Kutti kadhai 75 ஆண்டாளும் தோழியரும் (7)
மார்கழி ஆரம்பித்ததே தெரியவில்லை. நழுவிக்கொண்டே இன்று 21
நாள் ஆகிவிட்டதே. என்ன அற்புதமான அனுபவம் இத்தனை நாளும். தினமும் யமுனையில் நீராடி கிருஷ்ணன் வளர்ந்து வாழும் ஆயர்பாடியில் நந்தகோபன் மாளிகைக்கு தினமும் சென்று கிருஷ்ணனை துயிலெழுப்புவது எல்லாருக்கும் கிடைக்கும் சந்தர்ப்பமா? சாத்தியமா?.
அந்த சிறுமி ஆண்டாளுக்கு, அவளால் மற்ற சிறுமிகளுக்கு, இது வரப்ரசாதமாக
அமைந்ததே! அதி புத்திசாலியான ஆண்டாளின் வர்ணனைக்கு ஈடு இல்லை. நந்தகோபன் வீட்டு பசுக்கள் மந்தையாக மலை போன்று பருத்து பெரிதாக நிற்கின்றனஅந்த அதிகாலையில். கோபர்கள் பெரிய பாத்திரங்களை எடுத்துகொண்டு அந்த கறவைப்பசுக்களை அணுகி பால் கறக்க அந்த பாத்திரங்களை மடிக்கருகில் வைத்த கணத்திலேயே, தானாகவே பால் வெள்ளம் பொங்கி பாய்கிறது பாத்திரத்தில். கண்ணிமைக்கும் நேரத்தில் பாத்திரம் பொங்கி வழிகிறது இடமில்லாமல்!! ஒரு வள்ளல் கேட்டு கொடுப்பவனல்ல. கேளாமலேயே வாரி கொடுப்பவன். நந்த கோபன் பசுக்கள் ஒவ்வொன்றுமே பால் வள்ளல்கள். உன் வீட்டு பசுக்களே இப்படி வள்ளல்கள் என்றால் எண்ணவொண்ணா சகல உயிர்களையும் ஊட்டி வளர்க்கும் நீ எத்தனை பெரிய வள்ளல். உன்னை "பெரிய கடவுள்" என்பது எத்தனை பொருத்தம். உன்னை எதிர்த்தவர்கள் தவறை உணர்ந்து உன்னை சரணடைவது உன் பேரருளுக்கல்லவோ?. உலக மாயை இருளகற்றும் பேரொளியே துயிலெழு, உன்னை தேடி வந்த இந்த சிறுமிகளுக்கும் வழிகாட்டு. எங்கள் பாவை நோன்பின் கருப்பொருளாக வந்து எங்களை எப்போதும் உன் நினைவிலேயே போற்றி புகழ்ந்திட அருள்வாய்.
No comments:
Post a Comment