கீதாஞ்சலி - நங்கநல்லூர் J K SIVAN --
தாகூர்
100. முடியட்டும் உயிரொலி.
தாடித் தாத்தா ரபீந்திரநாத் தாகூரின் உலகப் புகழ் பெற்ற கீதாஞ்சலி கவிதைகள் 104 இருக்கிறது. ரொம்பவும் கஷ்டம் அவரைப் புரிந்து கொள்வது. அற்புதமான எண்ணங்கள், ஆழமான சிந்தனைகள், அருமையான ஆங்கில வரிகள், உலகத்தோடு ஒட்டி வாழ்ந்து ஒட்டாத உறவு கொண்டு உருவமில்லா இறைவனை உருவங்கள் மூலம் கண்டு ரசிப்பவர். 104ல் 100 இன்று தொட்டு விட்டேன். இன்னும் நான்கு கவிதைகள். நோபல் பரிசு பெற்ற இந்த கவிதைகள் நிறைவு பெறப்போகிறது. இதுவரை படித்தீர்களே , நீங்கள் மறவாமல் ஒரு விஷயம் கவனித்தீர்களா. கிருஷ்ணனை உள்ளே புகுத்தி கீதாஞ்சலியை அளித்திருக்கிறேன். கீதாஞ்சலியை கீதாசார்யனோடு இணைத்து அளிப்பதில் ஒரு ஈடற்ற ஆனந்தம். கீதாஞ்சலி பிடித்ததா?
100. dive down into the depth of the ocean of forms,
hoping to gain the perfect pearl of the formless.
No more sailing from harbour to harbour with this my weather-beaten boat.
The days are long passed when my sport was to be tossed on waves.
And now I am eager to die into the deathless.
Into the audience hall by the fathomless abyss where swells up the music of toneless strings I shall take this harp of my life.
I shall tune it to the notes of forever, and when it has sobbed out its last utterance,
lay down my silent harp at the feet of the silent.
என் ஆழ்மனதில் உள்ள வெகுநாள் விருப்பத்தை வார்த்தைகளில் சொல்லட்டுமா?உருவமில்லாதான் அளிக்கும் ஈடற்ற நல் முத்தைப் பெற வேண்டும் என்ற ஆசையில், நான் உருவங்கள் நிறைந்த ஆழ்ந்த கடலில் மூழ்க வேண்டும். மூழ்கிவிட்டேன்.
என்னிடம் இது நாள் வரை உள்ள, பழைய, எத்தனையோ வெள்ளம், புயல், கடல் கொந்தளிப்பு எல்லாம் பார்த்து மிதந்த இந்த வயதான படகு, இனி ஒவ்வொரு இனி ஒவ்வொரு துறைமுகத்திலிருந்து அடுத்த துறைமுகத்திற்கு மிதக்கப் போவதில்லை. கடல் பிரயாணம் கிடையாது. அலைகளால் தூக்கி எறியப்பட்டு மிதந்தான் என் கடல் விளையாட்டு ஒரு முடிவுக்கு வந்து விட்டது கிருஷ்ணா.
கண்ணா, நான் உன்னை புரிந்து கொண்டவன். எனக்கு இப்போது உள்ள ஒரே எண்ணம் எது தெரியுமா? நான் என் மரணமில்லாத ஒன்றை அடைய மரணமடையவேண்டும். இதை தானே இறப்பு பிறப்பு அற்ற நிலை அடைய மறைவது என்று சொல்கிறார்கள். ஆம் அது ஒன்றே என் குறிக்கோள்.
கீழே மூழ்குகிறேன். போகப்போக ஆழமாக எல்லையற்று நீளும் படுகுழியில் ஒரு அழகான அரங்கம் தென்படுகிறது. அதற்குள் ஆனந்தமான பல வித வாத்யங்களிலிருந்து புறப்படும் இசை எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் தனித்து ஒலிக்கிறது. மூங்கில் காட்டில் காற்று புகுந்து வெளிப்படுமே அந்த ஓசை மாதிரி தான்.
இதோ அங்கே நானும் என் உயிரெனும் யாழை ஏந்திச் செல்கிறேன். உருவற்ற பலரின் உணர்வற்ற முடிவற்ற ஒலியோடு என் உயிரின் யாழிசையும் கலக்கும். என் யாழியின் இசை நிற்கும் நேரம் வரும். அப்போது பூர்ண திருப்தியோடு என் உயிர் யாழை அமைதியே உருவான உன் திருவடிகளில் சமர்ப்பிப்பேன். இந்த ஆசை நிராசையாகாமல் நிறைவேறட்டும்.
No comments:
Post a Comment