Friday, May 31, 2019

TALKS OF BAGAVAN RAMANA



BHAGAVAN SRI RAMANA'S TALKS 

IT IS NOT DIFFICULT TO UNDERSTAND BHAGAVAN RAMANA IF YOU READ THE QUESTIONS PUT TO HIM AND THE ANSWERS GIVEN BY HIM, SLOWLY, CONCENTRATING ON EACH WORD ATTENTIVELY WITH INVOLVEMENT AND INTEREST TO LEARN.- It is made simple for you. So you will  enjoy  profusely.   J.k.Sivan 

Devotee.: There are said to be sadeha mukta (liberated in body) and videha  mukta (liberated without body).
Maharishi: There is no liberation, and where are muktas?
D.: Do not Hindu sastras speak of mukti?
M.: Mukti is synonymous with the Self. Jivan mukti (liberation while
alive) and videha mukti (liberation after the body falls) are all for the
ignorant. The Jnani is not conscious of mukti or bandha (bondage).
Bondage, liberation and orders of mukti are all said for an ajnani
in order that ignorance might be shaken off. There is only mukti
and nothing else.

D.: It is all right from the standpoint of Bhagavan. But what about us?
M.: The difference between ‘He’ and ‘I’ are the obstacles to jnana.
D.: But it cannot be denied that Bhagavan is of a high order whereas
we are limited. Will Bhagavan make me one with Him?
M.: Were you aware of limitations in your sleep?
D.: I cannot bring down the state of my sleep in the present state and
speak of it.
M.: You need not. These three states alternate before the unchanging
Self. You can remember your state of sleep. That is your real state.
There were no limitations then. After the rise of the ‘I-thought’ the
limitations arose.
D.: How to attain the Self?
M.: Self is not to be attained because you are the Self.
D.:Yes. There is an unchanging Self and a changing one in me. There
are two selves.
M.: The changefulness is mere thought. All thoughts arise after the
arising of the ‘I-thought’. See to whom the thoughts arise. Then
you transcend them and they subside. This is to say, tracing the
source of the ‘I-thought’, you realise the perfect ‘I-I’. ‘I’ is the

name of the Self.

D.: Shall I meditate on “I am Brahman” (Aham Brahmasmi)?
M.: The text is not meant for thinking “I am Brahman”. Aham (‘I’) is
known to everyone. Brahman abides as Aham in everyone. Find out
the ‘I’. The ‘I’ is already Brahman. You need not think so. Simply
find out the ‘I’.

D.: Is not discarding of the sheaths mentioned in the sastras?
M.: After the rise of the ‘I-thought’ there is the false identification
of the ‘I’ with the body, the senses, the mind, etc. ‘I’ is wrongly
associated with them and the true ‘I’  is lost sight of. In order to shift
the pure ‘I’from the contaminated ‘I’this discarding is mentioned.
But it does not mean exactly discarding of the non-self, but it means
the finding of the real Self.
The real Self is the Infinite ‘I-I’, i.e., ‘I’ is perfection. It is eternal.
It has no origin and no end. The other ‘I’ is born and also dies. It is
impermanent. See to whom are the changing thoughts. They will be
found to arise after the ‘I-thought’. Hold the ‘I-thought’.They subside.
Trace back the source of the ‘I-thought’. The Self alone will remain.

NARASIMMA


நரசிம்மா..ஆ ஆ ஆ J K SIVAN
6. சயன நரசிம்மர்

நரசிம்மன் எங்கும் இருப்பவர். உலகெங்கும் வியாபித்தவர். ஆந்திராவில் 3-4ம் நூற்றாண்டில் ஒரு சில சிற்பங்கள் சிங்க முகம் நான்கு கைகளுடன் காட்டுகின்றன. அமர்ந்த கோலத்தில் , ஒருகால் தொங்க விட்டுக்கொண்டு, இரு காலும் மடங்கி, குத்துக்கால் இட்டு உட்கார்ந்த நிலையில், நின்ற கோலத்தில் எல்லாம் நரசிம்மனை தரிசித்திருக்கிறோம். ஆனால் படுத்துக்கொண்டு இருக்கும் நரசிம்மனை பார்த்திருக்கிறீர்களா? . நான் பார்த்தேன். திருவதிகையில் ஒரு ஆலயத்தில் சயன நரசிம்மர். தெற்கு நோக்கி ஜம்மென்று படுத்துக்கொண்டிருக்கிறார். அசப்பில் பெருமாள் மாதிரி. முகம் தான் அவரைக் காட்டிக் கொடுக்கும். அவரை எங்கே பார்ப்பது? சொல்கிறேன்.

