Saturday, April 23, 2022

surdas

 ஸூர்தாஸ்   --   ..நங்கநல்லூர்  J K  SIVAN 



''ஸ்வாகதம் கிருஷ்ணா.''....

கிருஷ்ணனைதுயிலெழுப்புகிறார்சூர்தாசர்.
நாள்  முழுதும்  விளயாடிவிட்டல்லவோ  தூங்குகிறான்.   தீராத விளையாட்டுப் பிள்ளை என்று சும்மாவா சொன்னார்  பாரதியார்.

போதுமப்பா  தூங்கியது. கிருஷ்ணா எழுந்திரப்பா. பொழுது புலர்ந்துவிட்டதே.  கிழக்கே பார்த்தாயா? செக்கர்வானம். சூரியன்  சிவப்பாக ஆரஞ்சு  பழமாக  ஒளி வீசி  கொஞ்சம் கொஞ்சமாக தங்க மயமாக  உலகத்துக்கு தங்க முலாம் பூசுகிறான் பார்.

ஆஹா, நன்றாக  கண்விழித்தாகி விட்டதா?  என்ன அழகடா ராஜா. உன்  விழிகள்!. விசாலமான, ஆழ்ந்து நோக்கும் தாமரை  மலரை ஒத்த விழிகளா கருவண்டுகளா?  காதல்  சின்னமா?, கடல்  போன்ற ஏரியா? உன் மயக்கும் கரு விழியா? இரு விழிகளும் உண்மையில்  இரு அன்னப் பறவைகளா?,

காண்போரைக்   கவர்ந்து மயங்கச் செய்யும் காமதேவன் மன்மதனே வெட்கும் அளவிற்கு மந்திர சக்தி கொண்ட காந்த முகனே, எழுந்திரு, 

இதோ கிழக்கு சிவந்த பின்  இப்போது   வெளுத்து விட்டது. ஒளியில் கண் கூசுகிறது.   

சூர்ய தேவா   வா!. உன்  வரவு  நல்  வரவாகட்டும். சுப்ரபாதம். உயிர்கள்  களிக்கட்டும்.சகல உயிர்களுக்கும் ஜீவாதார அல்லவா நீ. 

மங்கிய இருள் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறதே.   செக்கர் வானம் கடலில் மூழ்கி  இருளுக்கு  விடை கொடுக்கட்டும்.   இளங் காலைக்கு வழிவிடத் தாயாராகிவிட்டதே.  

ஹே, சந்திரா, இரவெல்லாம் குளிர்ந்த அமுத  நிலா ஒளியை எங்கும் போர்த்தியவனே. வேலையை முடித்து களைத்திருக்கிறாய்.  சென்று  ஓய்வெடு .   மறுபடியும்  இரவு வந்தால் நீ மீண்டும் வர காத்திருக்கிறேன்.

வீடுகளில் எல்லாம் எண்ணெய் தீபங்கள் இரவெல்லாம் எரிந்து இதோ அவற்றுக்கு நன்றி கூறி அணைத்து உத்தரவிடப் போகிறோம்.. அவை  அளித்த  சுடரொளி  இனி  இரவில்   மட்டும்  தானே மீண்டும் தேவை.

வானில் பளிச்சிடும் தாரகைகளே, விண்மீன்களே, போய்வாருங்கள். கை  கூப்பி  விடை  அளிக்கிறோம். மீண்டும் இரவில் சந்திப்போம்.

ஞானம் ஒளிவீசி அஞ்ஞானத்தைஅகற்றுவதுபோல்,  அறிவு சுடர்விட்டு அறியாமை அகல்வதுபோல், வைராக்
ய மனம் புலன்களை  அடக்கி  ஆள்வது போல், மனதில்  நம்பிக்கை  சுடர் விரிந்து பயத்தை, அவ நம்பிக்கையை, சந்தேக இருளை ஓட்டி ஒளி மயமாவது போல்

கிருஷ்ணா, உன் கண் திறந்து எங்களை உன்  வசமாக்கி அருள்வாய் அப்பனே.  

''குக்கூ'' என்று அழகிய தேன்குரல் காதில் வந்து பாய்கிறதா கிருஷ்ணா உனக்கு?
அந்த குரலில் தான்  எத்தனை  மதுரமான  பாசம், நேசம், சந்தோஷம்  கண்ணா!. அழகிய தெய்வீக குழந்தாய்!
கிருஷ்ணா, என்  வாழ்வின்  நம்பிக்கை  நக்ஷத்திரமே. எனது சங்க நிதி பத்மநிதியே, அள்ள அள்ள குறையாத செல்வமே, செல்லப் பிள்ளையே, செல்வப்  பிள்ளையே! இதோ   வந்துவிட்டார்கள்   கூட்டம்  கூட்டமாக  கவிஞர்கள், பக்தி மேலீட்டுடன் புலவர்கள், ஞானிகள், ரிஷிகள், வாத்தியக்காரர்கள், முனிவர்கள், பக்தர்கள், முக்தர்கள் எல்லோருமே. கோஷம் எழுப்புகிறார்கள் காதில் விழுகிறதா   உனக்கு  கிருஷ்ணா? ''ஜெய விஜயீபவ'' 
 ஜெயவிஜயீபவ'' ஸ்ரீகிருஷ்ணா.!!!

ஸூர்தாஸர்   கண்ணற்றவர் அல்ல. நாம் தான் கண்ணிருந்தும்  குருடர்கள். செவியிருந்தும் செவிடர்கள், வாயிருந்தும் பரமன் புகழ் பேசாத, பாடாத ஊமைகள்,  அறிவிருந்தும்  அஞ்ஞானிகள்..  என்ன கற்பனை வளம் பார்த்தீர்களா  ஸூர் தாஸர்  சொல்லில். மனதில் உள்ள கிருஷ்ண   ப்ரேமைக்கு தான்  அளவுண்டா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...