Monday, January 22, 2018

VAINAVA SEVA RATHNA

யான் பெற்ற இன்பம். J.K. SIVAN ....
யாருடன் பேசினாலும் முதலில் ''நல்ல சேதி'' என்று வாழ்த்தும் திரு. சடகோப கல்யாணராமனுக்கு இன்றைக்கு கிட்டத்தட்ட 84+ வயது தான் ஆகிறது. வயதில் மூத்தவர். எண்ணத்தில் ஊக்கத்தில், ஆர்வத்தில் ரொம்ப ரொம்ப இளைஞர். தாராளமாக ஐம்பது வருஷங்கள் குறைத்துக் கொள்ளலாம். ஒன்றோ இரண்டோ அல்ல, பதினேழு வருஷமாக திருவெள்ளக்குளம் எனும் அண்ணன் பெருமாள் கோவில் எனும் திவ்ய தேசத்தில் தனது ஸ்ரீ குமுதவல்லி நாச்சியார் அரங்கத்தில் ''கலியன் ஒலி மாலை'' எனும் கருத்தரங்கை நடத்தி வருகிறார். திருநாங்கூரில் நடைபெறும் 11 கருடசேவைக்கு அடுத்த நாள் தவறாமல் நடைபெறும் நிகழ்ச்சி இது. கருட சேவைக்கு முதல் நாளில் இருந்து, கருட சேவை அன்றும், கலியன் ஒலி மாலை நடக்கும் அடுத்த நாளிலும் எத்தனை பேர் வந்தாலும் எப்போது வந்தாலும் உணவு அளிக்கும் கலிகால பரகாலன். ஸ்ரீ சடகோப கல்யாணராமன் தமிழக அரசு தலைமை மருந்தாளுனராக பல வருஷங்கள் பணியாற்றி ஒய்வு பெற்று, திருமால் அடியார் குழாம் எனும் ஒரு அமைப்பை நிறுவி இந்த பணியை புரிந்து வருகிறார். இந்த பதினேழு வருஷங்களில் எத்தனையோ பேரின் தகுதி, பெருமை, சீர்மை எல்லாம் ஆராய்ந்து தக்கவாறு கவுரவித்து மகிழ்ந்தவர்.
மேற்படி கருத்தரங்கில் பங்கேற்க எனக்கு ரெண்டு வாய்ப்பு இதுவரை கொடுத்தார். முதலாவது 10.2.16 அன்று நான் எழுதிய ''பாவையும் பரமனும்'' என்ற திருப்பாவை பாசுரங்கள் பற்றிய புதிய அணுகுமுறை புத்தகம் அங்கேயும் வெளியிடப்பட்டபோது. இந்த நூலை ''வைணவ வள்ளல் '' டாக்டர் பன்னீர் செல்வம் வெளியிட முதல் பிரதி பெற்றவர் கோவிந்தன் கைத்தலம் பற்றிய நிகழ் நாள் ஆண்டாள் டாக்டர் ஸ்வதந்திரா அவர்கள்.
இரண்டாவதாக அமைந்த வாய்ப்பு 19.1.2018 அன்று அடியேன் எழுதிய ''அமுதன் ஈந்த ஆழ்வார்கள்'' எனும் பன்னிரு ஆழவார்கள் வாழ்க்கை பற்றிய நூல் மறு வெளியீடு பெற்று வரவேற்கப்பட்டு எனக்கு ஒரு அரிய விருது பெற்றுத்தந்தது.
விழா தலைமை: வைணவச்செம்மல் வித்துவான் வரிச்சுக்குடி திரு கு. அரங்கநாதாச்சார்யர் சுவாமி,
பாராட்டுரை வழங்கியவர்கள் :
பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ. உ.வே. அண்ணா சீனிவாசாச்சார்யார் சுவாமி, ஸ்தலத்தார், திரு அண்ணன்பெருமாள் கோயில்
மேலத்திருமாளிகை வர்த்தமான ஆச்ச்சார்ய பீடாதிபதி எம்பார் ஸ்ரீ உ.வே. ரங்காச்சார்யார் சுவாமி,திருமங்கையாழ்வார் தேவஸ்தானம், திருவாலி திருநகரி.
நூல் வெளியிட்டு விருது வழங்கியவர் : வைணவத்திரு முனைவர் ஸ்ரீ உ.வே. அ.வே. ரங்காச்சார்யார் சுவாமி, திருச்சித்ர கூடம், சிதம்பரம்.
நூலாசிரியர் திரு ஜே .கே. சிவன் அவர்களுக்கு வழங்கிய விருது : ''வைணவ சேவா ரத்னா''
நிகழிச்சியை தொகுத்து அருமையாக அளித்தவர்: வைணவத்திரு எஸ். கோகுலாச்சாரி, ஆசிரியர் ''ஆலய தரிசனம் '' புவனகிரி.
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சங்கம், நங்கநல்லூர், இந்த மாபெரும் வாய்ப்பை அளித்த திரு சடகோபன் கல்யாணராமன் அவர்களையும், திருமால் அடியார் குழாம் அனைத்து உறுப்பினர்களுக்கும், கலியன் ஒலி மாலை நிகழ்ச்சிகள் அருமையான தமிழில் அழகாக, சுவையுடன் தொகுத்தளித்த ஸ்ரீ எஸ். கோகுலாச்சாரி, மற்றும் இந்த நிகழ்ச்சியில் தலைமை ஏற்று, பாராட்டிய வைணவப் பெருந்தகைகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...