ஸமர்த்த ராமதாஸ் - நங்கநல்லூர் J K SIVAN
வியாபாரம் செய்து பிழைக்க என்று வந்த வெள்ளையன் நமது பாரத தேசத்தின் வளமை, இயற்கை செல்வம், மக்களின் எளிமை, அறியாமை, ஒற்றுமையின்மை எல்லாவற்றையும் நன்றாக கவனித்து
திட்டமிட்டு நமது கலாச்சாரம், மதாபிமானம், பண்பாடு எல்லாவற்றையும் அழித்து, நம்மை கடைசியில் ஆண்டு, அடிமைகளாக்கி கிட்டத்தட்ட 250 வருஷங்களுக்கு மேல் நாட்டை கபளீகரம் செய்த்துவிட்டு சென்றனர்.
வெள்ளைக்காரன் அதிகாரம் இந்தியா முழுதும் காலூன்றும் முன்பு முகலாயர் ஆட்சி தான் இங்கே நம்மை வாட்டி வதைத்தது. ஹிந்துக்களின் துன்பத்திற்கு முதல் காரணம் முகம்மதியர்கள். சந்தேகமே இல்லை. எண்ணற்ற உயிர்கள் கொல்லப்பட்டன. மதமாற்றம். ஹிந்துப் பெண்மணிகள் கற்பழிப்பு, கட்டாய திருமணம். கோவில்கள், விக்ரஹங்கள் உடைப்பு எல்லாம் ஆரம்பித்து வைத்த புண்யவான்கள். இன்றும் ஆங்காங்கே சிறிய அளவில் அவர்கள் காரியம் தொடர்கிறது. நாம் இப்போதாவது ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய அவசியத்தை உணரவில்லை என்பது பரிதாபம்.
இஸ்லாமியர்களை முதலில் எதிர்த்து நின்ற மஹாவீரன் மஹாராஷ்டிராவில் தோன்றிய சத்ரபதி சிவாஜி. அவனுக்கு பக்தியும் வீரமும் இரு கண்களாக ஒளிவீச உதவியது அவன் தாய், ஜீஜாபாய், மற்றும் குருநாதர் சமர்த்த ராமதாஸர் . அவரைப்பற்றி தான் நிறையபேர் இன்னும் அறியவில்லை என்பதால் கொஞ்சம் சொல்லப் போகிறேன்.
சமர்த்த ராமதாஸ் என்பவர், சுருக்கமாக சொன்னால் ஹனுமான் அம்சம். ப்ரத்யக்ஷமாக ஹநுமானைக் கண்டவர். ஹனுமான் மூலம் ராம தர்சனம் பெற்றவர். பதிமூன்று கோடி ‘ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்’ ஜபித்தவர். ஆகவே அவருக்கு எவ்வளவு தெய்வீக, ஆன்மீக சக்தி இருக்கும் என்று யோசியுங்கள். அது தான் சிவாஜி மூலம் ஹிந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கி சனாதன தர்மத்தை
காத்தது. பக்த துக்காராம் வாழ்ந்த காலத்தில் இருந்தவர்.
ராமதாஸின் தகப்பனார் சூர்யாஜி பந்த். சூரிய நமஸ்காரம் தினமும் செய்பவர். ஒருநாள் சூரியன் நேரில் காட்சி தந்து வரமளித்தான் :
"உனக்கு இரு பிள்ளைகள். ஒருவன் ராமன் அம்சத்தோடும், மற்றவன் அனுமன் அம்சத்தோடும் பிறப்பார்கள். சமர்த்த ராமதாசர் ரெண்டாவது பிள்ளை ஹனுமான் அம்சத்தில் பிறந்தவர். ஸ்ரீ ராமநவமி அன்று 1608 ல் பிறந்தார். பஞ்சவடிக்கு அருகில் 12 வருடம் கடும் தவம் செய்து ராம மந்திரத்தை மூன்றரை கோடி முறை ஜபம் செய்து மஹாமந்திரமான காயத்ரியையும், ஸ்ரீராம த்ரயோதசாக்ஷரி (ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்) மந்திரத்தையும் முன்று கோடி முறை ஜபித்து அதன் மூலம் ராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம் பெறுகிறார்.
"அன்பனே! நீ அனுமனின் அம்சம். இனி நீ "சமர்த்த ராமதாஸர்' என நீ அழைக்கப்படுவாய். உன்னால் இந்த உலகத்தில் ஆக வேண்டிய காரியங்கள் ஏராளம் இருக்கின்றன. ஸனாதன தர்மத் திற்கு அந்நியர்களால் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதைத் தக்க நபர்கள் மூலம் தடுத்து தர்மத்தை மீண்டும் நிலைநாட்டு'' என்று உத்தரவிட்டார் ராமபிரான். நான் காட்டிற்குச் சென்றபோது கட்டிய வஸ்திரத்தையும் உனக்கு அளிக்கிறேன்,'' என்றார். மந்திர உபதேசம், வஸ்திர தீட்சையை வழங்கி னார். இந்த வஸ்திரம் இன்றும் இவரது சமாதிக் கோவிலில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆஞ்சநேயரும் தன் பங்கிற்கு ராமதாசருக்கு சரணாகதி மந்திரத்தை உபதேசித்தார். ஸ்ரீ ராமரின் உத்தரவின் பேரிலேயே பாரதம் முழுவதும் பயணப்பட்டு த்ரயோதசாக்ஷரி மந்திரத்தை பரப்ப முடிவு செய்கிறார்.
