Saturday, November 12, 2022

MY ANCESTORS

 150 வருஷத்துக்கு முந்திய விஷயம்

#நங்கநல்லூர்_j_k_SIVAN 

எனது தாத்தா ப்ரம்ம ஸ்ரீ  வசிஷ்ட பாரதிகளுக்கு  சீதாராம பாகவதர்  சகோதரனாக அமைந்தது ஒரு பேரதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.  பல இடங்களில் உபன்யாசங்களுக்கு இடையே  பாகவதர்  சங்கீதம் எதிரொலித்தது. 

திரிசிரபுரம் மஹா வித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை (உ.வே.சாமிநாதையர் குரு) யின்  இன்னொரு சிஷ்யர்  சாமிநாத கவிராயர்  தஞ்சாவூரில் கம்ப ராமாயண பிரசங்கம் நடத்தினார். அக்காலத்தில் ராமாயண மஹா பாரத பாகவத பிரசங்கங்கள் வருஷக்கணக்காக  நடக்கும். இப்போது போல் ஒரு நாள் ரெண்டு நாள் அல்லது ரெண்டு மூன்று மணி நேர   உபன்யாசங்கள் இல்லை. கேட்பவர்களை பல யுகங்கள் பின்னால்  சென்று நேரில்   அக்காலத்திலேயே வாழ, அனுபவிக்க,  வைத்தவை. கவிராயர்

உபன்யாசத்தின் இடையில் ராமாயண கீர்த்தனைக
ளை  சீதாராம பாகவதர் பாடுவார் என்பதால்  தாத்தாவும் அவரோடு சென்று கவனிப்பார். 

ஒருநாள்  சாமிநாத கவிராயர்  ஏட்டுக்கவியிலிருந்து 100 பாடல்கள் கம்பராமாயண பால காண்டத்திலிருந்தும் , அயோத்யா காண்டத்திலிருந்தும் எழுதிக் கொண்டு வந்து பாகவதரிடம் தந்தார்.  சீதாராம பாகவதர் அதன் அர்த்தத்தை தாத்தாவுக்கு விளக்கி சொன்னார். மருதூர்  யமக அந்தாதி என்ற அச்சிட்ட புத்தகமும்  பாகவதர் கொடுத்தார். அதில் இருந்த 100 பாடல்களும்  தாத்தா வுக்கு   பாடமாகிவிட்டது.

ஏதோ காரணமாக  சாமிநாத கவிராயரால்  ஒரு வருஷம் ஆகியும் கம்ப ராமாயண பிரசங்கம் முடிக்க முடியாமல் போய்விட்டது. எப்போதும்  இந்த பிரசங்கம்  தஞ்சாவூர்  வெள்ளைப்பிள்ளையார்  கோவில் சந்நிதியில் தினமும் மாலை 6 முதல் 7 வரை நடக்கும். பல பிரசங்கிகள், உபன்யாசகர்கள் கூடும் இடம்.   பக்தர்கள் எல்லோரும் வந்து  கேட்பார்கள். 
ஒருநாள் சீதாராம பாகவதர்  பிரசங்கத்தில் பாதியில் நிறுத்துக் கொண்டு  '' இப்போது என் இளைய சகோத ரன் வசிஷ்டன் யமக அந்தாதியிலிருத்து ஓரிரு பாடல்கள்  சொல்லுவான்''என்று அறிவித்தார். 

''வணங்கரியார் தமக்கன்பற்றவரன்று  வன்றொ ண்
டர்க்கா 
வணங்கரியார்  முன்பு காட்டவலார் கையும் வாயும்
செய்ய 
வணங்கரியார்  அயன் காண்  பரியார் மருதூரரைங்கை

வணங்கரியாரந்தையா ரெந்தயா  ரெம்மனத்தவரே''

இதை விளக்கும்போது தாத்தா என்ன சொன்னார் என்று அவர் வாயாலேயே கேளுங்கள்: 

