Saturday, August 21, 2021

SRI MAN NARAYANEEYAM

 


ஸ்ரீமந்  நாராயணீயம் -   நங்கநல்லூர்  
36வது தசகம் 

36.  நீயே  பரசுராமன்.

மேப்பத்தூர்  நாராயண நம்பூதிரி குருவாயூரப்பன் எதிரில் அமர்ந்து அவன் பழைய ஜாதகத்தை புரட்டுகிறார்.ஒவ்வொரு தசகத்திலும் ஒரு சரித்திரம் சொல்கிறார்.  நாராயணீயமும் ஒரு பாகவதம் தான். 
குருவாயூரப்பா,  ஒரு காலத்தில்  க்ஷத்ரியர்கள்  தங்களது  பலத்தால், சக்தியால், அதிகாரத்தால், அக்கிரமங்கள் புரிந்து எளியவர்களை, அடியவர்களை, பிராமணர்களை  அச்சத்தில் ஆழ்த்தி  கொடுமைகளை  செய்து இதற்கு ஒரு மாற்றம் அவசியம் என்ற நிலை வந்தபோது வழக்கம்போல் தேவர்கள்  ஸ்ரீமந்  நாராயணனாகிய உன்னையே  அணுகினார்கள். க்ஷத்ரியர்களை ஒடுக்க  நாராயணா, நீ எடுத்தது தான் பரசுராம அவதாரம்.  பிறந்தது ஒரு ரிஷி குடும்பத்தில்,  ஜமதக்னி மகரிஷி  ரேணுகா தேவி புதல்வனாக. உன் தந்தையைக்  கொன்ற  கார்த்தவீர்யார்ஜுனனிலிருந்து  ஆரம்பித்தாய் க்ஷத்ரியர்களை அழிக்க.  21 தலைமுறையை தொடர்ந்து  அழித்தாய்.

अत्रे: पुत्रतया पुरा त्वमनसूयायां हि दत्ताभिधो
जात: शिष्यनिबन्धतन्द्रितमना: स्वस्थश्चरन् कान्तया ।
दृष्टो भक्ततमेन हेहयमहीपालेन तस्मै वरा-
नष्टैश्वर्यमुखान् प्रदाय ददिथ स्वेनैव चान्ते वधम् ॥१॥

atreH putratayaa puraa tvamanasuuyaayaaM hi dattaabhidhO
jaataH shiShyanibandhatandritamanaaH svasthashcharan kaantayaa |
dR^iShTO bhaktatamena hehayamahiipaalena tasmai varaan
aShTaishvarya mukhaan pradaaya daditha svenaiva chaante vadham || 1

அத்ரே꞉ புத்ரதயா புரா த்வமனஸூயாயாம் ஹி த³த்தாபி⁴தோ⁴
ஜாத꞉ ஶிஷ்யனிப³ந்த⁴தந்த்³ரிதமனா꞉ ஸ்வஸ்த²ஶ்சரன்காந்தயா |
த்³ருஷ்டோ ப⁴க்ததமேன ஹேஹயமஹீபாலேன தஸ்மை வரா-
நஷ்டைஶ்வர்யமுகா²ன்ப்ரதா³ய த³தி³த² ஸ்வேனைவ சாந்தே வத⁴ம் || 36-1 ||

நீ  தத்தாத்ரேயனாக  அவதரித்தாய்,  அத்ரி அனசூயாவுக்கு மகனாக.  அவதூதனாக  வெளியே கிளம்பிவிட்டாய்.  உலகமே வெறுத்து, மறந்து போய்விட்டது உனக்கு.  ஹேஹய  ராஜா  கார்த்த வீர்யார்ஜுனன் உன்னை சந்திக்கிறான்.   உன்னை வணங்கியவனுக்கு  எட்டுமடங்கு செல்வம் பெருக  வரமளித்தாய். உன் கரத்தாலேயே  அவனுக்கு மரணம் என்ற ஒரு வரமும்  கூடவே   அளித்தாய்.  

