सान्द्रानन्दतनो हरे ननु पुरा दैवासुरे सङ्गरे
त्वत्कृत्ता अपि कर्मशेषवशतो ये ते न याता गतिम् ।
तेषां भूतलजन्मनां दितिभुवां भारेण दूरार्दिता
भूमि: प्राप विरिञ्चमाश्रितपदं देवै: पुरैवागतै: ॥१॥
saandraanandatanO hare nanu puraa daivaasure sangare
tvatkR^ittaa api karmasheSha vashatO ye te na yaataa gatim |
teShaaM bhuutalajanmanaaM ditibhuvaaM bhaareNa duuraarditaa
bhuumiH praapa viri~nchamaashritapadaM devaiH puraivaagataiH ||1
ஸாந்த்³ரானந்த³தனோ ஹரே நனு புரா தை³வாஸுரே ஸங்க³ரே
த்வத்க்ருத்தா அபி கர்மஶேஷவஶதோ யே தே ந யாதா க³திம் |
தேஷாம் பூ⁴தலஜன்மனாம் தி³திபு⁴வாம் பா⁴ரேண து³ரார்தி³தா
பூ⁴மி꞉ ப்ராப விரிஞ்சமாஶ்ரிதபத³ம் தே³வை꞉ புரைவாக³தை꞉ || 37-1 ||
''என்னப்பா குட்டி கிருஷ்ணா , நீ மஹா விஷ்ணு என்று எல்லோருக்கும் தெரியும். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் நடக்கும் யுத்தத்தில் நீ பங்கேற்று பல அசுரர்களை அழித்தாய் என்பது வாஸ்தவம் . சிலரது கர்மா அவரவர் நல்ல கெட்ட காரியங்களுக்கு ஏற்ப பூமியில் பிறவி எடுக்க வைக்கிறது. அதெல்லாம் கணக்கு தீருவதற்கு முன்பு அவர்கள் முக்தி அடைவது என்பது நடக்காதே. இப்படிப்பட்ட அரக்கர்கள் பூமியில் அதிகமாகி பூமா தேவி பாரம் தாங்கமுடியாமல் திணறினாள். ஒருநாள் பூமாதேவி தேவர்களோடு சேர்ந்து பிரம்மாவிடம் முறையிட்டாள்.
मेतां पालय हन्त मे विवशतां सम्पृच्छ देवानिमान् ।
इत्यादिप्रचुरप्रलापविवशामालोक्
देवानां वदनानि वीक्ष्य परितो दध्यौ भवन्तं हरे ॥२॥
haa haa durjana bhuuribhaaramathitaaM paathO nidhau paatukaaM
etaaM paalaya hanta me vivashataaM sampR^ichCha devaanimaan |
ityaadi prachura pralaapa vivashaamaalOkya dhaataa mahiiM
devaanaaM vadanaani viikshya paritO dadhyau bhavantaM hare ||2
ஹா ஹா து³ர்ஜனபூ⁴ரிபா⁴ரமதி²தாம் பாதோ²னிதௌ⁴ பாதுகா-
மேதாம் பாலய ஹந்த மே விவஶதாம் ஸம்ப்ருச்ச² தே³வானிமான் |
இத்யாதி³ப்ரசுரப்ரலாபவிவஶாமாலோ
தே³வானாம் வத³னானி வீக்ஷ்ய பரிதோ த³த்⁴யௌ ப⁴வந்தம் ஹரே || 37-2 ||
''ப்ரம்மதேவா, இனியும் என்னால் தாங்க முடியாதப்பா. வேறு வழியில்லாமல் உன்னிடம் வந்து இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று வேண்டுகிறேன். ஐயோ, இந்த அசுரர்களின் பாரம் தாங்க முடியாத நிலைக்கு என்னை தள்ளி விட்டதே என் செய்வேன். என்னை கடலில் மூழ்கடிக்கும் நிலை வந்து விடுமோஎன்று அஞ்சுகிறேன். என்னை நம்பி வாழும் உயிர்களைக் காப்பாற்ற வேண்டாமா? என் துன்பம் இங்கு கூடியுள்ள தேவர்களுக்கும் நன்றாக தெரியும். கேட்டுப்பார்.''
