மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை....
நங்கநல்லூர் J K SIVAN
சமீபத்தில் அவர் எழுதிய ஒரு பழைய கட்டுரையை படித்தேன். கண்ணீர் விட்டேன். பெண்களுக்கு தீங்கு செய்தால் அனல் கக்கிய அமர கவிஞன் பாரதி. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்று முழங்கியவன். நன்றாக யோசித்து பாருங்கள், ஒரு புத்தன், காந்தி, விவேகானந்தர், ரமணர், பரமஹம்சர், அர்ஜுனன், சங்கரர், ராமானுஜர்,
வள்ளுவர் கம்பர், ஏன் பாரதியே கூட, ஒரு தாய் இல்லாமல் நமக்கு கிடைத்திருப்பார்களா? ஒவ்வொரு பெண்ணும் தாய்.
1941ல் கலைமகளில் டிசம்பர் மாத பத்திரிகையில் பாரதியார் எழுதிய ஒரு கட்டுரை வந்தது. அதன் சாராம்சம்.
நாகரீகம் என்றால் ஸ்திரீகளை மதிப்பது தான். மோட்டர், பிளேன், மாடிவீடுகள், நவீன உடைகள் தஸ் புஸ் என்று இங்கிலீஷில் பேசுவது மட்டும் நாகரீகம் இல்லை. ஜனங்களுக்குள் ஒற்றுமை, பரஸ்பர அன்பு, பண்பு தான் நாகரிகம். நாகரீகம் முதிர்ச்சி அடையவேண்டுமானால் முதலில் ஸ்திரீகளுக்கு முக்யத்துவம் கொடுக்கவேண்டும். கல்வி, உத்யோகம், அனைத்திலும் ஆண்களோடு நிகராக பெண்களும் வாய்ப்புகள் பெறவேண்டும். வெள்ளைக்கார சிலபஸ் SYLLABUS மாறி நமது பண்பாடு, இலக்கியம், நீதிநூல்கள் , பக்தி, ஒழுக்கம் எல்லாம் முன்னோர்களை போலவே நமது அடுத்த தலைமுறையும் பெறவேண்டும். பெண்கள் பாடசாலைகள், கல்லூரிகள் நிறைய வேண்டும். ஆண்கள் குணமழிந்தாலும் தாங்கிக் கொள்ளலாம். பெண்களை அவ்வாறு சீரழிய விடக்கூடாது. அது பல சந்ததிகளை பாதிக்கும். இப்படி ஒரே சீரான கல்வி முறை நாடு முழுதும் பெண்கள் பெறவேண்டும். மாதர்கள் உதவியின்றி எந்த தேசமும் முன்னேறமுடியாது. அக்கிரமம் நடக்கும் நாடுகளை பார்த்தால் அங்கே பெண்கள் அடக்கி ஆளப்படுவது தான் காரணம் என புரியும்.
நாட்டில் லஞ்சம், சூது, வாது, ஏமாற்றும் கலை அனைத்தும் அழிய, சுபிக்ஷம் பெறுக பெண்களின் தேசபக்தி, ஒழுக்கம், தாராள, அன்பு, சகாய மனப்பான்மை அத்தியாவசியம். பெண்கள் தான் சக்தி என்று எல்லோருக்கும் தெரியும். தெய்வமே சக்தி தேவி என வணங்குகிறோம். ஒரு மனிதனின் வெற்றி, முன்னேற்றத்துக்கு, பின்னால் ஒரு பெண் என்பதை விட ஒரு தேசத்தின் வளமை, பெருமை, வளர்ச்சி, முன்னேற்றத்துக்கும் பின்னால் தூண்போல் பேனல் நிற்கவேண்டும் என்பது பாரதியாரின் விருப்பம். நாம் நிறைவேற்றுவோமா?
No comments:
Post a Comment