सत्यं कर्तुमथार्जुनस्य च वरं तच्छक्तिमात्रानतं
ब्रह्मद्वेषि तदाखिलं नृपकुलं हन्तुं च भूमेर्भरम् ।
सञ्जातो जमदग्नितो भृगुकुले त्वं रेणुकायां हरे
रामो नाम तदात्मजेष्ववरज: पित्रोरधा: सम्मदम् ॥२॥

satyaM kartumathaarjunasya cha varaM tachChakti maatraanataM
brahmadveShi tadaakhilaM nR^ipakulaM hantuM cha bhuumerbharam |
sa~njaatO jamadagnitO bhR^igukule tvaM reNukaayaaM hare
raamO naama tadaatmajeShvavarajaH pitrOradhaassammadam ||2

ஸத்யம் கர்துமதா²ர்ஜுனஸ்ய ச வரம் தச்ச²க்திமாத்ரானதம்
ப்³ரஹ்மத்³வேஷி ததா³கி²லம் ந்ருபகுலம் ஹந்தும் ச பூ⁴மேர்ப⁴ரம் |
ஸஞ்ஜாதோ ஜமத³க்³னிதோ ப்⁴ருகு³குலே த்வம் ரேணுகாயாம் ஹரே
ராமோ நாம ததா³த்மஜேஷ்வவரஜ꞉ பித்ரோரதா⁴꞉ ஸம்மத³ம் || 36-2 ||

என்னப்பா, கிருஷ்ணா,  நீ  அப்புறம் என்ன செய்தாய் என்று சொல்லட்டுமா?  கார்த்த  வீர்யார்ஜுனனுக்கு கொடுத்த வரத்தை  நீ தானே  நிறைவேற்றமுடியும்? உன் கையால் தானே அவனுக்கு மரணம்?   அவனுக்கு தெரியும் நீ அவனை அழிக்க மாட்டாய், அவன் உன் பக்தன்  என்று. ஆகவே  வேத பிராமணர்களை, ரிஷிகளை, முனிவர்களை எல்லாம் கொடுமைப் படுத்தினான். இப்படிப்பட்ட அதிகார துஷ்ப்ரயோக ராஜாக்களை அழிக்க, பூமிக்கு சுமையாக இருக்கும் அவர்களை ஒழிக்க, நீ  பிருகு ரிஷி வம்சத்தில் அவதரித்தாய்.   ஜமதக்னி மஹரிஷியின் கனிஷ்ட குமாரனாக பிறந்தாய்.  உன் தாய் ரேணுகா தேவி மகிழ்ந்தாள். உனக்கு ராமன் என்று பெயரிட்டார்கள். 

लब्धाम्नायगणश्चतुर्दशवया गन्धर्वराजे मना-
गासक्तां किल मातरं प्रति पितु: क्रोधाकुलस्याज्ञया ।
ताताज्ञातिगसोदरै: सममिमां छित्वाऽथ शान्तात् पितु-
स्तेषां जीवनयोगमापिथ वरं माता च तेऽदाद्वरान् ॥३॥

லப்³தா⁴ம்னாயக³ணஶ்சதுர்த³ஶவயா க³ந்த⁴ர்வராஜே மனா-
கா³ஸக்தாம் கில மாதரம் ப்ரதி பிது꞉ க்ரோதா⁴குலஸ்யாஜ்ஞயா |
தாதாஜ்ஞாதிக³ஸோத³ரை꞉ ஸமமிமாம் சி²த்வாத² ஶாந்தாத்பிது-
ஸ்தேஷாம் ஜீவனயோக³மாபித² வரம் மாதா ச தே(அ)தா³த்³வரான் || 36-3 ||

labdhaamnaayagaNashchaturdashavayaaH gandharvaraaje manaagaasaktaaM
kila maataraM prati pituH krOdhaakulasyaaj~nayaa |
taataaj~naatigasOdaraiH samamimaaM Chitvaa(a)tha shaantaat pitusteShaaM
jiivanayOgamaapitha varaM maataa cha te(a)daadvaraan ||3

காலம் ஓடியது. நீ  வளர்ந்தாய். பதினாலு வயதாகிவிட்டது. வேதங்களை எல்லாம் கற்று தீர்த்து விட்டாய். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை அல்லவா? அப்பாவின் ஆணையில் அம்மாவை சிரச்சேதம் செய்தாய்.  உன் சகோதரர்கள் அப்பா சொல் படி நடக்காததால் அவர்களையும் கொன்றாய்.  அப்பா கோபம் தணிந்த  பின் சமயம் பார்த்து ஒரு   வரம் கேட்டாய். அதன்படி  உன் சகோதரர்கள், அம்மா எல்லோரையும் உயிர் பிழைக்க வைத்தாய்.  ரேணுகா தேவி மனமகிழ்ந்து உன்னை ஆசிர்வதித்தாள்.