நரசிங்க புராணத்தில் நரசிம்மன் திருவக்கரையில் இருந்த வக்ராசுரன் என்பவனிடம் மோதி அவனை கொன்று விட்டு ''உஸ் அப்பாடா'' என்று களைப்பாற திருவதிகைக்கு வந்து படுத்த கோலம். போக சயனம். தாயார் காலருகே வழக்கம்போல். திருவதிகையில் சர நாராயண பெருமாள் கோவிலில் அவரை காணலாம். தாயார் ஹேமாம்புஜவல்லி. உலகிலேயே படுத்திருக்கும் நரசிம்மர் இவர் ஒருவர் தான். தி ருவதிகை எங்கிருக்கிறது ? கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே.

700 ஆண்டுகளுக்கு முன்பு வேதாந்த தேசிகர் திருவந்திபுரம் செல்லும்போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டி ருக்கிறார். சிவனைப்போலவே இந்த சயன நரசிம்மருக்கும் ஒவ்வொரு பிரதோஷத்தின் போது சிறப்பு பூஜை. மீதி வைஷ்ணவ கோவில்களில் கை கூப்பி நிற்கும் கருடாழ்வார் இந்த கோவிலில் கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்குள்ள கருடாழ்வாருக்கு பெருமாள் திரிபுர சம்ஹாரத்தின் போது சங்கு, சக்கரங்களை வழங்கியதாக புராணம் கூறுகிறது.

1,300 வருடங்களுக்கு முன்பு ஓம் என்ற வடிவில் திருவதிகை கிராமம் இருந்ததாம். சரநாராயண பெருமாள் மார்க்கண்டேய மகரிஷி மகள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். திரிபுர சம்ஹாரத்தின் போது சிவபெருமானின் போருக்கு பெருமாள் சரம் (அம்பு) கொடுத்து உதவிய தால் சரநாராயண பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். மஹா பாரதம் முடியும் தருண காலத்தில் அர்ஜுனன் இங்கே வந்ததாக ஒரு ஐதீகம்.

மூலவர் சரநாராயண பெருமாள் முழுவதும் சாளக்கிரமத்தால் (கருங்கல்) ஆனவர்.
இப்போது தான் தெரிகிறது ஆண்டாளுக்கு கூட படுத்திருக்கும் நரசிம்மனை தெரியும் என்று. '' மாரி மலை முழைஞ்சில் மன்னி கிடந்து ''உறங்கும் சீரிய சிங்கம்'' ..... என்கிறாளே .

கோவில் காலை 6.30 முதல் 11 மணிவரை. மாலை 5.30 முதல் 8.30 வரை. நரசிம்மர் அப்பாயிண்ட்மெண்ட் டைம்.

ADHI SANKARA


ஆதி சங்கரர் 
தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் 

                        
                          2    மௌனம் ஸர்வார்த்த சாதகம். 


चित्रं वटतरोर्मूले वृद्धाः शिष्या गुरुर्युवा ।
गुरोस्तु मौनं व्याख्यानं शिष्यास्तुच्छिन्नसंशयाः ॥३॥

Citram Vata-Taror-Muule Vrddhaah Shissyaa Gurur-Yuvaa |
Guros-Tu Maunam Vyaakhyaanam Shissyaas-Tuc-Chinna-Samshayaah ||3||

சித்ரம் வடதரோர்மூலே வ்றுத்தாஃ ஶிஷ்யாஃ குருர்யுவா |
குரோஸ்து மௌனவ்யாக்யானம் ஶிஷ்யாஸ்துச்சின்னஸம்ஶயாஃ ||

