Thursday, January 31, 2013

பையனின்கேள்வி?




குட்டி கதை               பையனின் கேள்வி?
எக்க சக்கமாக கும்பல் உள்ளேயும் வெளியுமாக போய்கொண்டிருக்கும் ஒரு பெரிய  ஷாப்பிங் சென்டர் அது. அதன் வாசலில் ஒரு கண்ணாடி ஷோ ரூமில்  நிறைய புது புது  மாடல்களில் காலணிகள் வைக்கப்பட்டிருந்தது.
அந்த  கட்டிடத்தின் வாசலில்  ஷோ ரூம் கண்ணாடி அறையின்  வழியா  உள்ளே இருக்கும் ஷூவெல்லாம்  பார்த்துக்கொண்டே  தெருவில்  
ஒரு  10 வயசு பையன்  கன்னத்தில் கை வைத்துகொண்டு உட்கார்ந்திருந்தான். மார்கழி ளிரில்  அவன்  நடுங்கிக் கொண்டு  இருந்தான். மேலே  போர்வை இல்லை. காலில் செருப்புகூட இல்லஅவன்  இருந்த இடத்துக்கு அருகே ஒரு பெரிய  கார் வந்து
 அழகாக நின்றது. அதன் உள்ளேயிருந்து  ஒரு  பணக்கார  பெண்மணி இறங்கினாள்.  அவள்  பார்வை  இந்த பையன் மேல் பட்டது.
"டே  பையா, இந்த  குளிரில்  இங்கே  என்னடா பண்றே,  என்ன  பார்க்கறே?" அவன் அவளை  ஒரு முறை பார்த்துவிட்டு  மீண்டும்  கண்ணாடி வழியாக உள்ளே பார்வையிட்டான். அப்படி  என்ன  உள்ளே இருக்கு  
பார்க்க  என்ற  ஒரு ஆவல்   மேலிட கண்ணாடி வழியாக பார்த்தாள். உள்ளே  நிறைய  வித விதமான  காலணிகள்.  
"இதையே உற்று பார்க்க என்ன இருக்கு? அதுக்கு எதற்காக வாயில் ஏதோ  முணுமுணுக்கறே? 
"கொஞ்சம் நேரம் முன்னாடி இங்கே  ஒருத்தர் ஒரு விஷயம்  சொல்லிண்டு போனார். அது பிரகாரம் பண்ணிண்டு  இருக்கேன்."
"என்னடா  சொல்றே?,   யார்  என்ன  சொன்னார்?" 
" ஒரு தாத்தா பக்கத்திலே இருந்த மாமா கிட்ட "நீ  கவலையே படாதே. உன்னுடைய குறையை அந்த கிருஷ்ணன் கிட்ட சொல்லிடு. அவன் பாத்துப்பான். உன் தேவையெல்லாம் பூர்த்தியாயிடும். இது  என்னுடைய அனுபவம்"  என்று  சொல்லிக்கொண்டே போனார். அதனாலே நான் ரொம்ப நேரமா இந்த கிருஷ்ணன் என்கிறவர் கிட்ட எனக்கு ஒரு ஷூ வேணும்னு வேண்டிண்டு இருக்கேன்.."
"அப்படியா. சரி. என்னோட கொஞ்சம் வரியா "
உள்ளே அவனை அழைத்துக் கொண்டு சென்று அரை  டஜன் சாக்ஸ் வாங்கினாள். 
"சார் ஒரு டவல் தரிங்களா?" என்று கடைக்காரிடம் கேட்டு பணத்தை  நீட்ட  அது கிடைத்தவுடன் டாய்லெட் ரூம் சென்று அவனை  நிற்கவைத்து  குனிந்து அவன்  முழங்கால் வரை அலம்பி, அழுக்கு, மண் எல்லாம்  நீக்கி  டவலால்  துடைத்து  சாக்ஸ் மாட்டினாள். அவன்  கால் அளவுக்கு  நல்ல  புது  விலையுயர்ந்த புது மாடல்  ஷூவும் காலில் இணைந்தது. மீதி  5 ஜோடி சாக்ஸ் பொட்டலம்  கட்டி  பையில் போட்டு  அவனிடம் நீட்டி முதுகில்  தட்டி  "இப்போ சந்தோஷமாடா?" கேட்டுவிட்டு நடந்தாள் அந்த பெண்மணி. 
போகின்றவள் கையை  பிடித்து இழுத்து அவளை உற்று பார்த்த  பையன் கண்களில் பிரவாஹம். அவன்  வாயிலிருந்து ஒரு சந்தேக கேள்வி எழுந்தது  "  நீ  தான் கிருஷ்ணனோட  அம்மாவா?"

