Monday, November 7, 2022

PESUM DEIVAM

 பேசும் தெய்வம் -   நங்கநல்லூர்  J K  SIVAN


மஹா பெரியவாளிடம் 100 கேள்விகள்.

16.  ''இன்னிக்கு என்னடா கேக்கப்போறே?''

''என்ன கேக்கறதுன்னு தெரியலே பெரியவா. நீங்க  எது சொன்னாலும் அது எனக்கு திருப்தி'

''கையிலே என்ன அது?''

''ஸ்ரீ மதுரை மீனாக்ஷி அம்மன்  படம் ஒண்ணு  அபூர்வமா யாரோ  வரைஞ்சது. அதிலே பெரியவா  மீனாட்சி அம்மனை நமஸ்கரிக்கிற  மாதிரி இருந்ததுன்னு  எடுத்து வச்சிண்டேன். ''

''ஓஹோ. அப்படின்னா  அம்பாள் உத்தரவு கொடுத்துட்டான்னு அர்த்தம். மதுரை அம்பாள் பத்தி சொல்றேன்.கேட்டுக்கோ''

''அஹோ  பாக்யம்  பெரியவா''

'' மீதி எல்லா  க்ஷேத்ரங்களிலியும்  ஈசுவரன் பேரிலேயே கோவிலைச் சொல்லி, அதில் இன்ன அம்பாள் ஸந்நிதி இருக்கிறது ன்னு தான் சொல்றது வழக்கம்.  ரொம்பவும் சக்தியோடு,  ஜீவ களையோடு,  பாலாம்பாள், கற்பகாம்பாள்,  மங்க
ளாம்பாள்,   முதலிய தேவி மூர்த்தங்கள் இருக்கிற கோயில்களைக் கூட வைத்ய நாதஸ்வாமி கோயில் (அல்லது முத்துக்குமார  ஸ்வாமி கோயில்) கபாலீஸ்வரர் கோயில், கும்பேஸ்வர  ஸ்வாமி கோயில் அப்படின்னு  தான் என்று தான் சொல்கிறோம்.

ஆனால் மதுரையில் மட்டும் ஸுந்தரேஸ்வரர் கோயில் என்று  நாம்  சொல்றதில்லை.   மதுரை என்றாலே  மீனாக்ஷியம்மன்
கோயில் என்றுதான் சொல்கிறோம். அங்கேதான் ஸுந்தரேச்வரர் அறுபத்தி நான்கு  திருவிளையாடல்கள் பண்ணி யிருக் கிறார்.  ஸுந்தரேஸ்வரரை ஸ்தோத்திரம் பண்ணி, விபூதி மகிமையாலேயே திரு ஞான  சம்பந்தர் பாண்டிய ராஜாவின் வெப்பு நோயைத் தீர்த்துவைச்சார்.  அதுனாலே   அதுவரை ஜைனனாக இருந்த பாண்டிய ராஜாவை சைவனாக்கினார்.

இப்படி நம் தேசத்தில் மறுபடி வைதிக மதம் நன்றாக ஸ்தாபிதமாவதற்கே ஸுந்தரேஸ்வரர்தான்  காரணமா  இருந்தி ருக்கிறார். ஆனாலும் அவர் பெருமையை எல்லாம் ஒன்றுமில்லை என்று பண்ணிக் கொண்டு அம்பாள் மீனாக்ஷியே அங்கே முக்கியமாக யிருக்கிறாள். மீனாக்ஷியம்மன் கோயில் என்றே சொல்கிறோம்.  சைவாகமங் களின்படி ஈச்வரனின் ஆலயமாகவே உள்ள மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் என்று பெயர் ஏற்பட்டிருப்பது விசேஷம்.  

அம்பாள் ரூபங்களில் பிரஸித்தமானது  காஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி , காசி விசாலாக்ஷி ஸ்வரூபம்..

லோகத்துக்கெல்லாம் பிரஸித்தமாக, வர ப்ரஸாதினியாக இருக்கப்பட்டவள் மீனாம்பிகை. காருண்யத்தோடு ஆதிபத்ய சக்தியும் சேர்ந்திருக்கிறவள் மீனாக்ஷி. ஆறு மாஸம் தன்னிடம் செங்கோல், ஆறு மாஸம் ஸுந்தரேச்வரரிடம் செங்கோல் என்றிப்படி லோக முழுவதற்கும் ராஜ்யபாரம் பண்ணுகிறவள். நித்தியப்படி பூஜை, நைவேத்யம் முதலியவற்றைப் பார்த்தாலோ, ஈஸ்வரனுக்கு அவள் ஸரி ஸமானம் மட்டுமில்லை, அவனைவிட ஒருபடி மேலே என்று தோன்றுகிறது. பூஜை, நைவேத்யம் எல்லாம் முதலில் அவளுக்குப் பண்ணிவிட்டு அப்புறம்தான் ஈஸ்வரனுக்குப் பண்ணுவது என்று மதுரையில் மட்டும் ஒரு  மாறுதலான  வழக்கம்.''

இப்போ இது போறும்  அப்புறமா வா''

எதிரே  தத்ரூபமாக உள்ள மஹா பெரியவா படத்தை தரிசித்து விட்டு விடை பெற்றேன். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...