ஸூர்தாஸ் - நங்கநல்லூர் J K SIVAN
கேள்விக்கு என்ன பதில்?
வெகுநாளாக ஸூர்தாஸ் கண்ணில் படவில்லை . அவருக்கு கண்ணில்லை என்பதால் நாம் அவர் கண்ணில் பட முடியாது. கண்ணிருந்தாலும் அவருக்கு நாம் முக்யமில்லாவி. கண்ணனே போதும் என்று இருப்பவர். ஆகவே இன்று அவரைக் கொஞ்சம் தேடிப் பிடிக்கிறேன். அவரிடம் அப்படி என்ன ஈர்ப்பு சக்தி இருக்கிறது? ஆஹா, அவர் வாயால் ஒரு நாலு வார்த்தை அற்புதமாக கிருஷ்ணனை பற்றி
கேட்க வேண்டும். .
ஒளி மயமாக இருக்கும் கோகுலம் ஏன் திடீரென்று இருண்டு விட்டது? ஒளி போய் விட்டால் இருட்டுதான் மிஞ்சும். அங்கே எல்லா கோபியர்களும் ஏன் உற்சாகம் இழந்த நடை பிணமாகி விட்டார்கள்? எவர் முகத்திலும் ஒரு சோகம் களையிட்டிருக்கிறதே. சிரிப்பே எல்லோருக்கும் . மறந்து போய் விட்டதா? கண்கள் எதையோ எங்கெங்கோ தேடியவாறு இருக்கிறதே . அத்தனை பேரின் செல்லக் குழந்தையா, எஜமானனா அவன்? எப்படிச் சொன்னாலும் அது ரொம்ப . பொருத் தம் தான். அந்த தாமரைக் கண்களை எங்கே காணோம்? நீல நிற நெற்றியிலே சிவந்து காணப் படும் திலகம் எங்கே? நீல கழுத்திலே நிறைந்து காணப்படும் அந்த வெண் முத்து மாலைகள் எங்கே? பிருந்தாவன நாயகன் எங்கே போனான் ? நம்மை எல்லாம் காய்ந்த சருகாக்கி விட்டு நம் உயிரை எல்லாம் ஒன்று சேர்த்து மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டு சென்று விட்டானோ அந்த மாய கிருஷ்ணன்? ஒவ்வொருவள் மனத்திலும் ஆழ்ந்த சோகம் இருந்தாலும் வெளியே தெரியவில்லை. ஏதோ அன்றாட வேலைகள், பேச்சு என்று மெஷின் மாதிரி செய்து கொண்டு இருந்தாலும் மனம் பூரா ஏக்கம் வாட்டுகிறதே. இதயம் துடிக்கிறதே. கிருஷ்ணன் இனி பிருந்தாவனம் திரும்பிவருவானா? எப்போது? இந்த கேள்விக்கு யாருக்கு பதில்தெரியும்?
கலகல வென்று இருக்கும் காசியே வெறிச் சோடி விட்டதே என்கிறாள்
ஒரு கோபி. அவள்அனுபவம் அப்படி. நாம் என்ன சொல்ல முடியும். காசியே அப்படியானால் பிருந்தாவனத்தில்நம்கதி? ஸூர்தாஸ் இந்த கேள்வியை எழுப்புகிறார். யாராவது பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்!
No comments:
Post a Comment