கீதாஞ்சலி - நங்கநல்லூர் J K சிவன்--
தாகூர்.
95 தாயுமானவன்
95. I was not aware of the moment, when I first crossed the threshold of this life.
What was the power that made me open out into this vast mystery, ike a bud in the forest at midnight!
When in the morning I looked upon the light I felt in a moment, that I was no stranger in this world,
that the inscrutable without name and form had taken me in its arms in the form of my own mother.
Even so, in death the same unknown will appear as ever known to me.
And because I love this life, I know I shall love death as well.
in the very next moment to find in the left one its consolation.
கிருஷ்ணா, என்னடா உன் அற்புத லீலை !எப்போது நான் இந்த வாழ்கையின் வாசற்படியை வலது கால் வைத்து தாண்டினேன் என்பது நினைவில் இல்லையடா. எந்த பலமான சக்தி என்னை இந்த பூதாகாரமான பிரபஞ்ச ரஹஸ்ய சுரங்கத்தில் நெட்டி தள்ளியது ? நள்ளிரவில், காட்டில் மலர்ந்த மொட்டுப்போல், தனித்துவமாக, எது என்னை இயக்கியது ?. யார் என்னை வெளிக்கொணர்ந்தது? நீ தானே?
பொழுது விடிந்ததும் நான் சூரியனின் ஒளியை அனுபவித்த போது , ''டேய் , நீ யாரோ, அந்நியன் ஒருவன் இல்லையடா, என்று தைர்யம் அளித்தது?, ஆசையும் பாசமும் மிக்க அம்மாவாக, என்னை அணைத்து முத்தமிட்ட அந்த பெயரில்லா உருவமில்லா சக்தி, தெய்வம் நீ தானே?அள்ளி என்னைத் தன் கைகளில் அனைத்து உன்னையன்றி வேறு யாராக இருக்க முடியும்?எனக்கு நன்றாக தெரியும்டா கிருஷ்ணா, எனது மரணாந்த காலத்திலும் கூட, நான் பார்க்காத அந்தச் சக்தி எனக்கு எப்பொழுதும் தெரிந்த, நான் நன்றாக அறிந்த ஒருவராக, என் கண் முன் தோன்றும். என்னை ஒருபோதும் விட்டு விடாது.
ஆகவே தான், நான் இப்போது அனுபவிக்கும் இந்த வாழ்வை விரும்புவதுபோல் என்னை நெருங்கி வரும் சாவையும் அதே விருப்பத்தோடு வரவேற்பேன் என எனக்குத் தெரியும்.
அம்மாவின் அரவணைப்பில் அவள் வலது மார்பில் பால் குடிக்கும் குழந்தையை அம்மா விலக்கும்போது என் தடுத்தாய் என்று வீல் வீல் என்று அழும் குழந்தை அவள் அடுத்த கணமே அதை தனது இடது மார்பகத்தில் பால் குடிக்க வைக்கும்போது எவ்வளவு சந்தோஷம்!. சிரிக்கிறது. கிருஷ்ணா, எனக்கு நீ அப்படி தான் கருணை நிறைந்த அம்மா.
No comments:
Post a Comment