सर्वे शर्वपुरस्सरा वयमितो गत्वा पयोवारिधिं
नत्वा तं स्तुमहे जवादिति ययु: साकं तवाकेतनम् ॥३॥
uuche chaambuja bhuuramuunayi suraaH satyaM dharitryaa vachO
nanvasyaa bhavataaM cha rakshaNavidhau dakshO hi lakshmiipatiH |
sarve sharvapurassaraa vayamitO gatvaa payO vaaridhiM
natvaa taM stumahe javaaditi yayussaakaM tavaaketanam ||3
ஊசே சாம்பு³ஜபூ⁴ரமூனயி ஸுரா꞉ ஸத்யம் த⁴ரித்ர்யா வசோ
நன்வஸ்யா ப⁴வதாம் ச ரக்ஷணவிதௌ⁴ த³க்ஷோ ஹி லக்ஷ்மீபதி꞉ |
ஸர்வே ஶர்வபுரஸ்ஸரா வயமிதோ க³த்வா பயோவாரிதி⁴ம்
நத்வா தம் ஸ்துமஹே ஜவாதி³தி யுய꞉ ஸாகம் தவாகேதனம் || 37-3 ||
''தேவர்களே, பூமா தேவி சொல்வது அத்தனையும் உண்மை. இது சாதாரண விஷயம் இல்லை. இதற்கு பரிகாரம் தேடவேண்டுமானால் மஹா விஷ்ணு ஒருவருக்கு தான் அந்த சக்தி உண்டு. இந்த ப்ரபஞ்சத்திற்கே காக்கும் தெய்வம் அவர் ஒருவர் தான். நாம் அனைவரும் இந்த அவசர நிலைமை யை அவருக்கு அறிவித்து உடனே இதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்போம். நாம் பரமேஸ்வரனை முதலில் சென்று அவரிடமும் விஷயத்தை எடுத்துச் சொல்லி அவரையும் அழைத்துக்கொண்டு பாற்கடலுக்கு செல்வோம். மஹா விஷ்ணு இதற்கு மேல் நேரம் வீணாகாமல், தக்க நடவடிக்கை எடுப்பார்'' என்கிறார் ப்ரம்மா.
त्वद्वाचं हृदये निशम्य सकलानानन्दयन्नूचिवा-
नाख्यात: परमात्मना स्वयमहं वाक्यं तदाकर्ण्यताम् ॥४॥
te mugdhaanilashaali dugdhajaladhestiiraM gataaH sangataaH
yaavattvatpadachintanaika manasastaavatsa paathOjabhuuH |
tvadvaachaM hR^idaye nishamya sakalaan aanandayannuuchivaan
aakhyaataH paramaatmanaa svayamahaM vaakyaM tadaakarNyataam ||4
தே முக்³தா⁴னிலஶாலிது³க்³த⁴ஜலதே⁴ஸ்
யாவத்த்வத்பத³சிந்தனைகமனஸஸ்தா
த்வத்³வாசம் ஹ்ருத³யே நிஶம்ய ஸகலானானந்த³யன்னூசிவா-
நாக்²யாத꞉ பரமாத்மனா ஸ்வயமஹம் வாக்யம் ததா³கர்ண்யதாம் || 37-4 ||
மஹா விஷ்ணுவை தியானித்து ப்ரம்மா பூமாதேவியின் வேண்டுகோளை தெரிவித்தார். அப்போது பிரம்மாவிடம் நீ என்ன சொன்னாய் என்று ஞாபகம் இருக்கிறதா. உண்ணி கிருஷ்ணா?