இது நம்பமுடியாத ஒரு அதிசயம் அல்லவா?  அதோ அந்த  பெரிய  கல் ஆலமரத்தினடியில் ஒரு இளம் வயதுக்காரர் போல்  தோன்றும் குரு.  ஞானம் முகத்தில் ஒளி வீசுகிறது. அவருக்கு எதிரே  வயதான, வயது முதிர்ந்த  ரிஷிகள் சிலர்  சிஷ்யர்களாக அமர்ந்திருக்கிறார்கள்.  அந்த  இளம் குரு  தெற்கு நோக்கி அமர்ந்தவராக,   வெறும் ஜாடையாக கையில் ஒரு முத்திரை பிடித்து காட்டுகிறார்.   அவர்களை நோக்குகிறார்.  அந்த சிஷ்யர்களோடு  அவர்  எதுவும்  பேசவில்லை,  அவர்களும் எதுவும் கேட்கவுமில்லை.  ஆனால் அந்த முதிய சிஷ்யர்கள் தங்கள் மனதில் எழுந்த ஐயங்கள், சந்தேகங்கள்  அனைத்தும் தீர்ந்ததை, மனம் தெளிவடைந்ததை உணர்கிறார்கள்.  மௌனத்திற்கு இவ்வளவு சக்தியா? ஆமாம் என்பதை  நமது வாழ்வில்  சமீபத்தில் ஒரு வெள்ளைக்காரர் தனது சுய அனுபவத்தில் அனுபவித்ததை மறந்து விட்டீர்களா?  திருவண்ணாமலையில்  ஸ்ரீ ரமணரை  சந்திக்க சென்ற  பால் ப்ரண்டன் என்ற வெள்ளையர், 30க்கு மேல் கஷ்டமான கேள்விகளை எழுதிக்கொண்டு  அவற்றை ராமணரிடம் கேட்டு அவர் பதில் பெற்று  அவர் ஒரு  யோகி /ஞானி என்று  தீர்மானிக்க தயாரானார்.  ரமணர்  அமர்ந்த அவரை  ரமணரின் கண்கள் சந்தித்தன.  அரைமணி முக்கால் மணி நேரம் அசையாமல் அமர்ந்து அவரை  பால் ப்ரண்டன்  கடைசியில்  எந்த கேள்வியும் அவரிடம் கேட்கவில்லை.  அருகில் இருந்தவர் கேட்டதற்கு, என் கேள்விகளுக்கெல்லாம்  சரியான விடை கிடைத்து விட்டது என்று எழுதினார் .
மௌனம் ஸர்வார்த்த சாதகம் என்று  நமது  முன்னோர் அனுபவித்து தான்  சொல்லி இருக்கிறார்கள்.

निधये सर्वविद्यानां भिषजे भवरोगिणाम् ।
गुरवे सर्वलोकानां दक्षिणामूर्तये नमः ॥४॥

Nidhaye Sarva-Vidyaanaam Bhissaje Bhava-Roginnaam |
Gurave Sarva-Lokaanaam Dakssinnaamuurtaye Namah ||4||

நிதயே ஸர்வவித்யானாம் பிஷஜே பவரோகிணாம் |
குரவே ஸர்வலோகானாம் தக்ஷிணாமூர்தயே னமஃ ||

தக்ஷிணாமூர்த்தே, நீங்கள் இந்த பிரபஞ்சத்தில் தெரிந்து  கொள்ளவேண்டிய அனைத்து சாஸ்திர, உண்மைகளும்  கல்வி கேள்வி ஞானம் அனைத்தும்  தன்னுள் கொண்ட ஒரு  அரும்  பெரும் பெட்டகம். இந்த  சம்ஹார  சாகரத்தில் விளையும்  சர்வ வியாதிகளையும்  குணமாக்கும், நோய்  தீர்க்கும் அருமருந்து. விஸ்வநாதன்  வைத்யநாதன் அல்லவா? ஈரேழு லோகங்களுக்கும்  குரு, ஆசான்,   உங்களுக்கு  சாஷ்டாங்க நமஸ்காரம்.  

