பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
67 சித்தூர், வேலூர் விஜய யாத்திரை.
மஹா பெரியவா சித்தூர் வருகிறார் என்கிற சேதி அந்த பகுதி வாழ் பக்தர்களுக்கு ஆனந்தத்தை அளித்தது. ஆந்திராவில் சந்திரகிரி மண்டலத்தை சேர்ந்த இந்த ஊர் மூன்று ஆறுகள் சங்கமமாகும் ஸ்தலம். ஸ்வர்ணமுகி, கல்யாணி, பீமா என்பவை அவை.தொண்டவடா என்ற அந்த ஸ்தலத்தில் அகஸ்தீஸ்வர சுவாமி ஆலயம் ரொம்ப புராதனமானது. திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து பொடி நடையாக 15 நிமிஷத்தில் அடைந்துவிடலாம். அகஸ்தியரால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட சிவாலயம். மூன்று வாசல்கள். துவாரபாலகர்கள் அழகாக செதுக்கப்பட்ட சிலைகள். ரெண்டாவது பிரகாரத்தில் பார்வதி அம்மன் சந்நிதி. அம்பாளுக்கு வள்ளி மாதா என்ற பெயர். ஆலய எதிரில் ஆழமான ஆறு. அதன் மத்தியில் நீராழி மண்டபம். ,மண்டபத்தில் பாலாஜி, ஐயப்பன் , கணேசர் விக்ரஹங்கள்.
ஸ்ரீ அகத்திய பெருமானால் பூஜிக்கப்பட்டு நிறுவப்பட்ட லிங்கங்களுள் ஒன்று அகஸ்தீஸ்வரர் ஆலய லிங்கம். .விஷ்ணுபகவானின் பாத தரிசனமும் பகவானின் சிலையும் முன்னே இருக்க சிவபெருமான் லிங்கமாக பின்னே இருக்கிறார்..
சித்தூரில் மஹா பெரியவா தங்குவதற்கு வியாச மண்டபம் தயாரானது. அகஸ்தீஸ்வரன் ஆலயம் எதிரே அது உருவாயிற்று. வியாச பூஜைக்கு முதல் நாள் மஹா பெரியவா வந்துவிட்டார். கோலாகலமான வரவேற்பு. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஜயம். பல்லக்கில் நகர்வலம் ஏற்பாடு செய்திருந்தார்கள். சித்தூரை சேர்ந்த அந்தகூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள், மடத்துக்கு பிரதம நிர்வாகி, வக்கீல் C . வெங்கட்ராம ஐயர், ஸ்வாமிகளை பூர்ண கும்பத்துடன் வரவேற்று வியாச ,மண்டபம் அழைத்துச் சென்றார்கள். பூஜை விமரிசையாக நடந்தது. வியாச அக்ஷதை, பிரசாதம் அனைவருக்கும் அளிக்கப்பட்டது.
சாயந்திரம் வேதாந்த மாநாடு நடந்தது. அதில் மைலாப்பூர் ஸம்ஸ்க்ரித கல்லூரி தலைவர் வேதாந்த விபூஷணம் கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகள் தலைமை வகித்தார். வேதாந்த தர்க்கத்தில் பங்கு கொண்ட மற்றும் சிலர் பெயர்கள்: சாஸ்த்ர ரத்நாகர திருவையாறு விஸ்வநாத சாஸ்திரிகள், புளகம் ராம சாஸ்திரிகள், வரகூர் வெங்கட்ராம சாஸ்திரிகள், பக்ஷி தீர்த்தம் T A வெங்கடேச தீக்ஷிதர், மதுரை K V சுப்ரமணிய சாஸ்திரிகள் மடத்து ஆஸ்தான வித்வான் லக்ஷ்மி நாராயண சாஸ்திரிகள், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ப்ரம்ம ஸ்ரீ வெங்கடேச தீக்ஷிதர் மஹா பெரியவா மீது தான் இயற்றிய 15 ஸ்லோகங்களை வாசித்தார். சபையில் அனைவருக்கும் ஸமஸ்க்ரிதம் தெரியாது அல்லவா? ஆகவே அர்த்தத்தை விளக்கினார்.
கோவில்களி லிருந்தெல்லாம் அர்ச்சகர்கள் ப்ரசாதத்துடன் மஹா பெரியவா தரிசனம் பெற வந்தார்கள். சித்தூர் முழுதும் ஆனந்த பரவசத்தில் இருந்தது என்பது வாஸ்தவம்.
மஹா பெரியவா சித்தூரில் ரெண்டு மாச காலம் தங்கி இருந்து அனைவருக்கும் தரிசனம் கொடுத்து எல்லோருடனும் பேசினார். சாதுர்மாஸ்ய விரதம் பூர்த்தியாயிற்று.
1931ம் வருஷம் செப்டம்பர் மாதம் 26ம் தேதி சாதுர்மாஸ்யம் முடிந்து மஹா பெரியவா பரிவாரத்தோடு முருக்கம்பட்டு கிராமம் சென்றார். இது எங்கிருக்கிறது என்று என்னால் தேட முடியவில்லை. சந்திர கிரஹணம் என்பதால் அங்கே ஸ்நானம் செய்ய சென்றார். மறுநாள் காலை விஸ்வரூப யாத்ரா துவங்கிற்று.
''மஹா பெரியவா, நீங்க இங்கே நவராத்திரிக்கும் இருக்கணும்'' என்று பக்தர்கள் வேண்டிக் கொண்டார்கள்.
''ஆஹா வருகிறேன்'' என்று அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி மஹா பெரியவா அக்டோபர் 1931, 12ம் தேதி சித்தூரில் நவராத்ரி வைபவத்தை கொண்டாட அக்டோபர் மாதம் பூரா அங்கே இருந்தார்.
பிறகு தான் அங்கிருந்து குடியாத்தம், வைத்தியநாத குப்பம், காட்பாடி, வழியாக சென்று வேலூர் விஜயம் நடைபெற்றது. டிசம்பர் மாதம் 22தேதி வரை மஹா பெரியவா வேலூரில் இருந்தார் . அவர் வாசம் செய்த இடம் தோட்டப்பாளையம் ஸ்ரீதாரகேஸ்வரர் கோயில்.

No comments:
Post a Comment