\ ஒரு நாடோடி கதை...
J.K SIVAN
அது ஒரு பெரிய கிராமம். நிறைய
பசுக்கள்,
எருமைமாடுகள் உள்ளதால்
பால்கோவா,
மற்றும்
பால் வியாபாரம் தண்ணீர் கலந்து நிறைய விற்று ஒரு சிலர் பெரியமனிதர்கள் ஆனார்கள். நாய்கள் வேறு ஜாஸ்தி. அவற்றைப் பெருக்கி விற்று நாய்வித்த காசு குலைக்காமல் இருக்க பெரும் பாடு பட்டார்கள்.ஒரு விழா நடந்தது. உள்ளூர் பிரமுகர்கள் யோசித்து யார் யாரைஎல்லாமோ கூப்பிட்டிருந்தார்கள். கோட்டையூர் கோபாலசாமி தமிழில் தில்லானா தில்லானா பாட்டு பாடி பிரபலமானவனுக்கு டெங்கு ஜுரம் வந்து படுத்து விட்டான். எனவே கரிப்பவழம் அவனுக்கு பதிலாக அங்கே செல்ல நேரிட்டது.
அது ஒரு முக்கியமான நாள். உள்ளூர் மக்கள் அம்மன் பக்தர்கள். கரிப்பவழம் நன்றாக பேசவேண்டும் என்று எங்கெங்கோ திருடி சில அரைகுறை விஷயங்கள் சேகரித்து வந்தவன் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறி உள்ளூர் மக்களை திக்கு முக்காட வைத்தான். ஆப்பிரிக்காவில் ஒரு அறிஞன் என்ன சொன்னான் என்று தனக்கு ஆப்பிரிக்கா பற்றி தெரியும் என்றும் ஆப்ரிக்க அறிஞன் சொல்வது சொன்னது எல்லாம் கூட எனக்கு தெரியும் என்று காட்டிக்கொள்ள ஏதோ உளறிவிட்டான்.
பச்சை அம்மன்பற்றிய ஒரு புராணம் எங்கோ பிடித்ததாகவும் அதில் அவளை அனாதை , யார் என்று தெரியாதவள், வளர்த்தது வேறு ஒரு மதக் கிழவர். அவளை அந்த ஊர் சாமிக்கு கல்யாணம் செயது வைத்தார்கள். சாமியோ கல் சிலை. இவளோ சின்ன பெண் பெண். அந்த காலத்தில் தாசிகள் கோவிலில் சாமிக்கு ஆடுவதற்கு என்றே ''பொட்டு '' கட்டி விடப்பட்டவர்கள் என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசிவிட்டான். தான் ஞான சம்பந்தன் என்ற நினைப்பில் கை தட்டல் எதிர்பார்த்தவனுக்கு சில மணிநேரத்திலேயே மண்டையில் தட்ட ஆள் கூட்டம் சேர்ந்து விட்டது.
நாய் வியாபாரம் எருமை வியாபார பிரமுகர்களுக்கு கழுநீர் பானையில் கை விட்ட கதையாக போய்விட்டதே என்ற அவமானம், ஏமாற்றம். ஊரிலுள்ள அம்மன் பக்தர்களுக்கோ கோபம் அனாவசியமாக கிளப்பி விடப்பட்டது.
இனி கரிப்பவழத்தை எங்கும் பாட பேச கூப்பிடவேண்டாம் என்று மற்ற கிராமவாசிகள் முடிவெடுத்தார்கள். கரிப்பவழம் பார்த்தான்.இதேதடா வம்பாக போகிவிட்டது. நாம் ஆப்பிரிக்க அறிஞன் கருத்தை சொன்னால் பிடிக்கும் என்று பார்த்தால் அது கடிக்கும் என்று ஆகிவிட்டதே என்று திணறினான்.
தெரு ஓரத்தில் ஒரு மரத்தில் ஏறி உரக்க சொன்னான். ''அய்யாமார்களே, நான் எதுவும் தப்பாக சொல்லவில்லை. நான் அப்படியெல்லாம் சொல்பவன் இல்லை. ஆப்பிரிக்க அறிஞன் கருத்தை சொன்னேன். நான் சொன்னதற்கு அந்த ஆப்பிரிக்க அறிஞன் தான் பொறுப்பு என்று சொன்னான்.
''இன்னுமா இங்கே நிற்கிறாய் என்று நாய் வியாபாரிகள் துரத்த வேகமாக ஓடிவிடும் பழக்கம் கொண்ட அந்த அறிஞன் அங்கிருந்து கழண்டு கொண்டான். அவனை தேடிக்கொண்டிருக்கிறார்கள் கோவக்காரர்கள்.
No comments:
Post a Comment