கனாக்கண்டேன்தோழிநான்



Kuttikadhai         கனாக்கண்டேன்  தோழி  நான்

நமது  கனவில்  முக்கால்வாசி  பேருக்கு திருடன்  வீட்டுக்குள்  வருவது போல்,  நம்மை  யாரோ துரத்துவதால்  துண்டை காணோம் துணியைக் காணோம்  என்று  ஓடுவது போல்,  போலீஸ்காரனிடம் பிடிபடுவதுபோல், பஸ்ஸிலிருந்து  விழுவதுபோல்,  மனைவியை  கோபித்துக்  கொள்வது போல்,-- இப்படிப்பட்ட கனவுகள் வருகிறதே. நாளெல்லாம் வாயினிக்க  அந்த கண்ணனை போற்றி பாடினாலும்  இரவு  தூங்கும் போதாவது  அந்த அபூர்வமான  ஆண்டாள் என்கிற அழகிய  சிறு  பெண் வெறுமனே  தூங்கினாளா என்றால் அது  தான் இல்லை. தூக்கத்திலும் இடைவிடாத கனவு ஒரே  சீராக. அந்த  கனவு என்ன?  வாருங்கள் அவள்  தன் தோழிகளிடம் மறுநாள் அதை பற்றி  விவரமாக  சொல்வதை நாமும்  "உம் " கொட்டிகொண்டே " அப்புறம், அப்புறம்" என்று கேட்போம்:

நிறைய யானை கூட்டம் சுற்றி வருகிறது. நடுவில்  ஜம் என்று  அந்த அழகன் வருகிறான். எங்க பார்த்தாலும் தோரணம். வேதியர் கூட்டம்  மந்திர கோஷத்துடன் பூரண கும்பத்தோடு வரவேற்க காத்திருக் கிறார்கள்.  பெரிய  பந்தல், வாழை, பாக்கு போன்ற மரங்களுடன், குறையொன்று மில்லாத  அந்த  கோவிந்தன் என்னமா  பட்டாடை உடுத்தியிருக்கிறான்!! முக மலர்ச்சியோடு இதோ பந்தலில் நுழைந்து விட்டான். கல்யாணத்துக்கு நாள் பார்த்து எல்லா ஏற்பாடுகளும் தான் செய்தாகிவிட்டதே. என்னை அவனுக்கு பெண் பார்க்க யாரெல்லாம் வந்தார்கள் தெரியுமா. இந்திரன்,வருணன்,அக்னி வாயு போன்ற தேவர்கள் கூட்டமே வந்து அவனுக்காக என்னை பெண் கேட்டார்களே தெரியாதா?. இதோ,எனக்கு மந்திரங்கள் சொல்லி ஆசிர்வாதத்தோடு புது கூறை புடவை கூட கட்டிவிட்டாச்சு. தூக்க முடியாத கனமான இந்த  மாலையை கூட என் கழுத்திலே போட்டுவிட்டாச்சு.அப்பப்பா! எத்தனை வேத கோஷ பிராமணர்கள், எங்கெங்கோ நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து ப்ரோக்ஷணம் செய்து, மங்கல நாண் அதில் தோய்த்து என் கையில் காப்பு கூட அந்த மாயாவி கட்டியாச்சே! கல்யாணத்துக்கு சதிர் ஆட பெரிய பெரிய நாட்யக்காரிகள் வந்திருக்கிறார்கள். எல்லோர் கையிலும் தீபங்கள் எவ்வளவு அழகாக மின்னுகிறது பார்த்தாயா?  இந்த கல்யாண ஏற்பாடுகள் ஒழுங்காக நடக்கிறதா என்று யார் மேற்பார்வை தெரியுமா?.வேறு யார்?. இந்த மதுரை ஊருக்கு ராஜாவான பாண்டியன் தான்.  
முகூர்த்த நேரம் வந்துவிட்டதே. நாதசுரம், தவில், மங்கள வாத்யங்கள், சங்கு எல்லாம்  முழங்கும் போது, இதோ இந்த முத்து பந்தலில் என்னருகில் வந்து என் கையை தானே எடுத்து  பிடித்து அந்த கிருஷ்ணன் என்னை  கைப்பற்றிவிட்டான். மாங்கல்யம்  தந்துனானேனா.....".மந்திரம்  ஒலித்துவிட்டதே 
மந்திர கோஷங்கள் வானை பிளக்க அந்த  கோவிந்தன் என் காலை  பற்றினான். அம்மி  மிதித்தேன்  அருந்ததி பார்த்தேன்.என் கையை அவன் பற்றிக்கொண்டு என்னை அணைத்து வர  நானும் அவனும் அக்னி வலம் வந்தோம். என் கனவை ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் தோழியரே,  நான்  அவன் மனைவியானேன் எனது “கண்_அவன்” ஆனான்”
தோழியர்கள் ஆண்டாள் கனவை சொல்லி முடித்ததும்  ஆண்டாளை  கேட்டனர். உனக்கு நிஜமாக எப்போ டீ அந்த கிருஷ்ணனோடு  கல்யாணம்? ......
ஆண்டாள் கனவு கண்டாளே அது  நிறைவேறியதா? .கனவு நிறைவேறுமா?. ஓ ஆகுமே! மாசம்  பூரா விரதமிருந்து ஆண்டாள் வேண்டிக்கொண்டது நிறைவேறியது. கனவுகாட்சியாகியது.  போகியன்று   சில இடங்களில், தை முதல் நாள் அன்று என்றெல்லாம் ஆண்டாள் திருக்கல்யாணம் ஊரெல்லாம் காலா காலமாக  நடைபெறுகிறதே நானும் உங்களை அவள் கல்யாணத்துக்கு  அழைத்து போகிறேனே  இதோ இந்த லிங்க் கிளிக் பண்ணி பாருங்களேன். எவ்வளவு தடபுடலாக ஆண்டாள் கல்யாணம்  நடை பெறுகிறது.   
CLICK THE FOLLOWING LINK  OR  COPY AND PASTE THE LINK IN INTERNET BROWSING   .
relaxing
J.K.SIVAN  -   Please stay connected with Sri Krishna by visiting http://youiandkrishna.blogspot.in/ it  contains  very  valuable and interesting information you may wish to know.  Please visit the website and post your comments which is a request from me
http://mmimages.maalaimalar.com/Articles/2012/Mar/6b9fcf1a-8ecd-4cd2-9526-38e97f6d3faf_S_secvpf.gif

http://4krsna.files.wordpress.com/2009/01/dsc00822.jpg?w=500&h=666
http://farm8.staticflickr.com/7030/6766199011_ec73f91df6_b.jpg
http://farm8.staticflickr.com/7034/6766182529_64ca464101_b.jpg

http://farm8.staticflickr.com/7031/6766183827_87992cb990_b.jpg
 ...
http://farm8.staticflickr.com/7032/6766185693_700a97e9f0_b.jpg
http://farm8.staticflickr.com/7158/6766187135_9c9b12207f_b.jpg

.
http://farm8.staticflickr.com/7016/6766188475_5f33bc0d51_b.jpg
 
http://farm8.staticflickr.com/7005/6766189463_6c2c4f6e83_b.jpg

.
http://farm8.staticflickr.com/7163/6766190783_a848fca4f5_b.jpg

http://farm8.staticflickr.com/7024/6766192113_3610ebb458_b.jpg

ஆண்டாளும்தோழியரும்15




Kutti kadhai 83   ஆண்டாளும்  தோழியரும் (15)

