பரந்தாமன் பேருருவம் - நங்கநல்லூர் J K SIVAN
''போதும் மாதவா மீண்டும் பழையபடியே தோன்று '' ஸ்ரீமான் ஜே . கிருஷ்ணய்யர், என் தந்தையார், சற்று ரெட்டை நாடி சரீரம், பார்ப்பதற்கு நல்ல பரங்கிப் பழம் போல் சிவப்பாக இருப்பார். விடிகாலையில் எழுந்து சில்லென்று குளிர்ந்த கிணற்று நீரை வாளியில் சேந்தி கிணற்றடியில் குளித்து விட்டு உலர்ந்த வஸ்த்ரத்தில் பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு ஈர வஸ்திரத்தை பிழிந்து உதறி கொல்லையில் கயிற்றுக் கொடியில் உலர்த்தி விட்டு வீட்டுக்குள் நுழையும் போதே வெள்ளை வெளேரென்று நெற்றியிலும் கைகள் மார்பில் விபூதி காட்சி அளிக்கும். வீட்டில் அவர் அப்பா காலத்திலேயிருந்து எங்களோடு வாழும் 200 வருஷ பிள்ளையாருக்கு முன்பாக உட்கார்ந்து ஒரு தாம்பாளத்தில் விக்னேஸ்வரருக்கு அபிஷேகம், அர்ச்சனை, வஸ்த்ரம் , புஷ்பம் சாற்றி, அம்மா மடியாக சமைத்த சாதம் ரெடியாக இருக்கும் அதை நைவேத்யம் பண்ணி விட்டு நமஸ்காரம் பண்ணிவிட்டு, பள்ளிக்கூடம் போக தாயாகிவிடுவார். நுங்கம்பாக்கம் லேக் ஏரியா என்று இப்போது சொல்லும் இடத்தில் கார்பொரேஷன் உயர் நிலைப் பள்ளி இன்னும் இருக்கிறது அதில் அவர் உதவி தலைமை ஆசிரியர். வடபழனியிலிருந்த போதும், சூளைமேட்டிலிருந்த போதும் அங்கிருந்து நுங்கம்பாக்கத்துக்கு ரெண்டு வேளையும் நடை தான். வாய் விடாமல் ஸ்தோத்திரங்கள், ஸ்லோகங்கள் சொல்லிக் கொண்டே இருக்கும். நெற்றியில் இப்போது விபூதிப் பட்டைமேல் சந்திரன் பிறை போல் கீற்று சந்தனம் அதன் நடுவே குங்குமம். அந்த ஸ்தோத்ரங்களை நான் ஆறு ஏழு வயதில் தினமும் கேட்டிருக்கிறேன். வார்த்தைகள் தெரிந்தவையாக இருந்தும் அர்த்தம் புரியாது. அவர் உச்சரிக்கும் சப்தம் இன்னும் காதில் ஒலிக்கிறது. அவசரம் அவசரமாக அம்மா இலையில் வைத்த சாதம் குழம்பு ரசம் மோர் எல்லாம் பிசைந்து சாப்பிட்டுவிட்டு கையில் மத்தியான டிபன் டப்பா எடுத்துக்கொண்டு கிளம்புவார். அதற்கு முன் வெள்ளையாக தோய்த்த மொட்டைக்கழுத்து கதர் ஜிப்பாவை அணிந்து கொண்டு தலையில் தலைப்பாகை கட்டிக் கொள்வார். அப்போதும் இன்னமும் வாய் ஸ்தோத்ரம் சொல்லிக்கொண்டு தான் இருக்கும். அது பகவத் கீதையின் விஸ்வரூப தர்சன 11ம் அத்தியாய ஸ்லோகங்கள் என்று அப்புறம் தான் சில வருஷங்களுக்குப் பின் எனக்கு தெரிந்தது. சூளை மேட்டிலிருந்து நுங்கம்பாக்கம் ஹை ஸ்கூல் வரை நடக்கும்போது ராமாயண ஸ்லோகங்கள் தொடரும். அவர் தமிழ், ஸம்ஸ்க்ரிதம், ஆங்கிலம் மூன்றிலும் வல்லவர். அப்பா என்னைவிட 45 வருஷங்கள் பெரியவர். கையில் ஒரு பை. அதில் மாணவர்களின் காம்போசிஷன் நோட்டுகள், சாப்பாடு சம்படத்துடன் அவர் நடக்க நாங்கள் பின்னால் ஓடிக்கொண்டே செல்வோம். எல்லோரும் ஒரே பள்ளிக் கூடம் தானே. அவர் அஸிஸ்டன்ட் ஹெட்மாஸ்டர் நாங்கள் மாணவர்கள். J .K . வகுப்பு என்றால் எல்லா மாணவர்களுக்கும் கொண்டாட்டம். யாருக்கும் திட்டு அடி கிடைக்காது. இனிய கதைகள், ஹாஸ்ய சம்பவங்கள் நிறைய இருக்கும். பாடமும் , ஆங்கிலமோ, சரித்திரமோ ஜோராக மனதில் பதியும். நேரம் போவதே தெரியாது. இன்றும் சில என் அப்பாவின் ஸ்டூடண்ட்ஸ் FACEBOOKல் இருக்கிறார்கள். அவர்கள் நீங்கள் JK பையனா என்று கேட்டு பழைய நினைவுகளைச் சொல்லும்போது பேசாமல் நன்றிக் கண்ணீரோடு ''ஆமாம்' அவர் மலை நான் மடு என்கிறேன். இந்த பழைய நினைவோடு இன்று பகவத் கீதையின் 11வது அத்யாயத்தில்'' விஸ்வ ரூப தர்சனம்'' காண உங்களை அழைத்துச் செல்கிறேன். அர்ஜுனன் சந்தேகம் இன்னும் தீரவில்லை. கேள்விக்கணைகளால் கிருஷ்ணனைத் துளைக்கிறான். அம்பு விடுவதில் அவன் சூரன் அல்லவா? ''கிருஷ்ணா, நீ இதுவரை, சொன்ன ஆத்ம தத்வத்தை கேட்டதில் ஓரளவு என் மதி மயக்கம் தீர்ந்தது. பிறப்பு இறப்பு பற்றி அறிந்தேன். உன் செயலால் எதும் ஆகும் என புரிந்து கொண்டேன். நீ யாதும் ஆகி யாவும் ஆனவன் என்றாயே அது எப்படி முடியும், அப்படி நீயே எல்லாமாக இருந்தால் உன் உருவம் எப்படி இருக்கும்? அந்த உருவத்தை எனக்குக் காட்டேன். என்னால் அதை காண முடியுமா என்று தெரியவில்லை.இருந்தாலும் காட்டு பார்க்கிறேன்' '' அர்ஜுனா, உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். உன் உடலில் உள்ள கண்களால் என்னைக் காணமுடியாது. உனக்கு திவ்ய நேத்திரம் தருகிறேன். அதன் மூலம் மட்டுமே நீ என்னைக் காண இயலும்.'' இந்த மா பெரும் ஜகம் ஒரு துக்குணி என்று எண்ணி பாருங்கள். அப்படி என்றால் இந்த அண்ட பகிரண்டம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று கற்பனை செய்யுங்கள். அதற்கு அளவோ கணக்கோ இல்லை. இடமும் காலமும் ஒன்றாக கலந்த சேர்க்கை. நம்மால் அதைக் காண வழியில்லை என்பதாலே தன்னை குறுக்கிக் கண்டு பகவான் காட்சி தருகிறான். பெரிதாய் இருந்தாலும் சிறிதாய் இருந்தாலும் அவன் சக்தி ஒன்றே. ஒரு சொம்பு பாலும் ஒரு ஸ்பூன் பாலும் ஒரே ருசி. ஆனால் ஒரு சொம்பு பால் அளிக்கும் சக்தியை ஒரு ஸ்பூன் பால் அளிக்குமா? அமிர்தம் அம்மாதிரி இல்லை. ஒரு கடல் அளவுக்குள்ளும் ஒரு துளிக்குள்ளும் அதே சக்தி, ''நிரந்தரம்'' சாஸ்வதம், சாகாவரம் அம்ருத்வம் தர வல்லது. பெரியது சிறியது இரண்டுமே ஒன்று என்று புரிந்து கொள்ள ஒரு உதாரணம் தருகிறேன். ஒரு பெரிய பேன்னர் 20 அடி நீளம் 15அடி அகலம் - அதில் சிரித்துக்கொண்டு நமது பிரதமர். அதையே ஒரு சிறு ஸ்டாம்ப் அளவு புகைப் படமாக காட்டினாலும் அவர் தான், அதே சிரிப்பு தான். துளியும் வித்தியாசம் இல்லாத உருவம். அளவில் தான் வித்யாசம். எதையுமே பெரியதாக இருப்பதை காணும் போது ஒரு பிரமிப்பு, பயம், நடுக்கம் உண்டாகிறது. சூரியனையும் சந்திரனையும், நக்ஷத்ரங்களையும் மேலே