पित्रा मातृमुदे स्तवाहृतवियद्धेनोर्निजादाश्रमात्
प्रस्थायाथ भृगोर्गिरा हिमगिरावाराध्य गौरीपतिम् ।
लब्ध्वा तत्परशुं तदुक्तदनुजच्छेदी महास्त्रादिकं
प्राप्तो मित्रमथाकृतव्रणमुनिं प्राप्यागम: स्वाश्रमम् ॥४॥

pitraa maatR^imude stavaahR^itaviyaddhenOrnijaadaashramaat
prasthaayaatha bhR^igOrgiraa himagiraavaaraadhya gauriipatim |
labdhvaa tatparashuM taduktadanujachChedii mahaastraadikaM
praaptO mitramathaakR^itavraNamuniM praapyaagamaH svaashramam ||4\

பித்ரா மாத்ருமுதே³ ஸ்தவாஹ்ருதவியத்³தே⁴னோர்னிஜாதா³ஶ்ரமாத்
ப்ரஸ்தா²யாத² ப்⁴ருகோ³ர்கி³ரா ஹிமகி³ராவாராத்⁴ய கௌ³ரீபதிம் |
லப்³த்⁴வா தத்பரஶும் தது³க்தத³னுஜச்சே²தீ³ மஹாஸ்த்ராதி³கம்
ப்ராப்தோ மித்ரமதா²க்ருதவ்ரணமுனிம் ப்ராப்யாக³ம꞉ ஸ்வாஶ்ரமம் || 36-4 ||

குருவாயூரப்பா,   ஜமதக்னி ஆஸ்ரமத்தில் காமதேனு  அப்போது இருந்தது  ரேணுகா தேவியை மகிழ்விக்க  ரிஷி கொண்டு வந்திருந்தார்.   ஜமதக்னி ஆஸ்ரமத்திலிருந்து  ராமனாகிய   நீ   பிருகு மகரிஷி ஆசியுடன்  புறப்பட்டு ஹிமாச்சல பர்வதம் நோக்கி சென்றாய்.   பரமேஸ்வரனை  தியானித்து வணங்கினாய்.   பரமேஸ்வரன் உனக்கு  பரசு எனும் கோடாலி போன்ற ஒரு  ஆயுதம் பரிசளித்தார்.   அது முதல் நீ பரசுராமன் என்று பேர் பெற்றாய். அசுரர்களை அழித்தாய்.  நிறைய  அஸ்திரங்கள் பரிசாக பெற்றாய்.  அக்ருதவ்ரண  முனிவரின் நட்பை பெற்றாய்.  ஆஸ்ரமத்துக்கு திரும்பி வந்தாய். 

आखेटोपगतोऽर्जुन: सुरगवीसम्प्राप्तसम्पद्गणै-
स्त्वत्पित्रा परिपूजित: पुरगतो दुर्मन्त्रिवाचा पुन: ।
गां क्रेतुं सचिवं न्ययुङ्क्त कुधिया तेनापि रुन्धन्मुनि-
प्राणक्षेपसरोषगोहतचमूचक्रेण वत्सो हृत: ॥५॥

aakheTOpagatO(a)rjunaH suragavii sampraaptasampadgaNaiH
tvatpitraa paripuujitaH puragatO durmanitra vaachaa punaH |
gaaM kretuM sachivaM nyayunkta kudhiyaa tenaapi rundhanmunipraaNakshepa
sarOSha gOhata chamuuchakreNa vatsO hR^itaH ||5

ஆகே²டோபக³தோ(அ)ர்ஜுன꞉ ஸுரக³வீஸம்ப்ராப்தஸம்பத்³க³ணை-
ஸ்த்வத்பித்ரா பரிபூஜித꞉ புரக³தோ து³ர்மந்த்ரிவாசா புன꞉ |
கா³ம் க்ரேதும் ஸசிவம் ந்யயுங்க்த குதி⁴யா தேனாபி ருந்த⁴ன்முனி-
ப்ராணக்ஷேபஸரோஷகோ³ஹதசமூசக்ரேண வத்ஸோ ஹ்ருத꞉ || 36-5 ||

