மஹா பெரியவாளும் மஹா லிங்கமும் - - நங்கநல்லூர் J K SIVAN
சில வார்த்தைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்தவை, இணைந்தவை பிரிக்கவே முடியாதவை. அப்படி சில வார்த்தைகளில் ஒன்று தான் மஹா பெரியவாவும் எளிமையும், காருண்யமும்,ஞானமும். அவர் செல்லாத சிவாலயம் இந்த தேசத்தில் இல்லை என்று கூட தைரியமாக சொல்லலாம்.
வெகுநாட்களாக ஒரு படத்தை பார்த்து அதிசயித்து போகிறேன். அது ஒரு பெரிய ஆளுயர சிவலிங்கம். அதற்கு அருகே நின்று கொண்டு மஹா பெரியவா கையை உயர்த்தி ஜல பாத்திரத்தில் இருந்து அபிஷேகம் செய்யும் அற்புத போட்டோ. அதை நான் பதிவு செய்யும்போதெல்லாம் எத்தனையோ நண்பர்கள் ''சார், அது எந்த ஊர் சிவ லிங்கம்?"' என்று கேட்பது வழக்கம். வெகுகாலம் எனக்கு விடை கிடைக்கவில்லை. தேடினேன் கிடைத்தது.
ஆந்திர மாநிலம் சிவாலயங்கள் அதிகம் கொண்ட பிரதேசம். அங்கு கடவுள் காட்டு மிராண்டி என்பவர்கள் ரொம்பவே இல்லை என்று சொல்லலாம். அதில் பிரகாசம் என்று ஒரு ஜில்லா. பழைய முதன் மந்திரி T . பிரகாசம் அவர்கள் பெயரில் அமைந்தது. கிருஷ்ணா நதி தொட்டுக்கொண்டு ஓடுகிறது. த்ரிபுராந்தகம் என்கிற கிராமம் வினுகொண்டா - மார்க்காபூர் மார்கத்தில் 40 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஓங்கோல் வழியாக வந்தால் 93 கி.மீ. விஜயவாடா 150 கி.மீ. தூரம். ஒரு குன்றின் மேல் உள்ள சிவாலயம். அதை ஸ்ரீ சைல சிவாலயத் தின் கிழக்கு வாசல் இது என்பார்கள். சிவன் த்ரிபுராந்தகேஸ்வரர்.

இங்கிருந்து 2 கி.மீ. பொடி நடையாக வேர்க்கடலை குறித்துக்கொண்டு காலாற நடந்தால் ஒரு அம்பாள் ஆலயம். அவள் பெயர் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மவாரி. சுற்றி ஒரு குளம்.
த்ரிபுராந்தகேஸ்வரர் கர்பக்கிருஹத்தில் குட்டி லிங்கமாகத் தான் இருக்கிறார். அருகே குன்றின் மேல் ஆகாயமே விதானமாக மலையுச்சியே பீடமாகவும் சிவலிங்கம் ஆளுயுரத்துக்கு மேல் இருக்கிறாரா?அந்த பெரிய லிங்கம் தான் மஹா பெரியவா கவனத்தை கவர்ந்ததா ?
No comments:
Post a Comment