जाने दीनदशामहं दिविषदां भूमेश्च भीमैर्नृपै-
स्तत्क्षेपाय भवामि यादवकुले सोऽहं समग्रात्मना ।
देवा वृष्णिकुले भवन्तु कलया देवाङ्गनाश्चावनौ
मत्सेवार्थमिति त्वदीयवचनं पाथोजभूरूचिवान् ॥५॥
jaane diinadashaamahaM diviShadaaM bhuumeshcha bhiimairnR^ipai
statkshepaayabhavaami yaadavakule sO(a)haM samagraatmanaa |
devaa vR^iShNikule bhavantu kalayaa devaanganaashchaavanau
matsevaarthamiti tvadiiya vachanaM paathOjabhuuruuchivaan ||5
ஜானே தீ³னத³ஶாமஹம் தி³விஷதா³ம் பூ⁴மேஶ்ச பீ⁴மைர்ன்ருபை-
ஸ்தத்க்ஷேபாய ப⁴வாமி யாத³வகுலே ஸோ(அ)ஹம் ஸமக்³ராத்மனா |
தே³வா வ்ருஷ்ணிகுலே ப⁴வந்து கலயா தே³வாங்க³னாஶ்சாவனௌ
மத்ஸேவார்த²மிதி த்வதீ³யவசனம் பாதோ²ஜபூ⁴ரூசிவான் || 37-5 ||
''ப்ரம்ம தேவா, தேவர்கள்,பூமாதேவி ஆகியோர் கொடிய ராக்ஷசர்களால், பூமியில் அனுபவிக்கும் துன்பங்களை நான் அறிந்து கொண்டேன். இது நானே பொறுப்பேற்று நிறைவேற்ற வேண்டிய காரியம் என்பதால் நானே பூமியில் யாதவ குலத்தில் அவதரிப்பேன். தேவர்கள் அப்ஸரஸ்கள் எல்லோரும் விருஷ்ணி குலத்தில் பிறப்பார்கள். அவர்களுடைய சக்தியை, உதவியை எனக்கு அளிப்பார்கள். இது விரைவில் நடந்தேறும். நீங்கள் நிம்மதியாக சந்தோஷமாக சென்று வாருங்கள்'' என்றாய் .
श्रुत्वा कर्णरसायनं तव वच: सर्वेषु निर्वापित-
स्वान्तेष्वीश गतेषु तावककृपापीयूषतृप्तात्मसु ।
विख्याते मधुरापुरे किल भवत्सान्निध्यपुण्योत्तरे
धन्यां देवकनन्दनामुदवहद्राजा स शूरात्मज: ॥६॥
shrutvaa karNarasaayanaM tava vachassarveShu nirvaapitasvaanteShviisha
gateShu taavakakR^ipaa piiyuuShatR^iptaatmasu |
vikhyaate madhuraapurekila bhavatsaannidhya puNyOttare
dhanyaaM devakanandanaamudavahadraajaa sa shuuraatmajaH ||6
ஶ்ருத்வா கர்ணரஸாயனம் தவ வச꞉ ஸர்வேஷு நிர்வாபித-
ஸ்வாந்தேஷ்வீஶ க³தேஷு தாவகக்ருபாபீயூஷத்ருப்தாத்மஸு |
விக்²யாதே மது²ராபுரே கில ப⁴வத்ஸான்னித்⁴யபுண்யோத்தரே
த⁴ன்யாம் தே³வகனந்த³னாமுத³வஹத்³ராஜா ஸ ஶூராத்மஜ꞉ || 37-6 ||
''குருவாயூரப்பா, நாராயணனாக, நீ கொடுத்த ஆறுதல் மொழி, தேவர்களுக்கும் பூமாதேவிக்கும் காதில் தேனாகப் பாய்ந்தது. ப்ரம்மா மகிழ்ந்தார்.அனைவரும் வணங்கினார்கள். நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். உன் கருணையைப் போற்றினார்கள். அவரவர் இடத்துக்கு திரும்பினார்கள். வடக்கே மதுரா என்று ஒரு புண்ய நகரம். அதில் சூர சேனன் எனும் ராஜாவின் மகன் வசுதேவன். அவனுக்கும் தேவகன் எனும் மற்றொரு அரசனின் மகள் தேவகிக்கும் திருமணம் நிச்சயமாகி கோலாகலமாக நடந்தேறியது.
