக்கும் மனிதனால் தேனை உண்டாக்க முடியாது. என்னிடமிருந்து எடுத்துக் கொண்டு போக வேண்டுமானால் முடியும். தேனை தயாரிக்க எனக்கு மட்டும் தான் தெரியும்.' இதே எனக்கு பெருமை அல்லவா?''
இதற்கு வேதங்கள் உபநிஷங்களில் எல்லாம் நீள நீளமாக என்ன வெல்லாமோ சொன்னாலும் ஒரே வார்த்தை ''இது தான் தியாகம்''

''நல்லது தானே.''
''சந்தோஷம். தான். அதால் பொறுப்பு அதிகமாகிறதே'' என்றார் தாத்தா.
மார்க்க பந்து நிறைய பழம் வாங்கி வந்தவர் ''எப்படி சார் ?'' என்று கேட்டார்.
'வயது ஏற ஏற ஞானம் முற்றும் என்பார்கள். ஞானம் எங்கே சார் கிடைக்கும் சொல்லுங்களேன். எனக்கு நிறைய தேவையாக இருக்கிறதே'' என்று சிரித்தார் தாத்தா.
பிறகு சிரித்துக்கொண்டே சொன்னார்:
''ஒன்றுமே வேண்டாம் சாதாரணமாகவே ஒருவரோடு ஒருவர் (ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் அல்ல....அது டேஞ்சரானது-- ஆபத்து அங்கே தான் உருவாச்சு) அடிக்கடி மனம் விட்டு பேசினாலே போதும். உலகத்தில் பாதி துன்பம் தீர்ந்து விடும்.
உன்னை விட்டு ஒருவர் விலகுகிறார் என்றால் வருந்தாதே. அவர் வழியில் அவர் போகட்டும். நீ அவர் பாதையில் இல்லை என்று தெளிவாகிறது. துன்பமில்லையே இதால்.
மக்கள் நட்பு ''ப்ளூ டூத்'' என்கிறார்களே அது போல். அருகில் இருந்தால் ஒருவரோடு ஒருவர் இணையலாம். அப்படியே எல்லாம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு விஷயங்கள் தாவி விடும். எட்டிப் போனால் தான் ''யாரு? எந்த சுப்ரமணியன்?'
துன்பம் வருவதால் ரெண்டு நன்மை. ஒன்று எப்படி அதிலிருந்து தப்புவது என்று அறிய வழி கிடைக்கிறது. மற்றொன்று இதுபோல் இனி வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்ற புத்திமதி. நம் மீதுள்ள நம்பிக்கை மட்டுமே போதாது. கிருஷ்ணன் ஞாபகமும் வர வேண்டும்.
கொதிக்கும், கொப்புளிக்கும் நீரில் உருவம் தெரியாது. தெளிந்த நீர் தான் நமது ''அழகிய முகத்தை'' அப்படியே காட்டும். இந்த உதாரணம் எதை சொல்கிறது?
கோபத்தால் கொதிக்கும் உள்ளம் உண்மையை அறியாது. ஏற்காது. அது போனவழியே தான் போகும். அமைதியான உள்ளம் தான் சரியான வழி காட்டும். ஏதோ எதிலோ வெற்றி கிடைத்தவுடன் தலை கால் புரியவில்லை. எது மாதிரி? அழகிய மலர் போல். விரைவில் வாடும் அழியும். தோல்வி அம்மா மாதிரி . காயத்தை ஆற்றும் . இதமாக எங்கே தவறு, எதால், எவரால், ஏன் நடந்தது எப்படி என்றெல்லாம் விளக்கும். மறுபடி நேராது காக்கும்!
''நட்பு எப்படி சார் பெருகுகிறது?''

No comments:
Post a Comment