Monday, November 7, 2022

ANNABISHEKAM

 



அன்னாபிஷேகம்  -  நங்கநல்லூர்  J K   SIVAN 


இன்று நேற்றல்ல  பல  நூற்றாண்டுகளாக  வருஷாவருஷம்  ஐப்பசி பௌர்ணமி அன்று  பரம சிவனுக்கு  பூரணமாக  அன்னத்தால்  அபிஷேகம் செய்வது ஒரு  பாரம்பரிய  வழக்கம்.  ஆஹா  ப்ரஹதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

சிவன் அபிஷேகப் ப்ரியன். பால், தயிர், தேன்,  புண்ய தீர்த்தங்கள்,இளநீர்,  கரும்புச்சாறு, சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம்  விபூதி, போன்றவைகளால்  அபிஷேகங்கள் மந்த்ரங்களோடு  செய்யும்போது மனதுக்கு, கேட்க  காதுக்கு, பார்க்க கண்ணுக்கு   ரம்யமாக இருக்கும்.  அன்ன அபிஷேகம் என்பது வெள்ளை வெளேரென்று  வடித்த சாதத்தால் அபிஷேகம் செய்வது.

அரிசி என்பது வாழ்க்கை, செழுமை, வளமை.   பஞ்ச   பூதங்களால் நமக்கு கிடைப்பது. அரிசியை எடுத்துக் கொண்டால் அதில்பஞ்ச பூதம் எப்படி  பங்கு கொள்கிறது?  நெல் விளைவது, பூமியில், அதற்கு நீரும்  சூரியன் ஒளியும் தேவை, காற்று அதை அசைந்தாடி வளரச் செய்கிறது. ஆகாசத்திலிருந்து  மழை நீராக பொழிகிறது. இந்த ஐந்தும் சேர்ந்தால் நெல் விளைந்து அரிசியாகி சாதமாக்கி  அவற்றை உருவாக்கிய அவனுக்கே  மன  நிறைவோடு அபிஷேகம்.   அதெல்லாம் அனைவருக்கும் பிரசாதமாக விநியோகம்.

தஞ்சாவூர்  ப்ரஹதீஸ்வரருக்கு  முழுமையாக  லிங்கம் முழுந்தும்  750  கிலோ  சாத,  அன்னாபிஷேகத்தால் லிங்கத்தை  மூடி, வேகவைத்த காய்கறிகளால் மாலை அணிவிக்கிறார்கள்.அதேபோல் இன்னொரு பிரகதீஸ்வரர் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருப்பவருக்கு அன்னாபிஷேகம் நடத்தும்போது கண்டு மகிழ்ந்தேன்.

ஜோசியத்தில்  அன்னம்  எனும்  உணவுக்கு  காரகன்  சந்திரன். அன்னை எனப்படும் மாத்ரு காரகனும் சந்திரனேதான். நமக்கெல்லாம் படியளக்கும் அன்ன பூரணி,   பார்வதியை வணங்க காரக கிரகம் சந்திரன். ஐப்பசி மாச  பௌர்ணமி  ஆகவே விசேஷம் வாய்ந்தது.

அன்ன தானம்  சகல தானங்களிலும்  சிறப்பு வாய்ந்ததென்பதற்கு காரணம் அதில் ஒன்றில் தான் தானம் பெறுபவர்  ''போதும் போதும்''   என  வயிறார உண்டு வாயார சொல்வார். மற்ற  எந்த தானமும் அப்படி ஒரு திருப்தியை தருவதில்லை.






No comments:

Post a Comment