ஒரு முக்ய விஷயம் - நங்கநல்லூர் J K SIVAN
''ஒரு விஷயம் சரியாவே புரிய மாட்டேங்குது ஸார் . நீங்க சொல்லுங்க செட்டியாரே ?''
'எதைப் பத்தி கேக்கறீங்க?''
''செத்த பிறகு நமக்கு என்ன ஆவுது?''
''அதைப் பற்றி உயிரோடு இருக்கும்போது எதுக்குய்யா கவலைப்படறீங்க. இருந்தாலும் சொல்றேன் கேட்டுக்குங்க''
எதுக்கு எல்லோரும் சொத்து பணம், நிலம், நீச்சு தங்கம் எல்லாம் சேக்கணும்னு அலையறாங்க? செத்தப்புறம் இதெல்லாம் ஒண்ணுமே கூட வரப்போறதில்லேன்னு தான் எல்லாத்துக்கும் தெரியுமில்ல.'' என்கிறார் ரகுநாத செட்டியார்.
வாஸ்தவம் தான் செட்டியார் சொல்ற விஷயம்.
நல்ல பெரிய உத்யோகம், சொத்து, அந்தஸ்து எதுவுமே செத்தப்பறம் காலி. காணாம போயிடும். மனசு ஒண்ணு தான் உடம்பை எரிச்சப்புறம் ஆத்மா கூடவே போவும். மனசுன்னா எண்ணங்கள். இதை வாசனைன்னு சொல்றாங்க. எத்தனை பிறவி எடுத்தாலும் இந்த மனசு அத்தனை பிறவியிலே சேர்த்து வைச்ச எண்ணங்களோட தான் இருக்கும்.
பிறவின்னா மூணா பிரிச்சுடுவோம்.
முந்தைய பிறவி,
இப்போது இருக்கிற பிறவி,
இனிமே எடுக்கப்போற பிறவி.
எப்படிய்யா ஆத்மா தன்னோடு இந்த மனசுலெ இருக்கிற அத்தனை எண்ணகுவியலை தூக்கிக்கிட்டு போவுது?
ரிஷிகள் தான் சொல்றாங்க, ஆமாம் அப்படித்தான் ன்னுட்டு. அதை வேதாந்தம்னு சொல்றாங்க.
ஆத்மாவுக்கு மூணு உறை இருக்கு. ஒண்ணு நம்மளுடைய உடம்பு. ஸ்தூல சரீரம், இதிலே தான் மூளை , மனம் எல்லாம் நல்லா வேலை செய்யுது.
இந்த உடம்பை தவிர இன்னொண்ணு தான் கண்ணுக்கு தெரியாத ஸூக்ஷ்ம சரீரம். அதுலே தான் புத்தி, மனசுலே இருக்கிற எண்ணங்கள் என்கிற ஞாபக சக்தி, அஹம்பாவம் எல்லாம் இருக்குது. ஸூக்ஷ்ம சரீரம் நம்ம உடம்பு மாதிரியே உருவத்தில் இருக்கிற ஆவி மாதிரி. கண்ணாலே பாக்க முடியல.
மூணாவது ஒரு உடம்பு இருக்குதுங்க. அதை காரண சரீரம் என்கிறாங்க. அது பத்திஒண்ணுமே சொல்ல முடியாதுங்க. எல்லாத்தையும் பாத்துக்கிட்டு இதுங்க அது. மனசாக்ஷி ன்னு சொல்றாங்க அதை. அது இருக்கிறதே நமக்கு தெரியலீங்க.
செத்தப்புறம் இந்த ஸ்தூல சரீரம், உடம்பு தான் எரிஞ்சு காணாம போயிடுது.
மத்த மூணும். அதாவது ஆத்மா, காரண சரீரம், சூக்ஷ்ம சரீரம் எல்லாம் இன்னொரு உடம்புக்குள்ளே புகுந்துக்கிடுது. வீட்டிலே எப்படி ஒரு ரூம்லேருந்து இன்னொரு ரூமுக்கு நாம போறோம் இல்லையா அப்படி. தான்.
மனசு என்கிற நம்முடைய பழைய செயல்கள் , எண்ணங்கள் பத்திய ஞாபகம் எல்லாம் புது வீட்டுக்குள் (உடம்புக்குளே ) ஆத்மாவோடு போயிடுதுங்க.
மனசு புறமனசு, ஆழ் மனசுன்னு ரெண்டா பிரிச்சு வைச்சிருக்கு. ரொம்ப பழைய எண்ணக்குவியல், அதை ஸம்ஸ்காரம்னு சொல்றாங்க, அது ஆழ பதிஞ்சுடுது. நமக்கு ரெடியா ஞாபகமே வர்ரதில்ல. அதனால் விளையறது தான் அனுபவம். ரொம்ப ஆழமான கிணத்துல விழுந்த பித்தளை சொம்பு துருப்பிடிச்சு அங்கேயே கிடக்குது. என்னிக்கோ யாரோ பாதாள கரண்டி போட்டு துழாவி மேலே கொண்டாரங்க இல்லையா அப்படி சில பேருக்கு பழைய ஞாபகம் மேலே வருதுங்க. ரொம்ப தவம், தியானம் பண்ணுகிற ரிஷிங்க, முனிவருங்க, மஹான்கள்,யோகிங்க, போல இருக்கிறவங் களுக்கு முன் பிறவி ஞாபகம் அதனாலே 'சல்லுன்னு' தெரிய வருதுங்க. சொல்லிடுவாங்க. சில பேருக்கு மனசை ஆராய்ந்து ஹிப்னோடிஸம், மனோ தத்வம் படிச்சு, சில முறைகள் மூலம் முந்திய பிறவி, மறுபிறவி ன்னு ஞாபகம் சிலது வெளியே கொண்டுவறாங்க . எல்லாத்தையும் கண்டிப்பா நம்ம ஆளுங்களாலே இந்த முறையிலே வெளில கொண்டே வர முடியாதுங்க.
நம்ம கிருஷ்ணன் சாமி இருக்காரே படு சுட்டி, கில்லாடிங்க. ரொம்ப அழகா அந்த பயல் அர்ஜுனனுக்கு சொல்லிட்டாரே.
''டேய் அர்ஜுனா, நீயும் நானும் இந்த பிறவி மட்டும் இல்லடா, எத்தனையோ பிறவி எடுத்திருக்கோம், அதெல்லாம் என்ன பிறவின்னு உனக்கு தெரியாதுடா, ஆனா எனக்கு தெரியும்டா'' (கீதை CH .4.ஸ்லோகம் 5. बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन | तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप || 5| bahūni me vyatītāni janmāni tava chārjuna tānyahaṁ veda sarvāṇi na tvaṁ vettha parantapa'')
புத்தருக்கு கூட முன்னாலே எத்தனையோ மிருகங்களா தான் எடுத்த பிறவி தெரிஞ்சிருந்தது.''
செட்டியாரே, போதுமுங்க , கொஞ்சம் புரிஞ்சா மாதிரி இருக்குங்க. நான் என்னல்லாம் பிறவி எடுத்தேனோ, இனிமே எடுக்கப்போறேனோ, தப்பு செய்யாம இருக்கோணும் சாமி. அவஸ்தை சேத்து வச்சு அனுபவிக்க முடியாதுங்க நம்மாலே.
No comments:
Post a Comment