Thursday, January 25, 2018

SIVA MANASA POOJA

உள்ளமென்னும் கோவிலிலே....J.K. SIVAN .

நமக்கு ஒரு சின்ன வேலை செய்வதற்கும் அதை முடிப்பதற்கும் இந்த ஜென்மத்திற்குள் முடிவதில்லை. பல வருஷங்கள் ஆனாலும் பாக்கி வைக்கிறோம். முப்பத்திரண்டு வயதுக்குள் சர்வ வேத சாஸ்திரங்களும் கற்றுணர்ந்து அத்வைத நூல்களை படைத்து, பிரம்மத்தை உணர்ந்து சூத்ரம் எழுதி எண்ணற்ற ஸ்லோகங்களைப்பாடி எழுதி, என்றும் அழியா புகழ் பெற்று, இந்தியா முழுதும் நடந்தே சென்று ஷண்மத ஸ்தாபனம் செய்த ஆதி சங்கரர் நிச்சயம் மனிதன் அல்ல. இது அமானுஷ்யமான ஒரு செயல். அவ்வப்போது முடிந்தபோதெல்லாம் அவரது அற்புத ஸ்லோகங்களை ஒன்று இரண்டு உங்களோடு பகிர்ந்து கொள்ள பாக்யம் செய் திருக்க வேண்டும்.

சிவ மானச பூஜை என்னும் ஸ்லோகத்தை ஆதி சங்கர பகவத்பாதர் அருளியிருப்பதை இன்று காண்போம். ரசிப்போம். வெளியூர் பிரயாணத்தின் போது நமது நித்ய கர்மானுஷ்டங்களை முழுமையாக செய்ய முடிவதில்லையே, ஆற அமர்ந்து பூஜை அபிஷேகம், அர்ச்சனை செய்ய வழியில்லையே என்று பல உள்ளங்கள் நினைக்கும். அதையும் மனதில் கொண்டு, சிந்தித்து, தான் ஆதி சங்கரர், லிங்கம், விக்கிரகம் போன்ற உருவங்கள் இல்லாது, பூஜை செய்ய முடியாத சமயத்தில் எளிதாக மனதாலேயே சிவனைப் பூஜிக்க ஓரு வழி செய்த்திருக்கிறார். அருமையான மிகச் சிறந்த ஸ்லோகம் இது.

रत्नैः कल्पितमासनं हिमजलैः स्नानं च दिव्याम्बरं
नानारत्नविभूषितं मृगमदामोदाङ्कितं चन्दनम् ।
जातीचम्पकबिल्वपत्ररचितं पुष्पं च धूपं तथा
दीपं देव दयानिधे पशुपते हृत्कल्पितं गृह्यताम् ॥१

​​Ratnaih Kalpitam-Aasanam Hima-Jalaih Snaanam Ca Divya-Ambaram
Naanaa-Ratna-Vibhuussitam Mrga-Madaa-Moda-Angkitam Candanam |
Jaatii-Campaka-Bilva-Patra-Racitam Pusspam Ca Dhuupam Tathaa
Diipam Deva Dayaa-Nidhe Pashupate Hrt-Kalpitam Grhyataam ||1||
ரத்னைஃ கல்பிதமாஸனம் ஹிமஜலைஃ ஸ்னானம் ச திவ்யாம்பரம்
னானாரத்ன விபூஷிதம் ம்றுகமதா மோதாங்கிதம் சன்தனம் |
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம் புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயானிதே பஶுபதே ஹ்றுத்கல்பிதம் க்றுஹ்யதாம் || 1 ||

