Saturday, April 23, 2022

GURU STHOTHRAM

 


குரு ஸ்தோத்ரம் -  நங்கநல்லூர்  J K   சிவன் 

குருவே சரணம் 


தெளிவான  ஆங்கிலத்தில் மிருதுவாக  உபன்யாசம் செய்து எண்ணற்ற அன்பர்களுக்கு  ஞானம் வழங்கிய ஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகளை நினைவிருக்கிறதா. அவரது பல உபன்யாசங்களை கேட்டிருக்கிறேன்.  அவரால் பிரபலமானது  குரு ஸ்தோத்ரம்.  இது  ஸ்காந்த புராணத்திலிருந்து  கிடைத்த  பரிசு.   பாண்டவ கீதா   குருகீதா  என்ற பிரிவுகளில்  இருந்தும்  அறியப்படும் அற்புத ஸ்லோகங்கள். குருவின் மஹிமையை  அறிவிப்பது.   குரு எப்படி  நம்மை  உயர்விப்பார் என்று கூறும், அவரை நன்றியோடு வணங்கி  சரணடையும் ஸ்லோகங்கள்.
எல்லா  குரு குளங்களிலும் கற்பிக்கப்படுகிறது.

குருவில்லாமல்  ஞானம் பெறுவது எளிதல்ல.  ப்ரம்ம ஞானிகள் மனிதராக பிறந்தால் மட்டுமே அது சாத்தியம்.  சேஷாத்திரி ஸ்வாமிகள்,  ரமணர்  போன்றவர்கள் அப்படி தோன்றியவர்கள்.  நம்மைப்போன்றோர்  கடைத்தேற  நமக்கு ஒரு வழிகாட்டியாக  அநேக  ஆச்சார்யர்கள் வாழ்வில் தேவைப்பட்டிருக்கிறார்கள்.  அது சரி, யார்  அந்த குரு?  அவர்  எப்படிப்பட்டவர்?  ஞானிகளுக்கு யார்  குரு ? என்றெல்லாம் கேள்விகள் எழும்.  ஒரு குட்டி ஸ்லோகம் அதற்கு பதிலளிக்கிறது.  அது குரு ஸ்தோத்ரம் என்ற பதிவில் வருகிறது.

1.  गुरुर्ब्रह्मा ग्रुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः । गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः ॥
1. Guru Brahma Gurur Vishnu  Guru Devo Maheshwara  Guru Saakshat Para Brahma  Tasmai Sree Gurave Namaha
1. குரு பிரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர:  குரு சாக்ஷாத் பரப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:

குரு  மாயா ஜாலங்களை செய்யாதவர்.  ப்ரம்மா விஷ்ணு  சிவா  ஆகியோரின் அம்சமாக  நமக்கு வழிகாட்டுபவர். அரும்பாடுபட்டு  த்யானம்  செய்து ஞானம் பெற்று  அறியாமையை அழித்து,  அருள்மொழிகளால் நம்மை வழி நடத்துபவர்.  அவர் தான் குரு.

2. अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् । तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥२॥
2. akhanda-mandalakaram vyaptam yena cara’caram ।tatpadam darsitam yena tasmai srīgurave namah ॥ 3॥
2. அகண்டமண்டலாகாரம் வ்யாப்தம் யேன சராசரம் தத்பதம் தர்ஶிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ:

முழுமையான, பிரிவோ,  துண்டோ இல்லாத,  எங்கும் நிறைந்த, அசைவும், அசைவில்லாததுமான  ஆத்மா ஒன்று தான் குரு.   இப்படி  தக்ஷிணாமூர்த்தியைப் போன்ற  தெய்வத்தை பிரம்மத்தை அறிந்தவர் தான் குரு. அவரையே சரணடைந்து வணங்கி  ஞானம் பெறுவோம். .