ॐ नमः प्रणवार्थाय शुद्धज्ञानैकमूर्तये ।
निर्मलाय प्रशान्ताय दक्षिणामूर्तये नमः ॥५॥

Om Namah Prannava-Arthaaya Shuddha-Jnyaanai[a-E]ka-Muurtaye |
Nirmalaaya Prashaantaaya Dakssinnaamuurtaye Namah ||5||

ஓம் நமஃ ப்ரணவார்தாய ஶுத்தஜ்ஞானைகமூர்தயே |
நிர்மலாய ப்ரஶாம்தாய தக்ஷிணாமூர்தயே நமஃ ||

ஹே  தக்ஷிணாமூர்த்தே,  ஓமெனும் ப்ரணவ மந்திரத்தின்  வடிவமே, உருவமே,  பரிசுத்தமான இரண்டற்ற  அத்வைத ஞான ஸ்வரூபமே, பரிபூர்ண  ஆனந்த மயமே, பளிங்குபோல  ஞான ஒளி வீசும் மௌன சிகரமே, உங்களை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறேன்.


चिद्घनाय महेशाय वटमूलनिवासिने ।
सच्चिदानन्दरूपाय दक्षिणामूर्तये नमः ॥६॥

Cid-Ghanaaya Mahe[aa-Ii]shaaya Vatta-Muula-Nivaasine |
Sac-Cid-Aananda-Ruupaaya Dakssinnaamuurtaye Namah ||6||

சித் கணாய மஹேஶாய வடமூலநிவாஸினே |
ஸச்சிதானந்த  ரூபாய தக்ஷிணாமூர்த்தயே நமஃ ||

ஹே  தக்ஷிணாமூர்த்தே,   சர்வ சகல உணர்வுகளுக்குமான  உருவமே, ஞான ஸ்வரூபமே,  ஆத்மஞான அடையாளமே,  சர்வ ஈஸ்வரர்களுக்கும் தலைவனான சர்வேசா,  மஹா  ஈஸ்வரா,   கல் ஆல  மரத்தடியில் அமர்ந்த வாறு  ஞான  அலைகளை பரப்பிக்கொண்டிருக்கும் வள்ளலே, எங்கும் எப்போதும் எல்லையில்லா  ஆனந்தத்தில்  அமிழ்ந்திருக்கும் மஹேஸ்வரா, உங்களை  சாஷ்டாங்கமாக  விழுந்து வணங்குகிறேன்.


Thursday, May 30, 2019


அறுபத்து மூவர் --          ஜே கே சிவன்
திருநாவுக்கரசர் 4
                                                              
கல் தெப்பம் 

பல்லவ  ராஜா  மஹேந்திரனுக்கு   என்ன  செய்வது என்றே  புரியவில்லை. மாளிகையை விட்டு  குதிரை மேல் வேகமாக  கொண்டிருந்தவன்  கண்ணில் கெடில நதி வெள்ளமாக ஓடிக்கொண்டிருந்தது தென்பட்டது.  கடலில் அது சங்கமமாகும் இடத்தில் பெரும் வெள்ளமாக ஓடியது.   அவன்   கண்ணெதிரே ஒருவன் வெள்ளத்தில் சிக்கி  உயிர்தப்ப முயன்று  ஆற்றோடு செல்வது தெரிந்ததும்   திடீரென்று  ஒரு யோசனை தோன்றியது. அரண்மனைக்கு திரும்பியவன் உடனே  அவனது காவலர்களை அழைத்து திருநாவுக்கரசரை  ஒரு பெரிய கனமான பாராங்கல்லோடு  பிணைத்து  கடலில் எறியுமாறு  ஆணையிட்டான்.

அமைதியாக  வீற்றிருந்து   சிவ தியானம் செய்துகொண்டிருந்த  நாவுக்கரசரை சில வீரர்கள் பிடித்து ஒரு பெரிய  கல்லோடு கட்டி கடல்மாதிரி ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் தூக்கி  வீசினார்கள். அவர்கள் தன்னை கொல்லவந்தவர்கள் என்று அறிந்த  நாவுக்கரசர்  பதட்டமடையவில்லை.  ஓம் நமசிவாய மந்திரத்தை விடாமல் ஜபித்துக் கொண்டிருந்தார்.  அவர்களை தடுக்கவில்லை. எதிர்க்கவில்லை.

விஷத்தை கொடுத்தோம். அதை உண்டும் அவன் சாகவில்லை,  யானையை ஏவி தலை சிதறச்செய்தோம் . தப்பித்தான்.  இந்த முறை அவன் தப்பிப்பது முடியாத  காரியம் என்று அரசன் நம்பினான்.

