கௌட ஸரஸ்வத் பிராமணர்கள். - #நங்கநல்லூர்_J_K_SIVAN
நான் உலகம் சுற்றும் கப்பல் கம்பெனியில் பணி புரிந்த காலத்திலிருந்து என்னுடைய நண்பர்களில் ஒருவர் கப்பல் தலைவன். கேப்டன் ராஜ்குமார். அரை நூற்றாண்டுக்கு மேலான தொடர்பு. இன்றும் அவ்வப்போது பேசுபவர். அவரோடு பேசும்போது ஒரு நாள் ''நாங்கள் ஸரஸ்வத் ப்ராமண வகுப்பு'' என்று சொன்னது ஞாபகம் வருகிறது. இன்று ஸரஸ்வதி நதியைப் பற்றி எழுதும்போது ஸரஸ்வத் பிராமணர்களை பற்றி கொஞ்சம் சொல்ல தோன்றியது.
கொங்கணி மொழி தாய் மொழியாக பேசுபவர்கள். இந்தியாவின் தென் மேற்கு பகுதியில் ஜாஸ்தி.
கோவா பக்கம் அதிகம். கௌடர்கள் கொங்கணிகளாக மாறியதும் உண்டு. ஸ்கந்த புராணத்தில் கௌடர்கள் வருகிறார்கள்.
பஞ்ச திராவிடப் பிராமணர்கள் என்று ஐந்து வகை உண்டு. இவர்கள் விந்திய மலைக்கு தெற்கே வாழ்ந்தவர்கள். 12-ஆம் நூற்றாண்டில் காஷ்மீரத்தில் கல்ஹணர் எழுதிய ராஜதரங்கிணி பஞ்ச திராவிட பிராமணர்கள் என்பவர்கள் கர்நாடகம், , ஆந்திரம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகளில் வாழும் பிராமணர்கள் என்கிறது. ஏனோ கௌட ஸரஸ்வத் பிராமணர்களை பற்றி கல்ஹணர் சொல்லாமல் விட்டுவிட்டார். கௌட ஸரஸ்வத் பிராமணர்கள் வியாபாரத்திலும் முக்கியமாக கடல் வாணிபத்தில் ஈடுபட்டவர்கள் என்று தெரிகிறது.
கொங்கிணி மொழி பேசும் இவர்கள் தென் கன்னட கடற்கரை பிரதேசத்தில் அதிகம் வாழ்பவர்கள். கோவாவிலிருந்து கேரளம் வரை வியாபித்துள்ள பிரதேசத்தில் அதிகம் இவர்களை காணலாம். விவசாயிகளாக அரிசி ஏற்றுமதி செய்தவர்கள். கடம்பா செப்பேடுகளில் கௌட ஸரஸ்வத பிராம்மணர்கள் சிறந்த கொங்கண பிரதேச வியாபாரிகளாக காட்டுகிறது.
சிந்து கங்கை சமவெளி பிரதேசத்தில் குடியேறிய ரிக்வேத கால சிறந்த பிராமணர்கள், க்ஷத்ரியர்களில், கௌட ஸரஸ்வத் பிராமணர்கள் முக்கியமானவர்கள் என்று தெரிகிறது. ஸரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்தவர்கள். பரசுராமரால் கொண்டு வரப்பட்டவர்கள். கோவாவுக்கு அப்போது கோமந்தகம் என்று பெயர்.
க்ஷத்ரியர்களில் முக்கியமானவர்கள் சந்திர சேனிய காயஸ்த பிரபுக்கள் என்பவர்கள். மாலிக்காபூர் மற்றும் போர்த்துகீசியரின் அக்ரமங்களை பொறுக்க முடியாமல் பலர் கோவாவிலிருந்து உத்தர கன்னடம், மகாராஷ்டிரம், உடுப்பி, தக்ஷிண கன்னடம் கேரளா தெற்கு கொங்கண பகுதிகளுக்கு பரவினர்.
கௌட ஸரஸ்வத பிராமணர்கள் சிவன், விஷ்ணு, சக்தி,கணேசன் சூரியனை வழிபடுபவர்கள். பஞ்சாயதன பூஜை யை அறிமுகப்படுத்தியவர்கள். சைவ வழிபாட்டு மடங்கள்: ஸ்ரீ காவலி மடம், ஸ்ரீ சித்ரபுர் மடம். அவர்களில் வைஷ்ணவர் களுக்கு ஸ்ரீ கோகர்ண மடம் ஸ்ரீ காசி மடம் . மத்வாச்சார்யரின் திராவிட வேதாந்தம், ஆதி சங்கரரின் அத்வைத வேதாந்தம் இரண்டையும் பின்பற்றுபவர்கள். மஹாராஷ்ட்ரர்கள் பேசுவது ஒருமாதிரி கொங்கிணி , கர்நாடகத்திலும் கோவாவில் பேசுவதும் கொஞ்சம் திரிந்து போன கொங்கிணி
No comments:
Post a Comment