பேசும் தெய்வம்
மஹா பெரியவாளிடம் 100 கேள்விகள்.
மூச்சை கூட வேஸ்ட் பண்ணாதேங்கோ.
19. பெரியவாளுக்கு எதையுமே சரியான வழியில் உபயோகப்படுத்தாமல் விரயம் பண்ணினா, வேஸ்ட் WASTE பண்ணினா பிடிக்காதுன்னு சொல்றேளே அடிக்கடி ஏன்?
''நான் சொல்லிண்டு தான் இருக்கேன். சரி இந்த மடாதிபதி சொல்றாரேன்னு ''சரி பெரியவா நாங்க இனிமே எதையும் வேஸ்ட் பண்ணமாட்டோம்னு முகத்துக்கு நேரே சொல்லிட்டு போறா. ஆனால் கேர் CARE பண்றதில்லே. அதுக்கு தான் அடிக்கடி சொல்லிண்டே இருக்கேன்.
''வெறுமனே சொன்னால் போதாது. சந்திரமௌலீஸ்வரர் ஸாக்ஷியாக காபி, சினிமா, பட்டு மூன்றையும் விட்டுவிடுவதாக சத்தியம் பண்ணிக் கொடுங்கோ'' என்று எல்லோர் கிட்டேயும் கேட்கிறேன்.
''ஏன் பெரியவா, கல்யாணம்னா காசு ஜாஸ்தி செலவு தானே ஆகும் ?''
''எதுக்குன்னு கேக்கறேன்?
எத்தனை ஏழைக் குடும்பமானாலும், சோற்றுச் செலவை விட ஜாஸ்தியாக இவையே அல்லவா இழுக்கிறது. மேலும், இப்படி ஒரு வழக்கத்துக்கு அடிமைப்பட்டிருப்பது தப்பு என்பதால் தான்.
கல்யாணத்தில் நாம் பண்ணுகிற ஆடம்பரங்களையெல்லாம் "வேஸ்ட்"களையெல்லாம் குறைக்கவேண்டும்.
பாட்டுக் கச்சேரி, டான்ஸ் கச்சேரி, நாயனம், பாண்டு ஊர்வலம் என்று வேண்டாத விஷயங்களுக்கு வாரி விடுவதைக் குறைக்க வேண்டும்.
வயல் நிறையக் களை மண்டி இருப்பதைப் பார்த்து நன்றாக விளைந்திருப்பதாக ஸந்தோஷப்படுவது போலத்தான், தனக்காகச் செலவழித்து அதில் ஏற்படும் சௌகர்யங்களைப் பார்த்து ஸந்தோஷிப்பது.
களை பிடுங்குவதில் எத்தனை கவனமாய் இருக்கிறோமோ அத்தனை கவனமாக அத்தியாவசியத்துக்கு மேலான செலவுகளை பிடுங்கிப் போட வேண்டும்.

காற்றை உள்ளே வாங்கிக் கொண்டு வெளியே விடுவது வரவும் செலவும் தான்.
அதில் கூடக் கணக்கு வேண்டுமென்று தான் ப்ராணாயாமம், மந்த்ர ஜபம், சோஹம் தியானமென்று பல யோகங்களை வைத்திருப்பது.
அதில் கூடக் கணக்கு வேண்டுமென்று தான் ப்ராணாயாமம், மந்த்ர ஜபம், சோஹம் தியானமென்று பல யோகங்களை வைத்திருப்பது.
புசுக், புசுக்கென்று வேகமாகச் சுவாசித்தால் ஆயுஸும் குறையும் ஆத்மா சுத்தப்பட்டு சாந்தநிலைக்கு வருவதற்கான நாடி சமனமும் ஏற்படாது. அதனால்தான் மூச்சுக்கூட கணக்காக விடனும் என்று வைத்திருக்கிறார்கள்.
வெள்ளைக்காரன் மரணத்தை பத்தி சொல்லும்போது BREATHED`HIS LAST கடைசிமூச்சை விட்டுட்டான், ன்னு ஏன் சொல்றான் தெரியுமா. ஒரு ஆளுக்கு ஜீவிதமா இருக்கும்போது இத்தனை மூச்சு தான் னு விதி. அந்த மூச்சு களை நன்னா இழுத்துப் பிடிச்சு மெதுவாக அளந்து வெளிலே விட்டா ரொம்ப நாள் மீதி மூச்சு இருக்கும். பணத்தை எண்ணி செலவு பண்ணறா மாதிரி இது.
கோபம் தாபம் பொறாமை வந்தா மூச்சு வேகமாக வெளியே போறது. அதிகமா உபயோகிச்சால் சிலிண்டர் லே காஸ் GAS தீந்துண்டே போகும். கடைசியிலே சீக்கிரமே ஆயுசு முடிஞ்சுடும். இது தெரிஞ்சு தான் ரிஷிகள் மூச்சை அடக்கி பிராணாயாமம் தியானம் ஜபம் தவம் பண்ணி நூற்றுக்கணக்கான வருஷம் இருந்தா''
இனிமே உன்னோட பேச நேரமில்லை. போய்ட்டு அப்புறம் வா''
No comments:
Post a Comment