''
சிவா,  இதுவும் உன் விளையாட்டா. நடக்கட்டும்  உன் கட்டளையை நான் மீறேன் என்று  திருநாவுக்கரசர் கண்களை மூடி  பரமேஸ்வரனை, வீரட்டானேஸ்வரனை வேண்டிக்கொண்டார். கல்லில் கட்டப்பட்டு கடலில் வீசப்பட்டார்.  

கடலில் வீழ்ந்தது தெரிந்தது. அப்புறம்?  எப்படி  அந்த பெரிய  பாறாங்கல் ஒரு தோணியாக மாறி அதன் மேல் அவர்   சொகுசாக வீற்றிருந்தார்?  ஆஹா  பரமேஸ்வரா  என்னே உன் கருணை என்று கண்களில் நன்றியோடு கண்ணீர்  பெருக ஒரு பதிகம் பாடினார்.

பண் : காந்தார பஞ்சமம்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணையாவது நம சிவாயவே-    (நான்காம் திருமுறை, 4262)

என்னை கல்லோடு  பிணைத்திருக்கும்  இந்த  கயிறு எது   தெரியுமா.என் பழவினைப் பயனும் இந்த பிறவியில் நான் இழைத்த பாபங்களும்  தான். கல்  என்னை ஆட்டிப்படைக்கும்   மும்மலங்கள்.  உன்  திருவருள்.  இந்த கடல்  பிரவிப்  பெருங்கடல். எல்லையற்றது.   கரையேற்றுபவன்  பரமேஸ்வரன் நீயே .  ஓம் நமசிவாய என்ற  ஐந்தெழுத்து ஒன்றே என் வாயில் பிறக்கும் வேதச்  சொல். அதுவே எனக்கு துணை. உன் நாமம் உன்னை விட  சக்தி வாய்ந்தது.  பரஞ்சோதியான உன்னை , உன் திருவடிகளை போற்றி  என் இருக்கைகளை கூப்பி வணங்குவதை விட  எனக்கு  சிறந்த செயல் எது?   என்னை எவ்வளவு பெரிய கல்லோடு  எவ்வளவு  ஆழமான கடலில் கொண்டு போய்  எறியட்டுமே . உன் ஐந்தெழுத்து  நாமம் துணை  நிற்கட்டும்.

நாவுக்கரசர் வேண்டிய மறுகணமே  அவரை கல்லோடு  பிணைத்திருந்த கயிறுகள் அறுந்து விழுந்தன. கல் ஒரு  தெப்பமாக மாறி  கரையை நோக்கி மிதந்தது.  அந்த கல்  தோணியில்  திருநாவுக்கரசர்  கைகளை கூப்பி கண்மூடி  வீரட்டானேஸ்வரனை வணங்கியவர் அமர்ந்திருந்தார்.  கல் தோணி  திருப்பாதிரிப்புலியூர்  கரையை  நெருங்கியது.குப்பம் என்று இப்போது நாம்  காணும் இடம்தான்   அப்பர் கரையேறிய இடம்.  திருவண்ணாமலையில்  8 முறை வணங்குவதும் சிதம்பரத்தில் 3 முறை வணங்குவதும் இங்கு ஒருமுறை வணங்குவதற்குச் சமம்.    மூன்று  நான்கு முறை  இந்த  ஆலயத்தை தரிசிக்கும் பாக்யம் எனக்கு கிடைத்தது  
திருப்பாதிரிப் புலியூர்  274 சிவாலயங்களில் இது 229 வது தேவாரத்தலம்.  ரயில் நிலையம் அருகே  உள்ளது.  இப்போது நாம்  கடலூர் எனும்    ஊர் தான்  திருப்பாதிரிப்புலியூர்.    அருமையான சிவன்கோவில்.  ஈஸ்வரன் பெயர் பாடலீஸ்வரர்   தோன்றாத்துணை நாதர்.    ஸ்வயம்பு   லி ங்கம்.  அம்பாள் பெரியநாயகி, தோகைநாயகி, அருந்தவ நாயகி.   கிழக்கு நோக்கிய   ஆலயம்.   ராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகரதீர்த்தம்.  படித்துறைகளுடன் உள்ளது. முன்னால்  மண்டபத்தை  அடுத்து  5 நிலை இராஜகோபுரமும் உள்ளது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன.  உள்ளே உயரத்தில் பலிபீடம், செப்புக்கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி. 