சமர்த்த ராமதாஸ் ஒரு சமயம் ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம் செய்து கொண்டு இருந்தார்.
यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकांजलिम् वाष्पवारिपरिपूर्णालोचनं मारुतिं नमत राक्षसान्तकम् ॥
'யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்...''
அப்போது ஹனுமான் அங்கே இருந்தார். கூப்பிய கரங்களுடன் கண்ணில் ஆனந்த பாஷ்பம் நீர் ததும்ப ராமாயண உபன்யாசத்தை ஒரு பிராமண வேடம் தரித்து அமர்ந்து கேட்டு கொண்டு இருந்தார். ராமதாஸ் அஸோக வனத்தின் வர்ணனை சொல்லி கொண்டு இருந்தார் அது சமயம் அங்கு பூத்திருக்கும் பூக்கள் தும்பை பூவை போல வெள்ளை நிறத்தில் அனைத்து பூக்களும் பூத்து குலுங்கின என்று கூறினார்.
அது சமயம் கிழ பிராமணர் எழுந்து நின்று ''ஸ்வாமின், நீங்கள் தவறாக சொல்கிறீர் அங்கு பூத்த புஷ்பங்கள் எல்லாம் சிவப்பு நிறங்களாக இருந்தது. நன்னா பார்த்து வாசியும்'' என்றார்.
ராமதாஸர் , ''பெரியவரே, நீர் ராமாயணம் கேட்க தானே வந்தீர் அமைதியாக கேளும். குறுக்கே பேசாதீர் வால்மீகி எழுதினதைத் தான் நான் எடுத்துச் சொல்கிறேன்'' என்றார்.
ஹனுமான் கோபம் கொண்டு ''ஓய், நான் தான் ஹனுமான் அசோகவாடி நேரே போய் பார்த்தவன் என்ன சொல்றீர்'' என்றார்.
சமர்த்தர் யோசித்தார் இது நல்ல சமயம் இவரை வைத்து ராமர் தரிசனம் செய்துடலாம் என்று நினைத்து ''சரி சரி, நமக்குள் ஏன் விவாதம், சந்தேகம். நேராக ராமரையே கேட்கலாமே''
என்றார்
ஹனுமான் ராமதாஸரை நேராக ராமரிடம் அழைத்துச் சென்று சந்தேகத்தை சொன்னார்கள். ராமரோ எல்லாம் தெரிந்தும்
''ஹனுமான், உனக்கு தெரியுமே , நான் அசோகவனம் போகவில்லை. சீதை மட்டும் தான் அங்கே இருந்தாள் அவளையே கேட்டு விடலாம் ''என்றார்.
சீதை ''ஆமாம், அசோக வனத்தில் பூத்த புஷ்பங்கள் எல்லாம் நீல நிறத்தில் தான் இருந்தது. சிகப்பும் இல்லை வெளுப்பும் இல்லை'' என்றாள்.
அனுமானோ விடவில்லை. '' தாயே நான் அங்கே எல்லாவற்றையும் பார்த்தேன், அங்கு பூத்தது எல்லாமே சிகப்பு தான்'' என்றார். ராமர் எதற்கும் வால்மீகி முனிவரையே கேட்கலாம் எதற்கு வெள்ளை என்று பாடினார் என்று '' என்றார்.
அனைவரும் வால்மீகி ஆஸ்ரமம் சென்று சந்தேகத்தை கேட்டனர். வால்மீகி ரிஷி அனைவரையும் அன்புடன் வரவேற்றார். அனுமானிடம் சாந்தமாக எடுத்துரைத்தார்.
'' ஹனுமான், நீ அஸோகவாடியில் ராக்ஷசர்களை பார்ததும் கோபக் கனல் உன் கண்களில் பிறந்தது இவர்கள் அனவரையும் அழித்து இந்த வனத்தையும் அழிப்பேன் என்று ஆவேசமாக சொன்னாயே , அந்த சமயம் உன் கண்கள் சிவந்து இருந்ததால் உனக்கு எல்லாமே சிவப்பாக தெரிந்தது.''
'ஹனுமான் விடுவாரா? வாலமீகி முனிவரே, சரி நீர் சொன்னதை ஒப்புக் கொள்கிறேன். சீதாமதா மாதாவின் கண்களுக்கு ஏன் நீல நிறமாக தெரிந்தது?
''சீதை ராமரைப் பிரிந்த தாபத்தில் கண்கள் அழுது அழுது கண்ணீர் நீலம் பூத்து விட்டது ஆதலால் அவள் கண்ணுக்கு எல்லாம் நீலமாக தெரிந்தது. ஆக அங்கு பூத்த மலர்கள் யாவும் ராமனைப் போன்று வெளுத்த மனதாக, வெள்ளை நிறத்தில் தான் இருந்தது என்பதால் வெள்ளை நிறம் என்று எழுதினேன்'' என்றார் வால்மீகி .
இது சமயம் சமர்த்தராமதாஸர் ராம சீதாசஹிதமாக ஹனுமானை ஸாஷ்டாங்கமாக விழுந்து ஸேவித்தார்.
''என் பக்தனான நீ எப்போது நினைத்தாலும், அப்போதெல்லாம் உன் முன் தோன்றுவேன்!'' என்று வாக்களித்து விட்டு மறைந்தார் ஹனுமான்
No comments:
Post a Comment