Tuesday, August 17, 2021

GEETHANJALI


கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K  SIVAN --தாகூர் 

96.  தொட்டாய் மலர்ந்தேன்...


96. When I go from hence let this be my parting word,
that what I have seen is unsurpassable.
I have tasted of the hidden honey of this lotus that expands on the ocean of light,
and thus am I blessed—let this be my parting word.
In this playhouse of infinite forms I have had my play and here have I caught sight of him that is formless.
My whole body and my limbs have thrilled with his touch who is beyond touch;
and if the end comes here, let it come—let this be my parting word.

எதுவுமே  சாஸ்வதமில்லை.  தோன்றியது எல்லாம்  மறையவேண்டும். இது நியதி.   மனிதன் உண்டாக்கியது ஒருநாள்  இல்லாமல் தான் போகும்.  மனிதனே காணாமல் போகும்போது அவனது சிருஷ்டி நிலைத்தா நிற்கும்? 
ஆகவே  இங்கிருந்து நான் செல்லும் பொழுது, இது என் கடைசி  பிரியும் சொல்லாக இருக்கட்டும்.  நான் வாழ்வில் கண்டது ஈடில்லாதது. முதன்மையானது.  வெல்லமுடியாதது.   ஒளி என்னும் பிரவாகத்தில்  மலர்ந்திருக்கும் தாமரையில்   உறைந்து, மறைந்து இருக்கும்  தேனை நான் பருகியவன். சுவைத்தவன். கிருஷ்ணா,  நான் மிகவும் கொடுத்து வைத்தவன்.  இதுவே என் பிரியும் சொல்லாக இருக்கட்டும்.  
எண்ணற்ற  உருவங்களை  தன்னில் கொண்ட  இந்த விளையாட்டு வீட்டில், என் விளையாட்டும்  ஒரு அங்கம் தான்.   இங்கு  தான்  அளவற்ற  உருவங்களிடையே  உருவமில்லா கிருஷ்ணா, உன்னைக் கண்ணாரக் கண்டேன்.  தீண்டுதலுக்கு அப்பாற்பட்ட நீ  என்னைத்  தீண்டியதால், என்  உடல் முழுதும்,   பூரா  அங்கமும்  சிலிர்த்தது.  புளகாங்கிதம் அடைந்தது. 

இப்போதே  என் முடிவு இங்கு  நிகழ்வதானால்  அது நிறைவேறட்டும். ஆஹா  நான் கொடுத்து வைத்தவன். அது தான் என்னால் சொல்ல முடியும்.  இதுவே என் பிரியும்  கடைசி  சொல்லாக இருக்கட்டும்! 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...