 திருநாவுக்கரசர் உற்சவமூர்த்தி.  அமர்ந்த கோலத்துடன் அப்பர் கைகூப்பி உழவாரத்துடன் காட்சி தருகின்றார். திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த ஸ்தலத்தில் .மட்டும் தான்.  வ்யாக்ர பாதர் எனும்  புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற தலம். . பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று.

அப்பர்  கல் தெப்பத்தை விட்டு   கரையேறி  எதிரே தோன்றிய  திருப்பாதிரி புலியூர் சிவனை வணங்குகிறார்.  பாடிய தேவாரத்தில்   என்னை  என்றா தாய்  தந்தையரே,  தோன்றாத்துணையே  என்று பாடிய  இந்த  ஸ்தல பதிகம்:

ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே. 

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே. 
இந்த  அதிசயக்  காட்சி யைக்கண்ட  அரசனின் ஆட்கள், மற்றும் சிவபக்தர்கள்  சிலையாகினர்.  அப்பரை வணங்குகிறார்கள்.

மகேந்திர பல்லவன் விஷயம் அறிகிறான்.  அவன் இதுகாறும்  பின்பற்றிய  சமண மதம் அவனை விட்டு விலகுகிறது. சிவபக்தன் ஆகிறான். நமக்கும் எண்ணற்ற  சிவன் கோவில்களை கட்டி நாம் தரிசிக்க வழி செய்திருக்கிறார்கள் அவனுக்குப் பின் வந்த  பல்லவர்கள்.


DHAKSHINAMURTHY STOTHRAM



ஆதி சங்கரர் 
தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் 


                      1  குருவாய் வருவாய்  


मौनव्याख्या प्रकटित परब्रह्मतत्त्वं युवानं
वर्षिष्ठांते वसद् ऋषिगणैः आवृतं ब्रह्मनिष्ठैः ।
आचार्येन्द्रं करकलित चिन्मुद्रमानंदमूर्तिं
स्वात्मारामं मुदितवदनं दक्षिणामूर्तिमीडे ॥१॥

Mauna-Vyaakhyaa Prakattita Para-Brahma-Tattvam Yuvaanam
Varssisstthaam-Te Vasad Rssigannaih Aavrtam Brahma-Nisstthaih |
Aacaarye[a-I]ndram Kara-Kalita Cin-Mudram-Aananda-Muurtim
Svaatmaaraamam Mudita-Vadanam Dakssinnaamuurti-Miide ||1||

ஓம் மௌனவ்யாக்யா ப்ரகடிதபரப்ரஹ்மதத்வம்யுவானம்
வர்ஶிஷ்டாம்தேவஸத்றுஷிகணைராவ்றுதம் ப்ரஹ்மனிஷ்டைஃ |
ஆசார்யேம்த்ரம் கரகலித சின்முத்ரமானம்தமூர்திம்
ஸ்வாத்மராமம் முதிதவதனம் தக்ஷிணாமூர்திமீடே ||

அத்வைதம் என்றாலே  ரெண்டல்ல  எல்லாம் ஒன்றே.    ஒவ்வொரு ஜீவனுடைய  ஆத்மாவும்  பரமாத்மாவும் ஒன்றே தான் என்று விளக்குவது.  இந்த தத்வத்தை ஆதிசங்கரர்  போதித்தார்.  ஜீவனும்  பிரம்மமும்  வேறல்ல  ஒன்றே  என்று  காட்டும்  முத்திரை தான் சின் முத்திரை.  இதை தான்  தட்சிணாமூர்த்தியாக பரமேஸ்வரன்  கல்லாலமரத்தினடியில் மௌனகுருவாக அறிவிக்கிறார்.  மௌனம் ஒன்றே  சிறந்த  சம்பாஷணை.  மௌனமே ப்ரம்மஞானத்தின்  மொழி.  இதை அறியாத அஞ்ஞானிகளுக்கு  தனது வழியில்  அறியாமையை போக்குகிறார்  ஆதி சங்கரர்.