கிருஷ்ணா, இந்த நேரத்தில் தான்  கார்த்தவீர்யார்ஜுனன் வனத்தில் வேட்டையாடிவிட்டு பரிவாரங்களோடு உன் தந்தை ஜமதக்னி ஆஸ்ரமத்துக்கு  களைப்பாற வந்தான். உன் தந்தை மகரிஷி ஜமதக்னி அவர்களை எல்லாம்  உபசரித்து  காமதேனு மூலம்  எல்லா சௌகர்யங்களும் ஆகாராதிகளும்  அனைவருக்கும் தாராளமாக   வழங்கிடச் செய்தார்.   கார்த்தவீர்யார்ஜுனன்  அசந்து போனான்.  அட  ஒரு பசு இவ்வளவு  செல்வங்களைத்  தருமா?  ஆச்சர்யமாக இருக்கிறதே!. 

 ''மகரிஷி உங்களுக்கு எதற்கு இந்த பசு,  இதை என்னிடம் கொடுங்கள்'' என்று  கேட்டு  மந்திரியை அனுப்பினான் . அந்த பசு  யாரிடமும் வராது என்று சொன்னதும், காமதேனுவை  பலவந்தமாக  இழுத்துப்போக முயற்சித்தார்கள்.  அதைத் தடுத்த உன் தந்தையை அங்கேயே  கொன்றார்கள்.   காமதேனுவின்  கன்றுக்  குட்டியை கடத்திச் சென்றனர்.
 
शुक्रोज्जीविततातवाक्यचलितक्रोधोऽथ सख्या समं
बिभ्रद्ध्यातमहोदरोपनिहितं चापं कुठारं शरान् ।
आरूढ: सहवाहयन्तृकरथं माहिष्मतीमाविशन्
वाग्भिर्वत्समदाशुषि क्षितिपतौ सम्प्रास्तुथा: सङ्गरम् ॥६॥

shukrOjjiivita taatavaakya chalita krOdhO(a)tha sakhyaa samaM
vibhraddhyaata mahOdarOpanihitaM chaapaM kuThaaraM sharaan |
aaruuDhassahavaahayantR^ikarathaM maahiShmatiimaavishan
vaagbhirvatsamadaashuShi kshitipatau sampraastuthaaH sangaram ||6

ஶுக்ரோஜ்ஜீவிததாதவாக்யசலிதக்ரோதோ⁴(அ)த² ஸக்²யா ஸமம்
விப்⁴ரத்³த்⁴யாதமஹோத³ரோபனிஹிதம் சாபம் குடா²ரம் ஶரான் |
ஆரூட⁴꞉ ஸஹவாஹயந்த்ருகரத²ம் மாஹிஷ்மதீமாவிஶன்
வாக்³பி⁴ர்வத்ஸமதா³ஶுஷி க்ஷிதிபதௌ ஸம்ப்ராஸ்துதா²꞉ ஸங்க³ரம் || 36-6 ||

குருவாயூரப்பா, ஆஸ்ரமத்துக்கு   நீ  பரசுராமனாக  திரும்பி வந்தபோது   உன் தந்தைக்கு நேர்ந்த கொடுமையை அறிந்தாய்.  அவர் அசுரகுரு  சுக்ராச்சார்யரால்  உயிர்பிக்கப்பட்டதை அறிந்தான்.  அக்ருதவர்ண முனிவருடன் பரமேஸ்வரனை  தியானித்தாய்.   வில், பரசு,  அம்புகள்  பரமேஸ்வ ரனிடமிருந்து மஹோதரன் என்பவனால் கொண்டுவந்து தரப்பட்டது. அவற்றுடன்  கிளம்பிவிட்டாய்.  மஹோதரன் தேர் ஒன்று கொண்டு வந்திருந்தான்.     நேராக கார்த்தவீர்யார்ஜுனனிடம் சென்று  காமதேனுவின் கன்றுக்குட்டியை திரும்பக்   கொடு என்று கேட்டாய். பலமுறை அமைதியாகக்  கேட்டும் அவன் தர இசையவில்லை.  கார்தவீர்யார்ஜுனனுடன் யுத்தம் தொடர்ந்தாய்..  

पुत्राणामयुतेन सप्तदशभिश्चाक्षौहिणीभिर्महा-
सेनानीभिरनेकमित्रनिवहैर्व्याजृम्भितायोधन: ।
सद्यस्त्वत्ककुठारबाणविदलन्निश्शेषसैन्योत्करो
भीतिप्रद्रुतनष्टशिष्टतनयस्त्वामापतत् हेहय: ॥७॥

putraaNaamayutena saptadashabhishchaakshauhiNiibhirmahaasenaaniibhiraneka
mitra nivahairvyaajR^imbhitaayOdhanaH |
sadyastvatka kuThaara baaNa vidalannishsheSha sainyOtkarO
bhiitipradrutanaShTashiShTatanaya stvaamaapatad hehayaH ||7

புத்ராணாமயுதேன ஸப்தத³ஶபி⁴ஶ்சாக்ஷௌஹிணீபி⁴ர்மஹா-
ஸேனானீபி⁴ரனேகமித்ரனிவஹைர்வ்யாஜ்ரும்பி⁴தாயோத⁴ன꞉ |
ஸத்³யஸ்த்வத்ககுடா²ரபா³ணவித³லன்னிஶ்ஶேஷஸைன்யோத்கரோ
பீ⁴திப்ரத்³ருதனஷ்டஶிஷ்டதனயஸ்த்வாமாபதத்³தே⁴ஹய꞉ || 36-7 ||

அடேயப்பா,  கார்த்தவீர்யார்ஜுனனுக்கு பத்தாயிரம் பிள்ளைகள்,  17 பிரிவு பெரிய  சேனை, 
எண்ணற்ற  சேனாபதிகள், காலாட்படை வீரர்கள்.  உன்னுடைய  வெள்ளைநிற  பரமேஸ்வரன் அளித்த பரசுவை கையில் எடுத்தாய்.   சூரிய  ஒளியில் அது  தகதகவென  மின்னியது .   அவன்படையை  நிர்மூலம் செய்தாய். உயிர்  பிழைக்க  எஞ்சிய பலர் தப்பி ஓடிவிட்டார்கள்.   மீதி   பிள்ளைகளோடு கார்த்தவீர்யார்ஜுனன் போரைத்  தொடர்ந்தான். 

लीलावारितनर्मदाजलवलल्लङ्केशगर्वापह-
श्रीमद्बाहुसहस्रमुक्तबहुशस्त्रास्त्रं निरुन्धन्नमुम् ।
चक्रे त्वय्यथ वैष्णवेऽपि विफले बुद्ध्वा हरिं त्वां मुदा
ध्यायन्तं छितसर्वदोषमवधी: सोऽगात् परं ते पदम् ॥८॥

liilaavaarita narmadaajalavalallankesha garvaapahashriimadbaahu
sahasramukta bahushastraastraM nirundhannamum |
chakre tvayyatha vaiShNave(a)pi viphale buddhvaa hariM tvaaM mudaa
dhyaayantaM ChitasarvadOShamavadhiiH sO(a)gaat paraM te padam ||8

லீலாவாரிதனர்மதா³ஜலவலல்லங்கேஶக³ர்வாபஹ-
ஶ்ரீமத்³பா³ஹுஸஹஸ்ரமுக்தப³ஹுஶஸ்த்ராஸ்த்ரம் நிருந்த⁴ன்னமும் |
சக்ரே த்வய்யத² வைஷ்ணவே(அ)பி விப²லே பு³த்³த்⁴வா ஹரிம் த்வாம் முதா³
த்⁴யாயந்தம் சி²தஸர்வதோ³ஷமவதீ⁴꞉ ஸோ(அ)கா³த்பரம் தே பத³ம் || 36-8 ||

குட்டி கிருஷ்ணா, இந்த  கார்த்தவீர்யார்ஜுனன் என்ன  செய்தவன் தெரியுமா?  ஒரு முறை,  நர்மதா  நதி பொங்கி வரும்போது  தனது ரெண்டாயிரம் கரங்களால்  அணையாக  தடுத்தவன். இது ஒரு விளையாட்டு அவனுக்கு.  ராவணன் அங்கே  தியானம் பண்ணிக்கொண்டிருந்தப்பது அவனை சீண்டி விளையாடி ராவணனின் கர்வத்தை, ஆணவத்தை அழித்தவன்.  அவனிடம் பல  தெய்வீக ஆயுதங்கள் இருந்தது.   அவை எல்லாவற்றையும்   பரசுராமனாக வந்த  உன்னைக் கொல்ல உபயோகப்படுத்தினான்.   முடியுமா?  உன் சுதர்சன சக்ரம் ஒன்றே அதற்கு பதிலளித்து  நிர்மூலமாக்கியது.  இதிலிருந்தே  இந்த பரசுராமன் வேறு யாருமில்லை மஹா விஷ்ணு தான் என்று புரிந்து கொண்டான் கார்த்த வீர்யார்ஜுனன்.  உடனே  உன்னை தியானித்தான்.   அவன் பாபங்களை விலக்கினாய் . அவனை சம்ஹரித்தாய். 