ஆகாயத்தில் சிறிதாக ஒளிர்பவையாக கண்டால் தான் நமக்கு சந்தோஷம். அருகே சென்றால் அதன் வேகம், சுழற்சியின் சப்தம், உஷ்ணம், ஐயையோ நம்மால் தாங்க முடியுமா? இதைத் தான் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் விளக்குகிறான். என்னை உன்னால் காண முடியாது என்று. ஆண்டவன் வெவ்வேறு பொருளில், வெவ்வேறு உருவில் எங்கும் காணப்படுவதை அறிந்து கொள்ளவேண்டும். விராட் உருவாக எல்லாவற்றையும் அவனிலே காண நம்மால் முடியாது. அதே போல் எல்லா நினைவுகளையும் நாம் பெறாமல் ரகசியமாக வைத்திருக்கிறான் கண்ணன். ஏன் நமக்கு சிறு வயது நினைவுகள் கூட சரியாக தோன்றவில்லையே. முற்பிறவிகள் அடையாளம் தெரிந்தாலோ, அடுத்து வரும் காலங்களைப் பற்றிய நிகழ்வுகள் நமக்கு தெரிந்தாலோ ஒரு கணமும் நம்மால் நிம்மதியாக இருக்கவே முடியாது. நிகழ் காலம் அதை பற்றி அறியும் முன்பே இறந்த காலமாக மாறுகிறதே. மரணம் பற்றிய உண்மைகளை அதனால் தான் ரகசியமாகவே வைத்திருக்கிறான். தெரிந்தால் நாம் ஒவ்வொரு கணமும் மரண பயத்தில் சித்ரவதை பட்டு துன்புறுவோம். சாதாரணமாக ஒரு SCAN டெஸ்ட் கொடுத்துவிட்டு அதன் ரிசல்ட் வருவதற்குள் நாம் எப்படி துடித்துப் போகிறோம்? மரணம் நேரப்போவதை முன் கூட்டியே அறிந்தால் அவ்வளவு தான், அடுத்த கணமே இறந்து விடுவோம், அல்லது நரகவேதனையில் அப்புறம் துடிப்போம். அர்ஜுனன் கிருஷ்ணன் வடிவில் விஸ்வத்தை கண்டான். சகலமும் அங்கே காணப் பட்டது. . எத்தனையோ சந்திரர்கள், சூரியர்கள், மலைகள், கடல்கள், ஆறுகள், ஏரிகள், வனங்கள், வனாந்திரங்கள்,மக்கள், மாக்கள், ரிஷிகள், தேவாதி தேவர்கள், எத்தனையோ மண்டலங்கள், ஏன் பீஷ்மன், துரோணர், கர்ணன் இவர்களைத் தவிர தன்னையே, தன் சகோதரர்களையே கூட அங்கே கண்டான். . ''போதும் கிருஷ்ணா, போதும், என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என இரு கை கூப்பினான், மண்ணும் விண்ணுமாய் ,இடைவெளி இன்றி எல்லாவற்றையும் எல்லோரையும் உன்னில் கண்டேன். போதும். உள்ளம் நடுங்குகிறது. நா உலர்கிறது. நிகரற்ற தெய்வமே, உன்னை நமஸ்கரிக்கிறேன். மீண்டும் எப்போதும் போல் கிரீடமும், கதையும், சக்ரமும் சதுர் புஜமும் கொண்ட நாராயணனாகவே, நரனாகவே எனக்கு நீ காட்சி தரவேண்டும்'' என்றவுடன் கிருஷ்ணன் அவ்வாறே அருள் புரிகிறான். கிருஷ்ணா, என் அறியாமையினால் உன்னை வா போ என்று கூப்பிட்டு என்னை உனக்கு சமானமாக நினைத்து நடந்து கொண்டுவிட்டேனே. மன்னித்து விடு என்று அலறுகிறான் அர்ஜுனன். கிருஷ்ணன் சிரிக்கிறான். ''அர்ஜுனா என்னை யாருமே இப்படிக் கண்டதில்லை. இதோ பார், எதற்கு இதையெல்லாம் உனக்கு உணர்த்தினேன் தெரியுமா. ''எதையும் பகவானுக்கே என்று உன் கர்மத்தை செய். அடையும் நன்மையையும் பகவானே என்ற பக்தியோடு எந்த உயிரையும் பழிக்காமல் அன்போடு இரு. நீ என்னை