இந்த  உலகம் சப்தம் நிறைந்தது.  அதை  ஒரு கண்ணாடியில்  பிம்பமாக  பார்க்கிறோமே. சப்தம் கேட்கிறதா. நிசப்தமாக  ஊமைப்படமாக அல்லவோ நகர்கிறது.   ஆனால்  எவ்வளவு  துல்லியமாக நடப்பவை சப்தமில்லாம லேயே உணர முடிகிறது. பரமாத்மாவை  ஆத்மா இப்படித்தான்  மௌனமாக  காட்டுகிறது.   அசந்து தூங்குகிறேன். கனவில் ஒரு பெரிய சண்டை யாரோடு போடுகிறேன்கத்துகிறேன்.  சப்தம் கேட்கவில்லையே. சப்தமில்லாமலேயே   சம்வாதம்.

தக்ஷிணாமூர்த்தே,   ஏன்  நீ  தெற்கு பார்த்து அமர்ந்தாய்?  அது  காலனின் இடமாச்சே. ஓ!  நீ  கால காலன் அல்லவா? சம்ஹார மூர்த்தியே  நீ  என்றாலும் என்ன சாந்தமான முகம். இளம் முறுவல். மௌனம் தானே  சிறந்த பூரண பாஷை.  தன்னில் தானே லயித்து சர்வம் ப்ரஹ்ம மயம்  என்றுணர்ந்து பிரம்மமே யாகி, உன்னிலும் முதிய  ரிஷிகள் (சனகர், சனாதனர், சனந்தனர், ஸநத்குமாரர் )  சுற்றி அமர்ந்து உன்னை உணர்ந்து மௌனத்தில் உன் பரிபூர்ண உபதேசம்  வைத்தவர்கள். தென் திசை  கல் ஆல மரத்தடியில்  கால் மேல் கால் மடக்கி அமர்ந்த கங்காதர ஜடாதரா, ஜீவாத்மா  பரமாத்மா ஒன்றே என்ற அத்வைதத்தை  சொல்லாமல் சொல்கிறதே உன்  சின் முத்ரை.  மௌனம் தருவது தான்  பேரானந்தம்.  பிரம்மமாக அமர்ந்த நீயல்லவோ  சதானந்தன்.  குருவே உனக்கு நமஸ்காரம்.  


वटविटपिसमीपेभूमिभागे निषण्णं
सकलमुनिजनानां ज्ञानदातारमारात् ।
त्रिभुवनगुरुमीशं दक्षिणामूर्तिदेवं
जननमरणदुःखच्छेद दक्षं नमामि ॥२॥

Vatta-Vittapi-Samiipe-Bhuumi-Bhaage Nissannnnam
Sakala-Muni-Janaanaam Jnyaana-Daataaram-Aaraat |
Tri-Bhuvana-Gurum-Iisham Dakssinnaamuurti-Devam
Janana-Maranna-Duhkhac-Cheda Dakssam Namaami ||2||

வடவிடபிஸமீபே பூமிபாகே னிஷண்ணம்
ஸகலமுனிஜனானாம் ஜ்ஞானதாதாரமாராத் |
த்ரிபுவனகுருமீஶம் தக்ஷிணாமூர்திதேவம்
ஜனனமரணதுஃகச்சேத தக்ஷம் னமாமி ||

மௌனம் தானே  சகலத்தையும் சாதிக்க வல்லது.  ஞானத்தின் உச்சமே மோனம். இதை உணர்த்த தான் ஆடாத அசையாத கல் ஆலமரமா!     எல்லா அசைவுக்கும் காரணம் அசையாத நீயா!    இதுதான்  ''நான் அசைந்தால் அசையும் இந்த அகிலமெல்லாமே '' யாதியானத்துக்கு சிறந்த சாதனம் மோனம் என்று ரிஷிகளுக்கும்  உணர்த்தும்  தெய்வமே  உனக்கு நமஸ்காரம்.  பிறப்பிறப்பு  அறுக்கும் பிஞகன்  என அதனால் தானே  உன்னை போற்றுகிறோம்.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...