என் அப்பா, பரமேஸ்வரா, பசுபதி, நான் மனதால் உன்னை வணங்குவதை ஏற்றுக்கொள்வாய். என் உள்ளே, மனது என்று ஒன்று இருக்கிறதே அதற்குள் பார், அருமையான நவரத்ன கற்கள் பதித்த சிம்மாசனம் தெரிகிறதா?. அது உனக்கு அமர தான். என் கையில் சொம்பில் தொட்டுப்பார். சில்லென்று பனி உருகி நான் சேமித்து கொண்டுவந்த கங்கை ஜலம் . நீ அபிஷேகப் பிரியன் அல்லவா? இமயமலையிலிருந்து கொண்டுவந்திருக்கிறேன். இது நூல் ஆடை அல்ல. புலித்தோல். உனக்கு பிடித்த வஸ்திரம். உன்னை அலங்கரிக்க இதோ பார்த்தாயா அற்புத ருத்ராக்ஷ மணிகள் , ஸ்படிகம் கோர்த்த மாலைகள். சந்தன குழம்பு உனக்கு பூச, புனுகு, ஜவ்வாது. கஸ்தூரி. ஆஹா உன்னை அலங்கரித்தால் நீ எப்படி ஜொலிக்கிறாய் பரமசிவா! இந்த கூடையில் என்ன கொண்டுவந்திருக்கிறேன் பார். ஜாதி, சம்பகம் ,வில்வ தளம், சாம்பிராணி, குங்கிலியம் எல்லாம் உனக்கு தான். இதோ எல்லாவற்றையும் அணிவித்துவிட்டேன். தீபம் எப்படி சுடர் விட்டு எரிகிறது பார்த்தாயா உன் அருகே. . தேவாதி தேவா, கருணைக்கு கடலே, தீன தயாளு, பசுபதி, என் இதயம் நிறைந்து நான் அளிக்கும் இந்த மானசீக பூஜையை ஏற்று மகிழ்வாயா, எனக்கருள்வாயா?

​सौवर्णे नवरत्नखण्डरचिते पात्रे घृतं पायसं
भक्ष्यं पञ्चविधं पयोदधियुतं रम्भाफलं पानकम् ।
शाकानामयुतं जलं रुचिकरं कर्पूरखण्डोज्ज्वलं
ताम्बूलं मनसा मया विरचितं भक्त्या प्रभो स्वीकुरु ॥२॥

Sauvarnne Nava-Ratna-Khanndda-Racite Paatre Ghrtam Paayasam
Bhakssyam Pan.ca-Vidham Payo-Dadhi-Yutam Rambhaa-Phalam Paanakam |
Shaakaanaam-Ayutam Jalam Rucikaram Karpuura-Khannddo[a-U]jjvalam
Taambuulam Manasaa Mayaa Viracitam Bhaktyaa Prabho Sviikuru ||2||

​ஸௌவர்ணே னவரத்னகண்ட ரசிதே பாத்ரே க்றுதம் பாயஸம்
பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததியுதம் ரம்பாபலம் பானகம் |
ஶாகானாமயுதம் ஜலம் ருசிகரம் கர்பூர கம்டோஜ்ஜ்சலம்
தாம்பூலம் மனஸா மயா விரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு || 2 |​

பசுபதே , என் மானசீக பூஜையை ஏற்றுக்கொள். பசுநெய் ஹோமத்திற்கு நிறைய கொண்டுவந்திருக்கிறேனே. பாயசம் சுடச்சுட நைவேத்தியம் பண்ண இந்த தங்கப் பாத்திரத்தில் ரொம்பி வழிகிறதே. இந்த பாத்திரம் இப்படி பளபளக்க இன்னொரு காரணம் அதில் பதித்திருக்கும் வைர வைடூர்ய நவரத்தினங்கள் என்று புரிகிறதா? இந்த பாத்திரத்தில் பார், பஞ்ச கவ்யம், அதோ அதில் பால் தயிர், பழங்கள் நிறைந்த பஞ்சாமிர்தம். உனக்கு தாகம் எடுக்குமே என்று பரிசுத்த ஜலம், அதில் பழங்கள் பலவகை,அடியே நிரம்பி இருக்கிறதே. இதோ என் மனம் குளிர ''மஹா ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய.........''கற்பூரம் ஏற்றி காட்டுகிறேன்,

எல்லாம் திருப்தி சாப்பிட்டபிறகு உனக்கு தாம்பூலம் அளிக்கிறேன். எனது நைவேத்யம் பிடித்ததா? எல்லாம் நானே பரிசுத்தமாக மனத்தில் என் இதயம் நிறைந்து தயார் பண்ணியது! பக்தியோடு நான் அளிப்பதை ஏற்றுக்கொண்டு அருள் புரிவாய் கருணா சாகரா!