उद्वाहावसितौ तदीयसहज: कंसोऽथ सम्मानय-
न्नेतौ सूततया गत: पथि रथे व्योमोत्थया त्वद्गिरा ।
अस्यास्त्वामतिदुष्टमष्टमसुतो हन्तेति हन्तेरित:
सन्त्रासात् स तु हन्तुमन्तिकगतां तन्वीं कृपाणीमधात् ॥७॥
udvaahaavasitautadiiya sahajaH kamsO(a)tha sammaanayan
etau suutatayaa gataH pathi rathe vyOmOtthayaa tvadgiraa |
asyaastvaamatiduShTamaShTamasu
santraasaatsa tu hantumantikagataaM tanviiM kR^ipaaNiimadhaat ||7
உத்³வாஹாவஸிதௌ ததீ³யஸஹஜ꞉ கம்ஸோ(அ)த² ஸம்மானய-
ந்னேதௌ ஸூததயா க³த꞉ பதி² ரதே² வ்யோமோத்த²யா த்வத்³கி³ரா |
அஸ்யாஸ்த்வாமதிது³ஷ்டமஷ்டமஸுதோ ஹந்தேதி ஹந்தேரித꞉
ஸந்த்ராஸாத்ஸ து ஹந்துமந்திகக³தாம் தன்வீம் க்ருபாணீமதா⁴த் || 37-7 ||
தேவகிக்கு ஒரு சகோதரன். பலிஷ்டன். கம்சன் என்று பெயர். மதுராவின் அரசன். அவன் தனது சகோதரி திருமணத்தை தானே முன்னின்று விமரிசையாக நடத்தினான். திருமண ஊர்வலத்தில் தானே தேவகி வசுதேவர் இருவரையும் அலங்கரித்த தேரில் அமர்த்தி, தேரை ஓடிவந்தான். கம்சன் கொடிய அசுர ராஜன். தேரை அவன் ஓட்டிச் செல்லும்போது பாதி வழியில் அவன் காதில் ஒரு அசரீரி சொல்வது கேட்டது. அது அழுத்தமாக சொல்லியதைக் கேட்டு ஸ்தம்பித்தான்.
आद्यं त्वत्सहजं तथाऽर्पितमपि स्नेहेन नाहन्नसौ
दुष्टानामपि देव पुष्टकरुणा दृष्टा हि धीरेकदा ॥८॥
gR^ihNaanashchikureShu taaM khalamatiH shaureshchiraM saantvanairnO
mu~nchan punaraatmajaarpaNagiraa priitO(a)tha yaatO gR^ihaan |
aadyaM tvatsahajaM tathaarpitamapi snehena naahannasau
duShTaanaamapi deva puShTakaruNaa dR^iShTaa hi dhiirekadaa ||8
க்³ருஹ்ணானஶ்சிகுரேஷு தாம் க²லமதி꞉ ஶௌரேஶ்சிரம் ஸாந்த்வனை-
ர்னோ முஞ்சன்புனராத்மஜார்பணகி³ரா ப்ரீதோ(அ)த² யாதோ க்³ருஹான் |
ஆத்³யம் த்வத்ஸஹஜம் ததா²ர்பிதமபி ஸ்னேஹேன நாஹன்னஸௌ
து³ஷ்டானாமபி தே³வ புஷ்டகருணா த்³ருஷ்டா ஹி தீ⁴ரேகதா³ || 37-8 ||
திருமண அலங்காரத்தோடு தேரில் அமர்ந்திருந்த தேவகியின் தலை முடியைப் பிடித்து இழுத்தான். கழுத்தை சாய்த்து வாளால் வெட்ட கையை ஓங்கினான். அதிர்ந்து போன மாப்பிள்ளை வசுதேவன் , கெஞ்சினான். ''கம்சா கொஞ்சம் அமைதியாக இரு. பொறு. ஆத்திரம் வேண்டாம். எதற்கு ஒன்றும் அறியாத உன் அன்பு சகோதரியை கொல்லவேண்டும் . உனக்கு அவளாலோ, என்னாலோ எந்த ஆபத்தும் இல்லையே. அவள் வயிற்றில் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தை தானே தீங்கு விளைவிக்கும். நான் இதோ உன்னிடம் சத்யம் செயகிறேன். அனைவரும் அறிய இதை ஏற்றுக்கொள். தேவகிக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளும் உன்னிடம் பிறந்தவுடனேயே கொடுக்கப்படும். நீ என்ன வேண்டுமானாலும் அதைச் செய்து கொள்ளலாம். இனி உனக்கு என்ன கவலை?'