என்னுடன் இந்த மார்கழி மாதம் பூரா விடியற்காலை குளிரில் குளித்து நடுங்கி கொண்டு தலையில் குரங்கு குல்லாவோடு, ஆண்டாள்  மற்றும் அவள்  தோழியர்  பின்னே   கூடவே வந்த உங்களுக்கு என்ன விதத்தில் நான் நன்றி தெரிவிக்கமுடியும்? ஆண்டாள் என்ன  சொல்கிறாளோ அதையே திருப்பி சொல்வது தான் சாலச்சிறந்தது.
“கண்ணா, இந்த மார்கழி முழுதும் பக்தியோடு உன்னை பாடிய  இந்த ஆயர்குடி இடைப் பெண்கள் நாங்கள் உன்னிடம் என்ன கேட்கிறோம்? நீயார்? எங்களைப்போல் இடையர் குலத்தில் பிறந்தவனல்லவா.அதனால் நாம் எல்லோரும் ஒரே குலம் அன்றோ,ஒரே வித்தியாசம் நமக்குள் என்னவென்றால் நீ ஆண்டான் நான் ஆண்டாள் ஆக இருந்த போதும் உன் அடிமைஎங்களுக்கு  நீ அருள வேண்டிய வரம் என்ன தெரியுமா?. இனி எத்தனை எத்தனை பிறவியோ அத்தனையிலும் நீ  எங்களில் ஒருவன் நாங்கள் உன்னுடையவர்கள் புரிகிறதா? ஒரே  வார்த்தையில் இறைவனோடு தன்னை பிணைத்து கொண்டு விட்டாள் ஆண்டாள். "கோதா" என்ற அவள் பெயரே  "கோவிந்தா" என்ற அந்த மாயாவியின் பெயருக்குள் அடங்கிவிட்டதே. அவன வணங்கும் நாம் அவளையும் சேர்த்தே தான் வணங்குகிறோம்இந்த 29 பாடல்களையும் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் மகளாக  ஆண்டாள் இந்த திருப்பாவையை எழுதவில்லை. தன்னை கிருஷ்ணன் காலத்திற்கு  கொண்டு சென்று அன்று அங்கு வாழ்ந்த கோபர்கள் கோபியர்கள் எனப்படும் பசு கன்று மேய்க்கும் ஆயர் குல பெண்ணாக பாவித்து மற்ற சிறுமிகளுடன் சேர்ந்து பாவை நோன்பு நோற்றும்  கிருஷ்ணனின் அருளை  பெற்ற  சிறுமியாகவே  இந்த  திருப்பாவை பாசுரங்கள்  அமைந்தன.
 இந்த மார்கழி 29 கடைசி நாளான இன்று கடைசி  30வது பாசுரத்தில் தான் ஸ்ரீ ஆண்டாள் இந்த பாசுரங்களை எவர் தப்பின்றி உண்மையான பக்தியோடு இறைவன் மேல் பாசத்தோடு மார்கழி மாதம் பூரா இசைக்கிறார்களோ அவர்கள் அந்த மாதவன் கேசவன் என்றெல்லாம் ஆயிர நாமங்கள் கொண்ட கோவிந்தனின் அருளை,சதுர்புஜ நாராயணின் ஆசியை, பெறுவர்.குறையொன்றும் இல்லாத கோவிந்தன் தாள் சேர்வர்.  இது  நிச்சயம்,  உறுதி, நம்பலாம் என்றுமுடிக்கிறாள். திருப்பாற்கடலில் விளைந்த  திரு அல்லவா அவள் -- ஆண்டாளாக அவதரித்து திருப்பாவை தந்தவள்!!.    
நம்  எண்ணம் முற்றும் அந்த  நீலவண்ணனுக்கே உரித்தாகட்டுமே!!. நாளை நாம் ஆண்டாள் எப்படி அந்த மதுசூதனனை கைப்பிடித்து  கணவனாக்கி கொண்டதாக கனவு கண்டாள் என்று விழித்துக்கொண்டே கனவை அனுபவிக்க போகிறோம்!!! 

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...