भूयोऽमर्षितहेहयात्मजगणैस्ताते हते रेणुका-
माघ्नानां हृदयं निरीक्ष्य बहुशो घोरां प्रतिज्ञां वहन् ।
ध्यानानीतरथायुधस्त्वमकृथा विप्रद्रुह: क्षत्रियान्
दिक्चक्रेषु कुठारयन् विशिखयन् नि:क्षत्रियां मेदिनीम् ॥९॥

bhuuyO(a)marShita hehayaatmajagaNaistaate hate reNukaa
maaghnaanaaM hR^idayaM niriikshya bahushO ghOraaM pratij~naaM vahan |
dhyaanaaniitarathaayudhastvamakR^ithaa vipradruhaH kshatriyaan
dikchakreShu kuThaarayan vishikhayan niHkshatriyaaM mediniim ||9

பூ⁴யோ(அ)மர்ஷிதஹேஹயாத்மஜக³ணைஸ்தாதே ஹதே ரேணுகா-
மாக்⁴னானாம் ஹ்ருத³யம் நிரீக்ஷ்ய ப³ஹுஶோ கோ⁴ராம் ப்ரதிஜ்ஞாம் வஹன் |
த்⁴யானானீதரதா²யுத⁴ஸ்த்வமக்ருதா² விப்ரத்³ருஹ꞉ க்ஷத்ரியான்
தி³க்சக்ரேஷு குடா²ரயன்விஶிக²யன் நி꞉க்ஷத்ரியாம் மேதி³னீம் || 36-9 ||

அப்புறம் என்ன  ஆயிற்று?   யாராலும் வெல்ல முடியாத  கார்த்த வீர்யார்ஜுனன் மாண்டான் என்று அறிந்த அவன் பிள்ளைகள்  உன் தந்தை ஜமதக்னி மகரிஷியை பழி வாங்கக்  கொன்றார்கள்.  ரேணுகா தேவி கதறி அழுதாள்.   அவள் கதறலைக் கேட்ட  நீ  ஒரு விரதம் பூண்டாய். தியானம் செய்தாய்.   தேவலோகத்திலிருந்து  தேர்  ஆயுதங்கள் வந்தது. இனி ஒரு க்ஷத்ரியனை விட்டு வைப்பதில்லை என்று தீர்மானித்தாய். நாலா பக்கமும் சென்றாய்.  க்ஷத்ரியர்கள் தலை உருண்டது.  பூமியில் க்ஷத்ரியர்கள் குறைந்துவிட்டனர். 

तातोज्जीवनकृन्नृपालककुलं त्रिस्सप्तकृत्वो जयन्
सन्तर्प्याथ समन्तपञ्चकमहारक्तहृदौघे पितृन्
यज्ञे क्ष्मामपि काश्यपादिषु दिशन् साल्वेन युध्यन् पुन:
कृष्णोऽमुं निहनिष्यतीति शमितो युद्धात् कुमारैर्भवान् ॥१०॥

taatOjjiivanakR^innR^ipaalakakulaM trissaptakR^itvO jayan
santarpyaatha samantapa~nchaka mahaaraktahradaughe pitR^In |
yaj~ne kshmaamapi kaashyapaadiShu dishan saalvena yudhyan punaH
kR^iShNO(a)muM nihaniShyatiiti shamitO yudbaatkumaarairbhavaan ||10

