ப்ரம்ம ஞானி ரமண மகரிஷி- #நங்கநல்லூர்_J_K_SIVAN
மஹரிஷிகள், முனிவர்கள், ஞானிகள் ஆகியோர் தூங்கா விளக்குகள், அஞ்ஞானம் போக்கும் ஞான தீபங்கள், கலங்கரை விளக்குகள். வாழ்க்கையில் வழிகாட்டிகள். ரமண மஹரிஷி சமீபத்தில் வாழ்ந்த அப்படிப்பட்ட ஒரு ப்ரம்ம ஞானி. அவரைப் பற்றி சில அற்புத விஷயங்கள் படித்ததை பகிர்கிறேன்.
ஒருநாள் பகவான் மெதுவாக ஸ்கந்தாஸ்ரமத்திலிருந்து புறப்பட்டார். எச்சி பாட்டியின் பெண் செல்லம்மா ஒரு துண்டு பேப்பரை கையில் வைத்துக் கொண்டிருந்தவள் ''யோகா வாசிஷ்ட''த்திலிருந்து ஒரு ஸ்லோகத்தை பாடிக்கொண்டிருந்தாள் . “ நல்லோர் இயக்கத்தால் முறையில்லாதது சரியாகும், ஆபத்து நலம் தரும் அதிர்ஷ்டமாகும் அசுபம் சுபமாகும் . கங்கா ஸ்னானம் வேண்டாம், யாகம் ஹோமம் வேண்டாம். எல்லா புண்யங்களும் நல்லோர் சத் சங்கத்தால் அடையலாம். அதுவே பிறப்பு இறப்பும் எனும் சம்சார சாகரத்தைக் கடக்க உதவும்'' என்ற அர்த்தம்.
யாரோ ஒரு பக்தர் மகரிஷியை ஒரு கேள்வி கேட்டார் :
''சுவாமி, என் வேலையில் என்னால் எங்கும் சென்று ஞானிகள் மகான்களை தரிசிக்க அவர்களோடு இருக்க , பழக, இயலாதே. சத்ஸங்கம் இல்லாமல் மோக்ஷம் பெற முடியாதா?''
''சத்'' என்றால் ‘aham pratyaya saram’ அஹம் ப்ரத்யாய சரம். ஆத்மாக்களின் ஆத்மா பரமாத்மா. ஞானிகள் அப்படிப்பட்டவர்கள். பகவான் எல்லோரிலும் இருக்கி றான். ஆத்மா இல்லாதவன் உண்டா? யாருமே சத்சங்கம் இல்லாமல் இல்லை. ஒவ்வொருவனும் ஆத்மா, ஆத்மா தான் சிறந்த சத் சங்கம். அவன் அதை அறிவதில்லை என்பது துரதிருஷ்டம். ஆத்மாவை மறந்து உடம்பு தான் ஆத்மா என்று தவறாக நினைக் கிறான். இது அறியாமையால் விளைவது. அந்த அஞ்ஞானத்தைப் போக்கினால் ஞானம் பெறுவான். மஹான்களோடும் ஞானிகளோடும் பழகும்போது அறியாமை, அஞ்ஞானம் எல்லாம் விலகும். அப்புறம் அவன் தானே தனது ஆத்மாவை உணர முடியும்.''
தானே ஆத்மா என்று உணரும் வரை துன்பம் துயரம் அவனை தொடர்கிறது.
எவ்வளவு பெரிய பலவானாக, பீமனாக இருந்தாலும், அவன் உட்கார்ந்திருக்கும் நாற்காலியை அவனால் தூக்க முடியுமா?
நமது மனம் நம் மீது சுமத்தும் மாயையே அகற்ற முடியாமல் தவிக்கிறோம். நாம் யார் என்ற உண்மையை மாயை மறைக்கிறது. மனம் மற்ற எங்கோ உள்ள மகான்களை, ஞானிகளை உணர்கிறது தனது ஆத்மா ஒரு ஞானம் தரும் ஆதாரம் என்பதை உணர மறுக்கிறது. இது தான் விந்தை.
ரமண மஹரிஷியின் உபதேச மஞ்சரி ஒரு சிறு அற்புதமான நூல். அதை முடிந்தபோது கொஞ்சம் கொஞ்சம் பருகலாம்.