''இந்த யமகத்தில் சொற்களை பிரிப்பதும் விளக்கு வதும் கற்றவர்களாலே தான் முடியும். 10 வயது சிறுவன் நான் எவ்வாறு விளக்க இயலும்?  இதற்கு உரையை  யாழ்ப்பாணத்தை சேர்ந்த நல்லூர் சைவ சிரோமணி ஆறுமுக நாவலர் அற்புதமான எழுதி இருந்ததை படித்திருந்தேன். அதையே  என் பிரசாங்கமாக நிகழ்த்தினேன்.
''சிவபெருமான்  வன்றொண்டர் சுந்தரருக்காக  ஆவணம் காவணம்  கரியார் -  சபையோர் முன்பு காட்டிடவும் வழக்கில் வெல்லவும்  வல்லார்  என்பதை தமையனார் மூலம் அறிந்திருந்ததால் அதை விளக்கி, சுந்தரர் பாடிய  ''பித்தா  பிறை சூடி'' என்ற தேவாரமும் பாடி முடித்தேன். எனக்கு ஒரு எண்ணமும் தோன்றியது. அதையும் சொன்னேன். 
''வணங்கரியார்  இடத்தில் சிவன் அன்பிலாதவர்''  என்று  வருகிறதே. ''அன்று''என்ற வார்த்தை அந்த காலம் என்று பொருள்படும்.  ஆகவே  வணங்கரியாரிடத்து சிவபெருமான் அன்பு அற்றவர்  அல்லர்  என்று சேர்த்து வன்றொண்டர்க்கு என்று  பிரித்துக் காட்டி. சிவ பெரு
மான்  அறிந்தவரிடத்தன்றி  அறியாதவரிட த்திலும்  அருள் புரிபவர் என்று,  தம்மை அறியாதவரான 
வன்றொண்டர் சுந்தரரையும்  வலியச் சென்று
தடுத்தாட்கொண்டவர்  ஆயிற்றே என்று விளக்கினேன். 
முடிக்கும்போது  வள்ளலார் இதே கருத்தைப் பாடிய 

''கல்லார்க்கும் கற்றவர்க்கும், காணார்க்கும்  கண்டவர்க்கும், வல்லார் க்கும், மாட்டார்க்கும் அருள்புரிபவர்  எம் நடராஜன்''என்றேன். 

அன்று பிரசங்கத்தின்  போது  கூடியிருந்த  பிரமுகர் களில்  சிலர்: 
மீனாட்சி சுந்தரம்பிள்ளை மாணாக்கர், கும்பகோணம் காலேஜ் இலக்கண வாத்யார் அய்யா சாமி பிள்ளை.  

இன்னொரு மாணாக்கரான கம்பராமாயண வித்வான்  சாமிநாத கவிராயர்
கும்பகோணம் காலேஜ் இன்னொரு தமிழ் பண்டிதர்  ராமய்யா வஸ்தாத். 
 சரபோஜி ராஜா சமூக வித்வான் பஞ்ச லக்ஷணம்  செங்கமல வாத்யார் குமாரர் இலக்கணம்  மாணிக்க வாத்யார்.  
லாவணி பாடும் வித்வான்கள் கோவிந்தசாமி வாத்யார், நாராயணசாமி வாத்யார், 
வடக்கு வாசல் பள்ளிக்கூட வாத்யார்,கோதண்ட ராம வாத்யார், 
பூமாலை ராவுத்தர் கோவில் தெரு சமஸ்க்ரித பண்டிதர் அப்பாசாமி சாஸ்திரிகள் போன்றவர்கள்.

இளங்கன்று பயமறியாது என்று இத்தனை வித்வான்கள் எதிரில் என்   பிரசங்கத்தை நிகழ்த்தி விட்டேன். என்னை அனைத்து வாழ்த்தினார்கள்.  ஆறுமுக நாவலர் உரைக்கு மேல் இவன் விளக்கம் சொன்னானே.
இந்த பையன் யார்? என்று கேட்டார்கள். 
''சீதாராம பாகவதர் தம்பி'''
'ஓஹோ,   அது தான் பரம்பரை வாசனை தமிழ் மணம்  வீசுகிறது. இவனை நன்றாக படிக்க வையுங்கள். நமக்கு தோன்றாததை  இந்த சிறுவன்  எப்படி சொல்ல முடிந்தது
''எல்லாம் சிவன் அருள். அவன் அருள்  உண்டேல் பக்தி உண்டாகும். வெள்ளைப்பிள்ளையார்  அருள் கிட்டட்டும் ''என்று வாழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...