मायावी स हरिर्भवद्वधकृते भावी सुरप्रार्थना-
दित्याकर्ण्य यदूनदूधुनदसौ शौरेश्च सूनूनहन् ॥९॥
taavattvanmanasaiva naaradamuniH prOche sa bhOjeshvaraM
yuuyaM nanvasuraaH suraashcha yadavO jaanaasi kiM na prabhO |
maayaavii sa harirbhavadvadhakR^itebhaavii surapraarthanaadityaakarNya
yaduunaduudhunadasau shaureshcha suunuunahan ||9
தாவத்த்வன்மனஸைவ நாரத³முனி꞉ ப்ரோசே ஸ போ⁴ஜேஶ்வரம்
யூயம் நன்வஸுரா꞉ ஸுராஶ்ச யத³வோ ஜானாஸி கிம் ந ப்ரபோ⁴ |
மாயாவீ ஸ ஹரிர்ப⁴வத்³வத⁴க்ருதே பா⁴வீ ஸுரப்ரார்த²னா-
தி³த்யாகர்ண்ய யதூ³னதூ³து⁴னத³ஸௌ ஶௌரேஶ்ச ஸூனூனஹன் || 37-9 ||
அப்போது தான் உன் நாடகம் நிறைவேறியது. நாரதர், நீ அறிவுறுத்தியபடியே, கம்சனை சந்திக்கிறார். '' கம்ஸா, நீங்கள் எல்லோரும் அசுரர் குலத்தை சேர்ந்தவர்கள். யாதவர்கள் தேவர்கள் வம்சம். மஹாராஜா, உனக்கு தெரியுமா? அந்த மஹா விஷ்ணு , தேவர்கள் முறையிட்டபடியால், பூமியில் பிறந்து உன்னைக் கொல்லப்போகிறார்'' இதைக் கேட்ட கம்ஸன் வெகுண்டான். அந்த மனதில் இருந்த அன்பு மறைந்தது. வசுதேவர் தேவகிக்கு பிறந்த எல்லா குழந்தைகளையும் கொல்ல ஆரம்பித்தான்.
प्राप्ते सप्तमगर्भतामहिपतौ त्वत्प्रेरणान्मायया
नीते माधव रोहिणीं त्वमपि भो:सच्चित्सुखैकात्मक: ।
देवक्या जठरं विवेशिथ विभो संस्तूयमान: सुरै:
स त्वं कृष्ण विधूय रोगपटलीं भक्तिं परां देहि मे ॥१०॥
praapte saptamagarbhataamahipatau tvatpreraNaanmaayayaa
niite maadhava rOhiNiiM tvamapi bhOH sachchitsukhaikaatmakaH |
devakyaa jaTharaM viveshitha vibhO samstuuyamaanaH suraiH
sa tvaM kR^iShNa vidhuuya rOgapaTaliiM bhaktiM paraaM dehi me ||10
ப்ராப்தே ஸப்தமக³ர்ப⁴தாமஹிபதௌ த்வத்ப்ரேரணான்மாயயா
நீதே மாத⁴வ ரோஹிணீம் த்வமபி போ⁴꞉ ஸச்சித்ஸுகை²காத்மக꞉ |
தே³வக்யா ஜட²ரம் விவேஶித² விபோ⁴ ஸம்ஸ்தூயமான꞉ ஸுரை꞉
ஸ த்வம் க்ருஷ்ண விதூ⁴ய ரோக³படலீம் ப⁴க்திம் பராம் தே³ஹி மே || 37-10 |
தேவகியின் வயிற்றில் ஏழாவது குழந்தையாக ஆதிசேஷனை கருவுற்றாள். மாதவா, உன் அறிவுரைப்படி, யோக மாயா தேவி , கருவை தேவகியின் வயிற்றிலிருந்து கோகுலத்திலிருந்த ரோஹிணியின் வயிற்றுக்கு மாற்றிவிட்டாள் . தேவகியின் கருவில் யோகமாயா குடிபுகுந்தாள் . அற்புதங்கள் நிகழ்த்தியவனே, பரந்தாமா, என் நோயை நீக்கி என்னையும் நீ ரக்ஷிக்க வேண்டும் என உன்மீதுள்ள அளவுகடந்த பக்தியோடு வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment