ஆதி சங்கரர் J K SIVAN
மனீஷா பஞ்சகம்
குருவாய் வருவாய்
ஆதி சங்கரர் காலத்தில் கூட உயர்குலத்தோர், இழி குலத்தோர், தீண்டாமை என்ற வேறுபாடுகள் இருந்தது. இதில் சங்கரருக்கு துளியும் உடன்பாடு இல்லை. வாயால் சொன்னால் யார் கேட்பார்கள்? எப்படி சொன்னால் மக்கள் கவனம் திரும்பும்.திருந்துவார்கள்?. ஒரு தக்க சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்திருந்தார். அது காசியில் அவர் அத்வைத கொள்கைகளை விளக்கக் கிடைத்த சந்தர்ப்பமாக உருவெடுத்தது.
சங்கரர் மனது பளிங்கு. அதில் தீண்டாமை இல்லை .ஆனால் ,அவரை சுற்றி இருந்தவர்கள் மனதில் வித்யாசம் ஆழ பதிந்திருந்ததே .
விடியற்காலை ஸ்நானம் செய்ய கங்கைக்கு சீடர்கள் புடைசூழ செல்கிறார் சங்கரர். நெரிசலான வளைந்த காசி பட்டணத்தின் தெருக்கள் குருகலானவை. சந்து என்போமே அப்படி . அவர்கள் ஸ்னானம் செய்துவிட்டு அந்தமாதிரி ஒரு குறுகிய சந்தில் திரும்பி வரும்போது எதிரே ஒரு சண்டாளன், தன் மனைவியுடன், நான்கு நாய்களை கயிற்றில் கட்டி இழுத்துக் கொண்டு வருகிறான். நான்கு நாய்களும் கயிற்றிலிருந்து விடுதலை பெற திமிறுகின்றன. அவன் மனைவியின் கையிலோ கள் நிறைந்த பானை. இவர்களை எல்லாம் கண்டவுடன், சங்கரரின் சீடர்கள் முகம் கடுகடுத்தது. அருவருப்பில் சுருங்கியது. சங்கரர் அதை கவனித்துவிட்டு எதிரே வரும் சண்டாளனை பார்த்து
''விலகிச் செல் சண்டாளனே! (தூரம் அபசரரே சண்டாள: என்கிறார்.
அவனோ முகத்தில் புன் சிரிப்போடு சங்கரரிடம் கேட்கிறான் “யாரை விலகச் சொல்கிறீர்கள் ? இந்த உடலையா இல்லை இந்த உடலில் உள்ள ஆன்மாவையா ? எது விலகவேண்டும் ?''
இப்படி ஒரு பதிலை எதிர்பாராத சங்கரர் க்ஷண நேரத்தில் புரிந்து கொண்டார்.எதிரே வந்தவன் சண்டாளன் அல்லன். ஒரு பூரண ஞானி. இல்லாவிட்டால் இப்படி ஒரு கேள்வி அவனிடமிருந்து வருமா? சங்கரர் அந்தச் சண்டாளனுக்கு சாஷ்டாங்க நமஸ்கார செய்து வணங்குகிறார்
இப்படி ஒரு பதிலை எதிர்பாராத சங்கரர் க்ஷண நேரத்தில் புரிந்து கொண்டார்.எதிரே வந்தவன் சண்டாளன் அல்லன். ஒரு பூரண ஞானி. இல்லாவிட்டால் இப்படி ஒரு கேள்வி அவனிடமிருந்து வருமா? சங்கரர் அந்தச் சண்டாளனுக்கு சாஷ்டாங்க நமஸ்கார செய்து வணங்குகிறார்
“நீங்கள் யார் என்று சொல்லவேண்டும்'' என வணங்குகிறார் ஆதி சங்கரர்.
பதில் சொல்ல சண்டாளன் அங்கே இல்லை. காசி விஸ்வநாதன் விசாலாக்ஷியுடன் காட்சி தர, நான்கு நாய்களும் நான்கு வேதங்களாக அல்லவோ காட்சி தந்தது. கள் பானை அம்பாள் கையில் அம்ரித குடமாக மாறியிருந்தது.
அப்போது ஆதி சங்கரர் இயற்றி போற்றிய ஐந்து ஸ்லோகங்கள் தான் மனீஷா பஞ்சகம். ''மனிஷா'' என்றால் ''சம்மதிக்கிறேன்'' என்று பொருள். சண்டாளனாக பரமேஸ்வரன் வந்து கேள்விகள் அதற்குண்டான சங்கரரின் பதில்கள் தான் மனீஷா பஞ்சகம்.
अन्नमयादन्नमयमथवा चैतन्यमेव चैतन्यात् ।
यतिवर दूरीकर्तुं वाञ्छसि किं ब्रूहि गच्छ गच्छेति ॥
அன்னமயாத் அன்னமயம் அதவா சைதன்யமேவ சைதன்யாத்|
யதிவர துரீக்ருதம் வாஞ்சஸிகிம் ப்ரூஹி கச்ச கச்சேதி||
''சாமீ , நீங்க ரொம்ப படிச்சவங்க . நான் என்னத்த கண்டேன். சொல்லுங்க. தூர போடா சண்டாளா ன்னு சொல்றீங்களே, அதை இந்த சோற்றாலடிச்ச பை , இந்த உடம்பை பார்த்துட்து சொன்னதா? உள்ளே ஏதோ ஒண்ணு உருவமில்லாம உணர்வா இருக்குதே அதை தூர போன்னு சொல்றீங்களா? எது சாமி தூர போவணும்? சொல்லுங்கய்யா.''
प्रत्यग्वस्तुनि निस्तरङ्ग सहजानन्दावबोधाम्बुधौ
विप्रोऽयं श्वपचोऽयमित्यपि महान्कोऽयं विभेदभ्रमः ।
ப்ரத்யேக்வஸ்துனி நிஸ்தரங்க ஸஹஜானந்தாவ போதாம்புதௌ|
விப்ரோ அயம் ஸ்சபவோ அயமித்யபிமஹான்கோ அயம் விபேதப்ரம||
விப்ரோ அயம் ஸ்சபவோ அயமித்யபிமஹான்கோ அயம் விபேதப்ரம||
தெளிவான இருந்தால் சிறு அழுக்கு சேர் நிறைந்த குட்டையிலும் கூட பிரம்மாண்ட சூரியனின் கிரணங்கள் பிரதிபலித்து ஒளிவீசும் சூரியனாக காண்கிறோம். அது போலவே பரப்ரம்மம் எந்த தாழ்ந்த, இழிந்த, உடலிலும் அவ்வாறே நிறைந்து காண்கிறான். இதில் வேறுபாடு எங்கிருந்து வருகிறது? உடல்களில் வித்யாசம் எங்கிருக்கிறது? எது உயர்குலம்,எது தீண்டக்கூடாத தாழ் குலம்?
किं गङ्गाम्बुनि बिम्बितेऽ म्बरमणौ चाण्डालवीथीपयः
पूरे वाऽन्तरमस्ति काञ्चनघटी मृत्कुम्भयोर्वाऽम्बरे ॥
கிம் கங்காம்புனி பிம்பிதே அம்பரமணௌ சாண்டாளவீதீபய:|
பூரே வா அந்தரமஸ்தி காஞ்சனகடி ம்ருத்கும்பயோர்வா அம்பரே||
பூரே வா அந்தரமஸ்தி காஞ்சனகடி ம்ருத்கும்பயோர்வா அம்பரே||
கங்கை நீரில் பிரதிபலிக்கும் சூரியனும், சேற்று நீரில் பிரதிபலிக்கும் சூரியனும் ஒன்று தானே. அப்படி பிரதிபலிக்கும் பாத்திரம் தங்கக்குடமாக இருந்தாலும் மண் பானையாக இருந்தாலும் என்ன வித்யாசம்? இந்த பாத்திரங்களின் தன்மையால் சூரியனின் ஒளி மாறுபடுகிறதா? ஒளி குறைகிறதா? மனிதர்கள் எல்லோரும் ஒன்று தான் என்பது புரியவில்லையா? அனைவரிலும் இறைவன் உறைகிறானே'' . சண்டாளனாக வந்த பரமேஸ்வரன் கேட்பது போல் எழுதுகிறார் ஆதி சங்கரர்.
जाग्रत्स्वप्नसुषुप्तिषु स्फुटतरा या संविदुज्जृम्भते या ब्रह्मादिपिपीलिकान्ततनुषु
प्रोता जगत्साक्षिणी । सैवाहं न च दृश्यवस्त्विति दृढप्रज्ञापि यस्यास्ति चे-
चे च्चाण्डालोऽस्तु स तु द्विजोऽस्तु गुरुरित्येषा मनीषा मम ॥ १॥
ப்ரோதா ஜகத்ஸாக்ஷிணி|ஸைவாஹம் ந ச த்ருச்யவஸ்திவதி 000த்ருடப்ரக்ஞாபி யஸ்யாதி சேச்
சண்டாளோs ஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா:மணீஷா மம ||
ஒவ்வொரு ஜீவனுக்கும் மூன்று நிலை. விழிப்பு, கனவு, தூக்கம், தவிர்க்கமுடியாதது, அது ப்ரம்மாவாக இருந்தாலும் சரி ஒரு சிறிய எறும்பானாலும் சரி இந்த விதிக்கு கட்டுப்பட்ட ஜீவன் தான் என்பதை நான் ஏற்கிறேன். ஆகவே எந்த ஒரு ஜீவனாக இருந்தாலும், உயர்ந்தவனா, தாழ்ந்தவனோ, அவனுள் இயக்கம் ஆத்மா ஒன்றே தான் என்று அறிந்தவனை நான் குருவாக மனமார ஏற்கிறேன்.
ब्रह्मैवाहमिदं जगच्च सकलं चिन्मात्रविस्तारितं सर्वं चैतदविद्यया
ब्रह्मैवाहमिदं जगच्च सकलं चिन्मात्रविस्तारितं सर्वं चैतदविद्यया
त्रिगुणयाऽशेषं मया कल्पितम् । कल्पितम् इत्थं यस्य दृढा मतिः
सुखतरे नित्ये परे निर्मले चाण्डालोऽस्तु स तु द्विजोऽस्तु गुरुरित्येषा मनीषा मम ॥ २॥
பிரஹ்மோவாஹமிதம் ஜக்ச்ச ஸகலம் சின்மாத்ரவிஸ்தாரிதம் ஸர்வம் சைததவித்யயா
திரிகுண்யாs சேஷம் மயா கல்பிதம்|இத்தம் யஸ்ய த்ருடா மதி:
ஸுகரே நித்யேபரே நிர்மலே சண்டாளோs ஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மனிஷா மம||
இந்த பரந்த உலகில் காணும் யாவும் ஒரு பேரண்ட பரப்ரம்மத்தின் பரிமாணம் தான். அதன் வெளிப்பாடுகளே. ஆனால் சத்வம், ரஜோ, தமோ குணங்களின் சகவாசத்தால் மாறி மாறி வரும் குணங்களின் தாக்கத்தால் மதி இழந்தவன் இந்த பேருண்மையை மறக்கிறான் .இதை சதா சர்வகாலமும் உணர்ந்தவன் உயர்குலத்தோனோ, தாழ் எவனாக இருந்தாலும், பிரம்மத்தில் திளைக்கும் அவனே என் குரு என நான் ஏற்கிறேன்.
शश्वन्नश्वरमेव विश्वमखिलं निश्चित्य वाचा
गुरो र्नित्यं ब्रह्म निरन्तरं विमृशता निर्व्याजशान्तात्मना ।
भूतं भाति च दुष्कृतं प्रदहता संविन्मये पावके प्रारब्धाय
समर्पितं स्ववपुरित्येषा मनीषा मम ॥ ३॥
ச்சச்வன்ன ச்வரமேவ விச்வமகிலம் நிச்சித்ய வாசா
குரோர் நித்யம் ப்ரஹ்ம நிரந்தரம் விம்ருசதா நிர்வ்யா
பூதம் பாதி ச துஷ்க்ருதம் ப்ரதஹதா ஸம்வின்மயே பாவகே ப்ராரப்தாய
ஸமர்பிதம் ஸ்வவபுரித்யேஷா மனீஷா மம|| இந்த அகண்ட பரந்த பிரபஞ்சமே ஒரு மாய லோகம், எதுவுமே சாஸ்வதமல்ல, அழியக்கூடியது,மாறக்கூடியது, மறையக்கூடியது என்றுணர்ந்து, இந்த தேகத்தின் கடமையே, ஆத்ம விசாரத்தில் பிரம்மத்தை தேடுவது, அடைவது லொன்றே என்று மனதை கட்டுப்பாட்டில் வைத்து அறிந்தவன் எவனாக இருந்தாலும்,உயர்ந்த குலத்தவனோ, தாழ் குலத்தவனோ அவனது சர்வ பாபங்களும் அவனது இந்த ஆத்ம வேள்வித்தீயில் கலந்து எரிந்து சாம்பலாகும். அவனையே எனது குருவாக ஏற்று அவனை நமஸ்கரிக்கிறேன்.
या तिर्यङ्नरदेवताभिरहमित्यन्तः स्फुटा
गृह्यते यद्भासा हृदयाक्षदेहविषया भान्ति स्वतोऽचेतनाः ।
तां भास्यैः पिहितार्कमण्डलनिभां स्फूर्तिं सदा भावयन्योगी
निर्वृतमानसो हि गुरुरित्येषा मनीषा मम ॥ ४॥
யா திர்யங்நரதேவதாபிரஹமித்யந்த: ஸ்புடா
க்ருஹ்யதே யத்பாஸா ஹ்ருதயாக்ஷதேகவிஷயா பாந்தி ஸ்வதோs சேதனா:|
தாம் பாஸ்யை:பிஹிதார்கமண்டலநிபாம் ஸ்பூர்தி ஸதா பாவயன் யோகீ
தாம் பாஸ்யை:பிஹிதார்கமண்டலநிபாம் ஸ்பூர்தி ஸதா பாவயன் யோகீ
நிவ்ருதமானஸோ ஹி குருரித்யேஷா மணீஷா மம||
உலகை பிரகாசிக்கச் செய்யும் ஒளி மிகுந்த சூரியனை மேகங்கள் மறைத்து ஒளியை விளக்கி இருளை கவியச்செய்வது போல் சர்வ சக்தியாக எங்கும் எதிலும் இயங்கும் பிரம்மத்தை அஞ்ஞானம் எனும் அறியாமை நம்மால் அறிய இயலாமல் தெரிந்து கொள்ள முடியாமல் செய்த்துவிடுகிறது. பரமாத்மா இருப்பதை தெளிவு படுத்தி நமக்கு அறிவித்து ஞானம் உண்டாகச் செய்பவரே யோகி. அவர் எவராயிருந்தாலும் என் குருவாக ஏற்கிறேன். அடிபணிந்து வணங்குகிறேன்.
உலகை பிரகாசிக்கச் செய்யும் ஒளி மிகுந்த சூரியனை மேகங்கள் மறைத்து ஒளியை விளக்கி இருளை கவியச்செய்வது போல் சர்வ சக்தியாக எங்கும் எதிலும் இயங்கும் பிரம்மத்தை அஞ்ஞானம் எனும் அறியாமை நம்மால் அறிய இயலாமல் தெரிந்து கொள்ள முடியாமல் செய்த்துவிடுகிறது. பரமாத்மா இருப்பதை தெளிவு படுத்தி நமக்கு அறிவித்து ஞானம் உண்டாகச் செய்பவரே யோகி. அவர் எவராயிருந்தாலும் என் குருவாக ஏற்கிறேன். அடிபணிந்து வணங்குகிறேன்.
