கீதாஞ்சலி - நங்கநல்லூர் J K SIVAN --
தாகூர்
101. வருவேன் உன் மாளிகையின் வாசலுக்கே.
101. Ever in my life have I sought thee with my songs.
It was they who led me from door to door, and with them have I felt about me, searching and touching my world.It was my songs that taught me all the lessons I ever learnt;
they showed me secret paths, they brought before my sight many a star on the horizon of my heart.
They guided me all the day long to the mysteries of the country of pleasure and pain, and, at last,
to what palace gate have they brought me in the evening at the end of my journey?
ஒருவன் மறக்கப்படுவதும் நினைக்கப்படுவதும் அவனால் அல்ல. அவன் செயலால். அவன் செயல் எது? அவன் சிந்தனையும் எண்ணமும், நம்பிக்கையும் தானே. அவை நல்லவையாக இருந்தால், பரோபகாரத்தோடு இருந்தால், சுயநலம் கலக்கப்படாமல் இருந்தால் அவன் மனித நிலையிலிருந்து உயர்ந்த பீடத்துக்கு எடுத்துச்சென்று வைக்கப்படுகிறான்.
கிருஷ்ணா, நான் கவிஞன். என் எண்ணங்களை வார்த்தைகளை அழகுற அடுக்கி, பிணைத்து, வார்த்து தருபவன். என் மூச்சே என் கவிதைகள் தான். என் வாழ்வில், என்றும் என் கவிதைகளால் உன்னை விடாமல் தேடியவன். என் கவிதைகள் என்னை வழிநடத்தின . வாயில் வாயிலாக என்னை எங்கெங்கோ கூட்டிச் சென்றன . அவை என் சுற்றத்தை எனக்கு உணர்த்தின. என் உலகத்தைத் தேடியதும் தீண்டியதும் அவைகளால் தான். என் பாடல்கள் தான் எனக்குப் பாடங்கள் புகட்டியவை. மறைவான, ரகசியப் பாதைகளை அவை எனக்குக் காட்டின. என் கண் முன் எத்துணையோ விண்மீன்களைக் கொணர்ந்து, அவற்றை என் நெஞ்சத்தில் அடுக்கி வைத்து நான் கண்டு மகிழச் செய்தன.
இன்பமும் துன்பமும் நிறைந்த இனம் புரியாத நாட்டிற்குள், அவை என்னை வழிகாட்டி அழைத்துச் சென்றன. இறுதியில் மாலை நேரத்தில், பயணத்தின் எல்லையில், எந்த அரண்மனை வாயிலுக்கு அவை என்னை அழைத்துச் சென்றன. அது உன் மாளிகை வாசல் தான்.
No comments:
Post a Comment