ஒரு சந்தோஷ நேரம் J K SIVA
N
N
சனிக்கிழமை 11.5.2019 காலை சுள்ளென்று அக்னி நக்ஷத்ர வெயில் கொளுத்தியதை பொருட்படுத்த வில்லை. அகம் முழுதும் குளிர்ந்திருந்தபோது புறம் எப்படி வெயிலை லக்ஷியம் பண்ணும். கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் ஒரு சிறு பள்ளிக்கூடம். மரங்களின் நிழலில் ஜிலுஜிலுவென்ற காற்று வீச வண்ணங்கள் சுவற்றில் மின்ன இது சின்னஞ்சிறு தெய்வங்களின் இல்லம் என்று வெளிச்சம் போட்டு காட்டியது. ஆம் ' லிட்டில் மில்லேன்னியம்'' குழந்தைப் பள்ளி. அங்கு பாடத்தை விட பொது அறிவு, சுகாதாரம், சிக்கனம், அன்பு, சகோதரத்துவம், இவை தான் அதிகம் போதிக்கப்பட்டு வருவது இன்றோ நேற்றோ அல்ல. எட்டு ஒன்பது வருஷங்களாக. தொடர்ந்து தேசிய விருது வாங்கிய ஆசிரியை, திருமதி பாலா திரிபுர சுந்தரி சுறுசுறுப்புக்கு மற்றொரு பெயர்.
மேலே சொன்ன சனிக்கிழமை ''கோடை விடுமுறை கூடல்'' SUMMER CAMP காலை 9.30 முதல் பகல் 12.30 வரை. அங்கு படிக்கும் 3 1வயதுமுதல் 10-11 வரை தான். நிறைய குழந்தைகள் விடுமுறையை சந்தோஷமாக கழிக்க கூடியிருந்தார்கள். என்னையும் அழைத்திருந்தார்கள். ஒருவேளை வாழ்க்கை சக்கரத்தில் மேலிருந்து கீழிறங்கும் பருவம் என்பதால் குழந்தைகளோடு குழந்தையாய் நானும் அங்கிருந்தேன். குழந்தைகள் பாடினார்கள்,ஆடினார்கள், ஒரு அற்புத ஆசிரியை யோகப் பயிற்சி சொல்லிக் கொடுத்து குழந்தைகளை ஆனந்தமாக உடலை வளைத்து பயிற்சி செய்ய வைத்த போது என் கைகால்கள் எனக்கு துரோகம் செய்து சொன்னபடி இயங்கவில்லை. கருத்து மிகுந்த நாடகம் நடித்தார்கள், அனைவருக்கும் பரிசுகள் வழங்கினேன். பெற்றோர்கள் வந்திருந்ததால் முக்கியமாக குழந்தைகளை எவ்வாறு அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும், வளர்க்கவேண்டும் என்று அறிந்ததை, தெரிந்ததை எல்லாம் சொன்னேன்.
No comments:
Post a Comment