यत्सौख्याम्बुधिलेशलेशत इमे शक्रादयो
निर्वृता यच्चित्ते नितरां प्रशान्तकलने लब्ध्वा मुनिर्निर्वृतः । 4
यस्मिन्नित्यसुखाम्बुधौ गलितधीर्ब्रह्मैव न ब्रह्मविद् यः
कश्चित्स सुरेन्द्रवन्दितपदो नूनं मनीषा मम ॥ ५॥
யதிஸௌக்கியாம்புதிலேசலேதத இமே சக்ரதயோ
நிர்வ்ருதா யச்சித்தே நிதராம் ப்ரசாந்தகலனே லப்தவா முனிர்நிர்வ்ருத: |
யஸ்மின்னித்யஸுகாம்புதௌ கலிததீர்ப்ரஹ்மைவ ந ப்ரம்ஹவித் ய:
யஸ்மின்னித்யஸுகாம்புதௌ கலிததீர்ப்ரஹ்மைவ ந ப்ரம்ஹவித் ய:
கச்சித்ஸ ஸுரேந்த்ரவந்திதபதோ நூனம் மணீஷா மம ||
இந்திராதி தேவர்கள் பூஜித்து தொழும் அந்த பரமாத்மாவை மனதில் ஆத்மாவாக இருப்பதை உணர்ந்து எவன் வணங்குகிறானோ, அவன் எல்லையற்ற பேரின்பத்தில் திளைப்பவன், சதானந்தன் , பிரம்மத்தை உணர்ந்த அறிந்த அந்த ப்ரம்ம ஞானி தானே ப்ரம்மமாகிவிடுகிறான். திருமூலர் சொல்வாரே, ''அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே'' அது புரிகிறதா? அப்படிப்பட்ட ஞானி, யாராக இருந்தாலும் அவனே என் குரு என ஏற்று அவன் திருவடிகளில் பணிகிறேன்.
दासस्तेऽहं देहदृष्ट्याऽस्मि शंभो जातस्तेंऽशो जीवदृष्ट्या त्रिदृष्टे ।
दासस्तेऽहं देहदृष्ट्याऽस्मि शंभो जातस्तेंऽशो जीवदृष्ट्या त्रिदृष्टे ।
सर्वस्याऽऽत्मन्नात्मदृष्ट्या त्वमेवे -त्वमेवे त्येवं मे धीर्निश्चिता सर्वशास्त्रैः
தாஸமஸ்தேs ஹம் தேஹத்ருஷ்யாs ஸ்மி சம்போ ஜாதஸ்தேம்s ஸோ ஜீவத்ருஷ்யா த்ரித்ருஷ்டே|
ஸர்வஸ்யாs s த்மன்னாத்மத்ருஷ்யா த்வமேவேத்யேவம் மே தீர்நிச்சிதா ஸர்வசாஸ்த்ரை:|
என் பிரபு, இந்த தேகத்தோடு உலவும் நான் உங்களடிமை. என்ன்னுள்ளே ஒளிரும் ஆத்மாவோ எனில் பரமேஸ்வரா, முக்கண்ணா, அது உன்னில் கலந்தது. இதை நான் கற்றும் கேட்டும், என் ஸ்வய அனுபவத்தாலும் அறிந்து கொண்டேன்
மனீஷா பஞ்சகத்தின் அவசியம் இப்போது எல்லோரும் உணரவேண்டிய அவசியம் இருக்கிறது அல்லவா? நிறைய பேருக்கு எடுத்து சொல்லுங்கள். வித்யாசம் தொலையட்டும். சாதிகள் இல்லையடி பாப்பா புரியட்டும்.
No comments:
Post a Comment