தாதோஜ்ஜீவனக்ருன்ன்ருபாலககுலம் த்ரிஸ்ஸப்தக்ருத்வோ ஜயன்
ஸந்தர்ப்யாத² ஸமந்தபஞ்சகமஹாரக்தஹ்ருதௌ³கே⁴ பித்ருன் |
யஜ்ஞே க்ஷ்மாமபி காஶ்யபாதி³ஷு தி³ஶன் ஸால்வேன யுத்⁴யன் புன꞉
க்ருஷ்ணோ(அ)மும் நிஹனிஷ்யதீதி ஶமிதோ யுத்³தா⁴த் குமாரைர்ப⁴வான் || 36-10 ||

பரசுராமனாக அவதரித்த  உண்ணி கிருஷ்ணா, அப்புறம் நீ உன் தந்தை ஜமதக்னி ரிஷியை உயிர்ப்பித்தாய். ராஜாக்கள்  அழிந்தார்கள். முன்னோர்களுக்கு  வந்தனம்  செய்தாய். சாமந்த பஞ்சகம் குளம்  ரத்தத்தால் நிறைந்தது.  நீ வென்ற ராஜ்ஜியங்கள், நிலம் அனைத்தையும்  காஸ்யப முனிவர் மற்ற ரிஷிகளுக்கு எல்லாம் அளித்தாய்.  சால்யன் எனும் ராஜா பாக்கி இருந்தான். அவனோடு மோதினாய். அப்போது தான் ஸநத்குமார ரிஷி  உன்னைத்   தடுத்தார்.  ''பரசுராமா,   அது உன் வேலை அல்ல,  சால்வனின் முடிவு  ஸ்ரீ கிருஷ்ணன் கையால்''  என்று அறிவுரை கூறினார். 

न्यस्यास्त्राणि महेन्द्रभूभृति तपस्तन्वन् पुनर्मज्जितां
गोकर्णावधि सागरेण धरणीं दृष्ट्वार्थितस्तापसै: ।
ध्यातेष्वासधृतानलास्त्रचकितं सिन्धुं स्रुवक्षेपणा-
दुत्सार्योद्धृतकेरलो भृगुपते वातेश संरक्ष माम् ॥११॥

nyasyaastraaNi mahendrabhuubhR^iti tapastanvan punarmajjitaaM
gOkarNaavadhi saagareNa dharaNiiM dR^iShTvaarthitastaapasaiH |
dhyaateShvaasadhR^itaanalaastra chakitaM sindhuM sruvakshepaNaadutsaaryOddhR^
itakeralO bhR^igupate vaatesha sanraksha maam ||11

ந்யஸ்யாஸ்த்ராணி மஹேந்த்³ரபூ⁴ப்⁴ருதி தபஸ்தன்வன்புனர்மஜ்ஜிதாம்
கோ³கர்ணாவதி⁴ ஸாக³ரேண த⁴ரணீம் த்³ருஷ்ட்வார்தி²தஸ்தாபஸை꞉ |
த்⁴யாதேஷ்வாஸத்⁴ருதானலாஸ்த்ரசகிதம் ஸிந்து⁴ம் ஸ்ருவக்ஷேபணா-
து³த்ஸார்யோத்³த்⁴ருதகேரலோ ப்⁴ருகு³பதே வாதேஶ ஸம்ரக்ஷ மாம் || 36-11


எண்டே குருவாயூரப்பா,  நீ தானடா  பரசுராமன்.  ஆயுதங்களை வீசி எறிந்தாய். மஹேந்த்ர  பர்வதத்துக்கு சென்றாய். தியானத்தில் அமர்ந்தாய்.    சமுத்திரம்  கோகர்ணத்திலிருந்து  ஆரம்பித்து பூமியை  மூழ்கடித்துவிட்டதை கவனித்தாய்.  பல  ரிஷிகளின் முனிவர்களின் பிரார்த்தனை உன் காதில் விழுந்தது.  தியானத்தால் உன் வில் உன் முன் தோன்றியது. அக்னி அஸ்திரத்தை அதில் தொடுத்து  சமுத்திரத்தின் மீது செலுத்தினாய்.  அக்னி   கடல்  நீரை வற்றச் செய்தது. கேரள  பூமி   சமுத்திரத்தில் இருந்து கடல்  மேலே வந்து உருவானது.  இன்றும் கேரளத்துக்கு பரசுராம க்ஷேத்ரம் என்று தானே பெயர்.   
அப்பனே, குருவாயூரா , எனது நோயையும் தீர்த்து என்னை ரக்ஷிக்க வேண்டுமப்பா. 
தொடரும் 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...