​छत्रं चामरयोर्युगं व्यजनकं चादर्शकं निर्मलं
वीणाभेरिमृदङ्गकाहलकला गीतं च नृत्यं तथा ।
साष्टाङ्गं प्रणतिः स्तुतिर्बहुविधा ह्येतत्समस्तं मया
सङ्कल्पेन समर्पितं तव विभो पूजां गृहाण प्रभो ॥३॥

Chatram Caamarayor-Yugam Vyajanakam Ca-Adarshakam Nirmalam
Viinnaa-Bheri-Mrdangga-Kaahala-Kalaa Giitam Ca Nrtyam Tathaa |
Saassttaanggam Prannatih Stutir-Bahu-Vidhaa Hye[i-E]tat-Samastam Mayaa
Sangkalpena Samarpitam Tava Vibho Puujaam Grhaanna Prabho ||3||

​சத்ரம் சாமரயோர்யுகம் வ்யஜனகம் சாதர்ஶகம் னிர்மலம்
வீணா பேரி ம்றுதங்க காஹலகலா கீதம் ச ன்றுத்யம் ததா |
ஸாஷ்டாங்கம் ப்ரணதிஃ ஸ்துதி-ர்பஹுவிதா-ஹ்யேதத்-ஸமஸ்தம் மயா
ஸங்கல்பேன ஸமர்பிதம் தவ விபோ பூஜாம் க்றுஹாண ப்ரபோ || 3 ||
ஹே பசுபதீஸ்வரா, என் மானசிக பூஜையில் நான் சமர்ப்பிக்கும் ஷோடசோபசாரம் இன்னும் என்னவெல்லாம் பார். பளபளக்கும் புதிய இந்த குடை உனக்கு தான். சாமரங்கள், விசிறுகிறேனே. உனது திவ்ய சுந்தர ரூபத்தை கண்ணாடியில் காட்டுகிறேன் பார். எப்படி என் அலங்காரம்? எதனால் தெரியுமா? முழு பக்தியால். இதோ பாட ஆரம்பித்துவிட்டேன். ''பொன்னார் மேனியனே......வீணை வாசிப்பது கேட்கிறதா? அங்கே அதற்கேற்ப பேரிகை, ம்ரிதங்கம், எக்காளம், கொம்பு எனும் வாத்தியங்கள் முழங்குகிறதே. உனக்கு பிடித்த உடுக்கை, மேளம், என்னைப்பார், உன் எதிரே சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறேன். என் மனம் பொங்கி வழிகிறது உன்மீதுள்ள பக்தியால், வாய் பாடுவதை நிறுத்தவே இல்லையே. எல்லாமே என் மனதில் உதித்து இதயம் நிரம்பிய சிவ பக்தியால் தான் பரமேஸ்வரா. உன் கடைக்கண் விழி, கடாக்ஷம் என்னை வாழ்விக்க, வேண்டுகிறேன்.

आत्मा त्वं गिरिजा मतिः सहचराः प्राणाः शरीरं गृहं
पूजा ते विषयोपभोगरचना निद्रा समाधिस्थितिः ।
सञ्चारः पदयोः प्रदक्षिणविधिः स्तोत्राणि सर्वा गिरो
यद्यत्कर्म करोमि तत्तदखिलं शम्भो तवाराधनम् ॥४॥

Aatmaa Tvam Girijaa Matih Sahacaraah Praannaah Shariiram Grham
Puujaa Te Vissayo[a-U]pabhoga-Racanaa Nidraa Samaadhi-Sthitih |
San.caarah Padayoh Pradakssinna-Vidhih Stotraanni Sarvaa Giro
Yad-Yat-Karma Karomi Tat-Tad-Akhilam Shambho Tava-Araadhanam ||4||

