Saturday, June 18, 2022

SWAMI DESIKAN

 சுவாமி தேசிகன் -- நங்கநல்லூர்  J.K. SIVAN

அடைக்கலப்பத்து   1

 எவ்வளவு தன்னடக்கம்  ஸ்வாமி  தேசிகனுக்கு.  தன்னை  ஒரு  காகம்  என்கிறார். .

''பத்தி முதலாம் மவதில், பதி எனக்கு கூடாமல்,
எத்திசையும் உழன்றோடி, இளைத்து விழும் காகம் போல்,
முத்திதரு நகர் ஏழில் முக்கியமாம் கச்சி தனில்,
அத்திகிரி அருளாளற்கு, அடைக்கலம் நான் புகுந்தேனே ||1||

''நாராயணா, நான் என்ன செய்வேன். என்னால் மனதை ஒருமித்து உன்னை நினைக்க முடியவில்லையே.  பக்தி அவ்வளவு எளிது அல்ல. எங்கு  சென்று அமைதியாக அமர்ந்தாலும்,  நான் சென்று அமர்ந்த இடம் தான் அமைதியாக இருக்கிறதே தவிர என் மனத்தில் அமைதி  இல்லையே. எத்தனையோ வித எண்ணங்கள் என் மனதை திசை திருப்புகிறதே. நான் ஒரு காகம் தான். எங்கெங்கோ வெவ்வேறு திசைகளிலுமே மாற்றி மாற்றி  பறந்து களைப்புற்று,  கடைசியில்  சக்தி இழந்து  நீயே கதி என்று உன் திருவடிகளில் விழுந்த தாகம் கொண்ட காகம்.  

முத்தி தரும்  சப்த க்ஷேத்திரங்களில் தலை சிறந்ததாக  அத்திகிரி எனும் காஞ்சிபுர வாசனான  ஸ்ரீ வரதராஜா , உன் திருவடிகளே சரணம் என்று முதல் பாசுரத்திலேயே  அற்புதமாக பாடுகிறார் சுவாமி தேசிகன்.

கொஞ்சம் ஊன்றி உள்ளர்த்தம் தேடுபவர்களுக்கு ஒரு குறிப்பு கிடைக்கும்.  இந்திரன் மகன் காகாசுரன் சீதையை துன்புறுத்தியதால்  ஸ்ரீ ராமன்  அவனை நோக்கி எறிந்த ஒரு சிறு புல் சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறி அவன் உயிர் குடிக்க,  துரத்துகிறது. எங்கெங்கோ சுற்றி அலைந்த காகாசுரன் கடைசியில் ஸ்ரீ ராமன் பாதத்தையே  கதி என அடைந்து மன்னிப்பு கேட்கிறான்  என்பதை தான் சுவாமி தேசிகன் தன்னை  சரணடைந்த  காகம் என்று சொல்கிறாரோ  என்று  தோன்றுகிறது. 

சுவாமி தேசிகனை மேலும் வணங்கி கேட்போம்:


No comments:

Post a Comment