நங்கநல்லூரில் ஸ்ரேஷ்டமான ஆடிமாதத்தில் முதலில் சப்தாஹம் துவங்கி வைத்தது ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் என்ற எளிய நிறுவனம். இதை நிகழ்த்த பொருத்தமானவர் என தேர்ந்தெடுத்து மதுராந்தகம் திருமால் கவிச்செல்வர், கைங்கர்ய சீமான் இன்னும் பலப்பல பட்டங்கள், விருதுகள் பெற்ற சமஸ்க்ரிதம், ஆங்கிலம், தமிழ் என்னும் மும்மொழிகளிலும் சிறப்பாக பேசும் எழுதும் திறமை வாய்ந்த ஆன்மீகச் செல்வர் உ.வே. ஸ்ரீ S ரகுவீர பட்டாச்சார்யரை அழைத்தோம். அவரும் எங்கள் விருப்பத்துக்கு செவி சாய்த்து ஜூலை 22 2019 முதல் 27.2.2019 வரை ஆறு நாட்கள் , நம்பர் 20 ராம்நகர் முதல் மெயின் ரோடு, நங்கநல்லூரில், முதல் ஆறு சப்தாஹ பிரசங்கத்தை விமரிசையாக நிகழ்த்தினார். அநேகர் பங்கு கொள்ள இடவசதி காரணமாக 7ம் நாள் ஸப்தாஹத்தை நங்கநல்லூர் 15வது தெருவில் ரஞ்சனி மண்டபத்தில் நிகழ்த்த்தினோம்.
அன்று மாலை மூன்று மணிக்கே சில குழந்தைகள், பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகளையும் அறிவித்தோம். அமோகமான வரவேற்புடன் அந்த நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
ஸ்ரீ ரகுவீர பட்டாச்சாரியார் அவர்களது ருக்மிணி கல்யாணம் என்ற தலைப்பில் சப்தாஹத்தின் நிறைவு உபன்யாசம் மாலை 6.30 முதல் 8 வரை அன்று தொடர்ந்தது.
ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் நிறுவனம் வருஷாவருஷம் ஒரு சிறந்த கிருஷ்ண சேவா பக்தரை வரவேற்று கௌரவிப்பது வழக்கம்.2019 வருஷ ஸ்ரீ கிருஷ்ண சேவா அவார்ட் என்ற விருது இந்த வருஷம் ஸ்ரீ ரகுவீர பட்டாச்சார்யரை அடைந்தது மிகப் பொருத்தம். அதுவும் அவர் பாகவத சப்தாஹம் நிறைவு செய்த ஞாயிறு 287.2019 அன்று. இந்த அவார்ட் அளிப்பதில் பங்கு கொண்டவர்கள் ஸ்ரீ சுந்தரம் மீனாட்சி குடும்பத்தினர். அவர்களே நேரில் வந்திருந்து வாழ்த்தி வணங்கி SKST சார்பில் அந்த அவார்ட் விருது பத்திரத்தை அவருக்கு அளித்தனர்.
ஸ்ரீ ரகுவீர பட்டாச்சாரியார் ஒரு கவிதை பாராட்டு எழுதி அதை அவரே வாசித்து ஸ்ரீ ஜே.கே. சிவனை வாழ்த்தியது ஆச்சரியம்
ஒரு இளைஞர் அற்புதமாக மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமியை படம் வரைந்து அதை ஸ்ரீ ரகுவீர பட்டாச்சார்யருக்கு அவரது தந்தை அதை ஸ்ரீ ரகுவீர பட்டாச்சார்யாருக்கு அளித்தார். அற்புதமான ஓவியத் திறமை. வாழ்க கிருஷ்ணன் அருளோடு.
இது போன்ற சேவைகளில் பங்குகொள்ள விரும்புவோர் எங்களை அணுகலாம்.
ஜே கே சிவன் தொலைபேசி 9840279080
No comments:
Post a Comment