3 अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशालाकया ।चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः ॥३॥.
3. Agnyaana TimiraandhasyaGnyaana Anjana Shalaakayaa Chakshuhu Unmeelitam Yenam Tasmai Sree Gurave Namaha
3 அஜ்ஞானதிமிரான்தஸ்ய ஜ்ஞானாஞ்ஜனஶலாகயா  சக்ஷுருன்மீலிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ  

அஞ்ஞான இருளிலிருந்து விலக்கி , ஞானமாகிய ஒளியை அளிப்பவர்  தான் குரு.  ஆத்மஞானம் எனும் பிரம்மத்தை நமக்கு அடைய உதவுபவர்  குரு. அவரை வணங்குகிறேன்.

4. स्थावरं जङ्गमं व्याप्तं येन कृत्स्नं चराचरम् ।  तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥४॥
4. Sthaavaram Jangamam Vyaaptam Yatkinchit Sacharaa Charam Tatpadam Darshitam Yena Tasmai Sree Gurave Namaha
4. ஸ்தாவரம் ஜம்கமம் வ்யாப்தம் யத்கிம்சித்ஸசராசரம்  தத்பதம் தர்ஶிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ  4

எனக்கு எதை தெரிந்து கொள்ளவேண்டும், எது தேவையல்ல என்பது எனக்கே தெரியாத நிலையில் அதை உணர்வித்து அறிவு புகட்டும், சர்வ வியாபியான, அசையும் அசையா ஜீவன்கள், பொருள்கள் யாவிலும்  உள்ளுறையும்  பிரம்மமே,  குருவே, உங்களுக்கு  நமஸ்காரம்.    விழிப்பு, ஆழ்ந்த உறக்கம்,  கனவு எந்த நிலையிலும் எனக்கு ஞானம் அளிக்கும் தெய்வமே,  நமஸ்காரம்.

5. चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरम् । तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥५॥
Cid[t]-Rupenna Pari-Vyaaptam Trai-Lokyam Sa-Cara-Acaram |Tatpadam Darshitam Yena Tasmai Sree Gurave Namaha
சிதரூபேண பரி வ்யாப் தம்  த்ரைலோக்யம் ஸசராசரம் |தத்பத³ம் த³ர்ஶிதம் யேன தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ || 5 ||

இந்த மூவுலகிலும்  ஜீவிக்கும்  ஸ்தாவர  ஜங்கம , அசையும்  அசையா சர்வ ஜீவன்களுக்குள்ளும்  உறைந்து உணர்விக்கும் பராபரமே,  தங்கள் திருவடிகளை  சரணடைந்த என்னை ஆட்டுவித்து,  ஆத்ம ஒளி பெற  உதவும்  ம்  குருநாதா, உங்களுக்கு நமஸ்காரம்.

6. सर्वश्रुतिशिरोरत्नसमुद्भासितमूर्तये । वेदान्ताम्बूजसूर्याय तस्मै श्रीगुरवे नमः ॥६॥
Sarva-Shruti-Shiro-Ratna-Sam-Udbhaasita-Muurtaye | Vedaanta-Ambuuja-Suuryaaya Tasmai Shrii-Gurave Namah |
ஸர்வஶ்ருதிஶிரோரத்ன சமுத் பாசிதம்ம் மூர்த்தியே, வேதாந்தாம்புஜஸூர்யோயஃ தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ  6

நாதம்  சப்த ஸ்வரங்களிலும் ஸ்ருதிகளிலும்  அடங்கியது.  நாதோபாஸனையாக  என் குருவே  உங்களை  நமஸ்கரிக்கிறேன்.  நாத ரூபன்   தாங்களே,ஸ்ருதி ஸ்வரூபனும்  தாங்களே,   வேதாந்த சாரமும் நீங்களே, ஞானம் நிறைந்த சிரத்தின் ஒளிவீசும் ரத்னமாக  திகழும்  குருவே  உங்களை நமஸ்கரிக்கிறேன். 
தொடரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...