​ஆத்மா த்வம் கிரிஜா மதிஃ ஸஹசராஃ ப்ராணாஃ ஶரீரம் க்றுஹம்
பூஜா தே விஷயோபபோக-ரசனா னித்ரா ஸமாதிஸ்திதிஃ |
ஸஞ்சாரஃ பதயோஃ ப்ரதக்ஷிணவிதிஃ ஸ்தோத்ராணி ஸர்வா கிரோ
யத்யத்கர்ம கரோமி தத்ததகிலம் ஶம்போ தவாராதனம் || 4 ||

என் ஆத்மநாதா, அம்மா தேவி கிரிஜா, ஆத்ம ஞானமே, சிவகணங்களே, நீங்கள் என் பிராணன், என் தேகம் தான் உங்கள் ஆலயம். இந்த உலகத்துடன் நான் ஒட்டி உறவாடுவது தான் உனக்கு நான் புரியும் ஆராதனை ஆண்டவனே, எனது உரக்க நிலையே , என்னால் முடிந்த உன்னோடு ஒன்றிய சமாதி நிலை. நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உன்னை சுற்றி சுற்றி வரும் ப்ரதக்ஷணமாகட்டும். என் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உண்ணப்படும் ஸ்லோகமாகட்டும். பரமேஸ்வர, பசுபதே, நான் ஒவ்வொருகணமும் புரியும் எந்த காரியமும் உனக்கு ஆராதனையாக த்தான் என்று ஏற்றுக்கொள் சம்போ மகாதேவா.

​करचरणकृतं वाक्कायजं कर्मजं वा
श्रवणनयनजं वा मानसं वापराधम् ।
विहितमविहितं वा सर्वमेतत्क्षमस्व
जय जय करुणाब्धे श्रीमहादेव शम्भो ॥५॥

Kara-Caranna-Krtam Vaak-Kaaya-Jam Karma-Jam Vaa
Shravanna-Nayana-Jam Vaa Maanasam Va-Aparaadham |
Vihitam-Avihitam Vaa Sarvam-Etat-Kssamasva
Jaya Jaya Karunna-Abdhe Shrii-Mahaadeva Shambho ||5||

கர சரண க்றுதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ஶ்ரவண னயனஜம் வா மானஸம் வாபராதம் |
விஹிதமவிஹிதம் வா ஸர்வமேதத்-க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஶ்ரீ மஹாதேவ ஶம்போ || 5 ||

ஐயோ என் செய்வேன், எண்ணற்ற பாபங்களை புரிந்து விட்டேன். என் கரங்கள், கால்கள், என் வார்த்தைகள், தேகம், கண்கள்,செவிகள், என் எண்ணங்கள், காரியங்கள் எல்லாமே அவற்றை புரிந்து விட்டனவே. காலம் காலமாக இதெல்லாம் என் வாழ்க்கையில் நான் செய்தவை. சொல்லாதது இன்னும் நிறையவே இருக்கிறது. அறியாமல் தெரியாமல் செய்த பிழைகள் அநேகம். அப்பா என் தந்தையே, மஹாதேவ சம்போ, எல்லாவற்றையும் மன்னிப்பாயா? ஜயஜய சங்கரா. ஹரஹர சங்கரா. காருண்ய ஸிந்தோ. உன்னை சரணடைந்து விட்டேன். உன்னைவிட்டால் வேறு யார் என்மீது கருணை கொள்வார்?''

நாம் எல்லோரும் கண்டிப்பாக தினமும் கூற வேண்டிய ஒரு குட்டி சுலோகம்.
“அநாயேஸேன மரணம் விநா தைன்யேன ஜீவநம்! தேஹி மே க்ருபயா சம்போ த்வயி பக்திம் அசஞ்சலாம்!!”



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...