ஹ்ருதயம் #நங்கநல்லூர்_J_.K_SIVAN
''பகவானே, எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும் '
பகவான் ரமணர் அந்த பக்தனை பார்த்து தலை அசைத்தார்.
''ஹ்ருதயம் வலது பக்கம் இருக்கிறது என்கிறீர்களே. விஞ்ஞானிகள், உடல் சாஸ்திர வல்லுநர்கள் இடது பக்கம் தான் இருக்கிறது என்று எழுதுகிறார்களே. எது சரி ?''
''இதயம் என்கிற உறுப்பு இடது பக்கம் தான் இருக்கிறது. நான் சொல்லும் ஹ்ருதயம் உடலில் இயங்கும் கண்ணுக்கு தெரியும் உறுப்பு அல்ல. வலப்பக்கம் தான் உள்ளது. எனது அனுபவத்தில் தெரிந்த விஷயம் இது. இது விஷயமாக ஏதாவது சான்று வேண்டுமானால் மலையாள ஆயுர்வேத புத்தகம் ஒன்றில், சீதா உபநிஷத் ஆகியவற்றில் பார்க்கலாம் .
''எனக்கு தெரியும். பகவான் அதிலிருந்தெல்லாம் மேற்கோள் காட்டுகிறார்.
நமக்குள் இருக்கும் ஜீவன் என்பது ஹ்ருதயத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. மூளையில் அது விழிப்பு நிலையில் இருக்கிறது. நான் சொல்லும் ஹ்ருதயம் ஒரு சதையின் குழிவு . ரத்தத்தை அழுத்தி அனுப்புவது இல்லை. வேதங்கள் சொல்லும், நூல்கள் விவரிக்கும் ''நான்'' என்பதை உணர்த்தும் ஒரு மைய பாகம். இது என்ன சதைப்பிண்டத்திலா உருவாகிறது.? இல்லை. நமது தேகத்தில் எங்கோ மைய பகுதியில் அமர்ந்து ஆணையிடுகிறது. எல்லாமே ஆத்மாவின் வெளிப்பாடு. ஆகவே தான் இந்த ஹ்ருதயம் என்பது முழு தேகமும், அதை கடந்த இந்த பிரபஞ்சமும் ஆகும் ''நான் '' என்பதின் உருவகம்.
ஆத்மாவை, பிரம்மத்தை, எங்கோ ஒரு இடத்தில் ஸ்தாபிக்க அப்பியாசம் செய்து ரிஷிகள் கண்டுபிடித்த இடம் தான் ஹ்ருதயம். ஆத்மாவின் இருப்பிடம். எங்கும் வியாபித்துள்ளது. அதுவே எல்லாம்,''நான்'' என்பது அதுவே. இந்த உடம்பு இல்லை. இனிஷியல் ஒரு பெயர், அதற்கப்புறம் ABCD என்று படித்த டிக்ரீ எல்லாம் போட்டுக்கொள்ளும் இந்த ஆசாமி இல்லை.
ஏதாவது மையமாக முக்யமாக இருந்தால் அதை ஹ்ருதயம் என்போம். பூரண பரிசுத்த மனது, ஆத்மா. சதையிலோ, எலும்பிலோ இல்லாமல் வலது மார்பில் குடிகொண்டது. உணர்வு. உலகை இயங்க வைக்கும் சுவிட்ச் போர்டு. தேகத்தோடு மனதை சம்பந்தப்படுத்தாமல் தெரிந்து கொள்ளவேண்டிய ரஹஸ்யம். தேகத்தை முதலில் ஆத்மா என்று நம்புவதை அடியோடு மறக்க வேண்டும்.
THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
▼

No comments:
Post a Comment