Kutti kadhai 74 ஆண்டாளும் தோழியரும் (6)
மார்கழி 20வது நாளான இன்று
ஆண்டாளும் சிறுமியர்களும்
வழக்கம்போலவே இன்று காலையும் நந்தகோபன்
மாளிகை சென்று துயிலெழுப்ப தயாராயினர்
. யாரைபிடித்தால் காரியம் ஆகும் என்பது சுலபமாக
தெரிந்து விட்டது அவர்களுக்கு.தங்கள் பாவை நோன்பு பலனளிக்க எவர்ஆசியும்
அருளும் தேவையோ அவரையே
இயங்க வைக்கும் சக்தி நப்பின்னை
பிராட்டியே என்பதால் ஆண்டாளின்
சிறுமியர் குழாம் நப்பின்னையையே
வளைய வந்ததில் என்ன ஆச்சர்யம்! மாளிகையில்
முன் வாசலில் அவர்களின் இனிமையான குரலில் நாராயண னையும் கிருஷ்ணனையும்
போற்றி பாடினர். ஆண்டாள் வேண்டினாள்: முப்பத்து முக்கோடி தேவர்கள்
வணங்கும் தேவாதிதேவா,
நாராயணா, கேளாமலேயே அவர்களை ரட்சிக்கும்
தேவனே துயிலெழு.
அம்மா நப்பின்னை பிராட்டியே
உலக நாயகியே நீயும்
துயிலெழு. உங்கள் ஆசியுடன் எங்கள் நோன்பு நன்று
தொடர வாழ்த்தி அருளவேண்டும். அந்த தூய மனங்களில்
என்றும் வீற்றிருக்கும் நாராயணனும்
பிராட்டியும் அவகளை காத்ததுபோல் நம்மையும்
நாம் வேண்டாமலேயே கேளாமலேயே காப்பர். அச்சிறுமிகள்
அன்றும் யமுனை நீராடி விரதம்
வழக்கம் போல் கொண்டாடினர் கை நிறைய புஷ்பங்களை எடுத்து கொண்டு வாய் நிறைய நாமாவளி
சொல்லி கொண்டு வீதி வழியாக அருகே இருந்த கிருஷ்ணன் கோயில் சென்று வழிபட்டு அன்றைய
விரதம் முடிந்தது. அந்த நாளாகிய இன்று 4.1.2013 கீழ் திருப்பதியில் ஸ்ரீ
கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது மாலையில் ஊஞ்சல் சேவையுடன்,
மாடவீதி புறப்பாடு. காலம் மாறலாம். காட்சிகள் மாறுவதில்லை!!. கோலத்தில் சற்று
வேறுபாடு. அவ்வளவே!
No comments:
Post a Comment