இப்போது சில கேள்வி பதில்களை அதிலிருந்து தருகிறேன்
ஒரு உண்மையான குருவின் லக்ஷணம் என்ன?ஆத்ம விசாரத்தில் விடாமல் தியானம், எல்லோரையும் பேதமில்லாமல் சமமாக பார்ப்பது, பயமே துளியுமில் லாத திட மனோ தைர்யம் கொண்டவராக இருப்பவர் தான் சரியான குரு.
ஒரு உதாரண சிஷ்யன், மாணாக்கன் எப்படி இருக்க வேண்டும்?
எப்படி துயரத்தை அகற்றி, இன்பத்தை பெறுவது என்ற தாகம், உலக சுகம் தரும் வஸ்துக் களின் ஈர்ப்பிலி ருந்து விடுபடும் திட சித்தம், நோக்கம் கொண்டவன் தான் அருமையான சிஷ்யன்.
குருவின் உபதேசம் எப்படிபட்டதாக இருக்க வேண்டும்?குருவும் சிஷ்யனும் அருகில் அமர்ந்துகொண்டு அவர் கற்பிப்பதும் அவன் கற்பதும் தான் உபதேசம். குரு சத் சித் ஆனந்த ஸ்வரூபம். சிஷ்யனின் மனதிலிருந்து புலன் உணர்வுகளை அகற்றி , அவனது உண்மை சத்ய ஆத்ம ஸ்வரூபத்தை அவன் உணரச் செய்பவர் தான் குரு. ஆத்மா எங்கேயோ தூரத்தில் இருப்பதாக நினைக்காதே. இதோ பார் உன்னிடமே உள்ளது ஆத்மா என்று காட்டக் கூடியவர். நீ தானடா அந்த ப்ரம்மம் என்று அவனை உணர வைப்பவர்.
ஒவ்வொருவரும் தனக்கு தானே குரு என்ற எண்ணம், நம்பிக்கை, தெளிவு வருவது ரொம்ப கஷ்டம். எல்லோரும் ரமணராக முடியாது.
ஆத்மா இருப்பதே அறியாதபோது அது எப்படி மற்றவர்களுக்கு சாத்தியம். ஆகவே தான் நமக்கு குரு ஒருவர் அவசியமாகிறார்.
குருவின் பூர்ண ஆசி கிட்டியதை எப்படி அறியமுடியும்?ஐயா, அது வார்த்தைகளுக்கும் எண்ணத்திற்கும் அப்பாற்பட்டதாயிற்றே.
அப்படியென்றால் எப்படி சிஷ்யன் குருவின் அருளால் ஆத்மாவை அறிந்து கொண்டதாக சொல்ல முடியும்.
ஒரு யானை சிங்கத்தை ஆழ்ந்த தூக்கத்தில் கனவில் கண்டால் கூட எப்படி துள்ளி அடித்து பிடித்துக் கொண் டு எழுந்திருக்குமோ அப்படி சிஷ்யன் குரு ஆசி பெற்றா ல் தானாகவே அஞ்ஞானத்திலிருந்து விழித்துக் கொள்வானே .
உண்மையான குரு ஸர்வேஸ்வரன் போல என்று சொல்வது எப்படி?
ஒரு ஜீவன் ஆத்ம ஞானம் அடையவேண்டும், ஈஸ்வரா ம்சம் பெறவேண்டும், என்று விரும்பி முயற்சித்து பக்தியோடு குருவை அடைவதற்கு தேடினால், அவனுள்ளே சாக்ஷி பூதமாக விளங்கும் ஆத்மநாதன் தக்க நேரத்தில், தானே சச்சிதானந்த மகிமையால், பேரும் உருவமும் கொண்ட ஒரு மனிதராக, குருவாக, அவனை வந்தடைவார். ஆகவே தான் குருவும் பகவானும் ஒன்று என்று சொல்வது.
TO CONTINUE
THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
Thursday, November 17, 2022
BAGAVAN RAMANA MAHARSHI
Subscribe to:
Post Comments (Atom)
About Me - YOUR FRIEND
GHANTASALA SONG
கண்டசாலா விருந்து ஒன்று. #நங்கநல்லூர்_J_K_SIVAN ''தண்ணொளி வெண்ணிலவோ'' என்ற அருமையான கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...
-
அங்க சாஸ்திரம் - சாமுத்திரிகா லக்ஷணம் J.K. SIVAN நமது உடல் ஒரு அற்புத அதிசய சுரங்...
-
நீங்கள் என்ன கோத்ரம்? நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தையை சரியாக புரிந்து கொள்வதில்லை. சடங்குகளில், ஆல...
No comments:
Post a Comment