அடைவாய்'' மிகவும் அருமையான அத்யாயம் இந்த விஸ்வரூப தர்சனம். இதன் ஸ்லோகங்களை தமிழில் தருகிறேன், இதைத்தான் என் தந்தையார் தினமும் பாராயணம் செய்து கொண்டே இருப்பார் அத ஏகாதஶோஉத்யாயஃ | அர்ஜுன உவாச | மதனுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸம்ஜ்ஞிதம் | யத்த்வயோக்தம் வசஸ்தேன மோஹோஉயம் விகதோ மம || 1 || பவாப்யயௌ ஹி பூதானாம் ஶ்ருதௌ விஸ்தரஶோ மயா | த்வத்தஃ கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம் || 2 || ஏவமேதத்யதாத்த த்வமாத்மானம் பரமேஶ்வர | த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைஶ்வரம் புருஷோத்தம || 3 || மன்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ | யோகேஶ்வர ததோ மே த்வம் தர்ஶயாத்மானமவ்யயம் || 4 || ஶ்ரீபகவானுவாச | பஶ்ய மே பார்த ரூபாணி ஶதஶோஉத ஸஹஸ்ரஶஃ | னானாவிதானி திவ்யானி னானாவர்ணாக்றுதீனி ச || 5 || பஶ்யாதித்யான்வஸூன்ருத்ரானஶ்வினௌ மருதஸ்ததா | பஹூன்யத்றுஷ்டபூர்வாணி பஶ்யாஶ்சர்யாணி பாரத || 6 || இஹைகஸ்தம் ஜகத்க்றுத்ஸ்னம் பஶ்யாத்ய ஸசராசரம் | மம தேஹே குடாகேஶ யச்சான்யத்த்ரஷ்டுமிச்சஸி || 7 || ன து மாம் ஶக்யஸே த்ரஷ்டுமனேனைவ ஸ்வசக்ஷுஷா | திவ்யம் ததாமி தே சக்ஷுஃ பஶ்ய மே யோகமைஶ்வரம் || 8 || ஸம்ஜய உவாச | ஏவமுக்த்வா ததோ ராஜன்மஹாயோகேஶ்வரோ ஹரிஃ | தர்ஶயாமாஸ பார்தாய பரமம் ரூபமைஶ்வரம் || 9 || அனேகவக்த்ரனயனமனேகாத்புததர்ஶனம் | அனேகதிவ்யாபரணம் திவ்யானேகோத்யதாயுதம் || 10 || திவ்யமால்யாம்பரதரம் திவ்யகன்தானுலேபனம் | ஸர்வாஶ்சர்யமயம் தேவமனன்தம் விஶ்வதோமுகம் || 11 || திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய பவேத்யுகபதுத்திதா | யதி பாஃ ஸத்றுஶீ ஸா ஸ்யாத்பாஸஸ்தஸ்ய மஹாத்மனஃ || 12 || தத்ரைகஸ்தம் ஜகத்க்றுத்ஸ்னம் ப்ரவிபக்தமனேகதா | அபஶ்யத்தேவதேவஸ்ய ஶரீரே பாம்டவஸ்ததா || 13 || ததஃ ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்றுஷ்டரோமா தனம்ஜயஃ | ப்ரணம்ய ஶிரஸா தேவம் க்றுதாஞ்ஜலிரபாஷத || 14 || அர்ஜுன உவாச | பஶ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிஶேஷஸம்கான் | ப்ரஹ்மாணமீஶம் கமலாஸனஸ்தம்றுஷீம்ஶ்ச ஸர்வானுரகாம்ஶ்ச திவ்யான் || 15 || அனேகபாஹூதரவக்த்ரனேத்ரம் பஶ்யாமி த்வாம் ஸர்வதோஉனன்தரூபம் | னான்தம் ன மத்யம் ன புனஸ்தவாதிம் பஶ்யாமி விஶ்வேஶ்வர விஶ்வரூப || 16 || கிரீடினம் கதினம் சக்ரிணம் ச தேஜோராஶிம் ஸர்வதோ தீப்திமன்தம் | பஶ்யாமி த்வாம் துர்னிரீக்ஷ்யம் ஸமன்தாத்தீப்தானலார்கத்யுதிமப்ரமேயம் || 17 || த்வமக்ஷரம் பரமம் வேதிதவ்யம் த்வமஸ்ய விஶ்வஸ்ய பரம் னிதானம் | த்வமவ்யயஃ ஶாஶ்வததர்மகோப்தா ஸனாதனஸ்த்வம் புருஷோ மதோ மே || 18 || அனாதிமத்யான்தமனன்தவீர்யமனன்தபாஹும் ஶஶிஸூர்யனேத்ரம் | பஶ்யாமி த்வாம் தீப்தஹுதாஶவக்த்ரம் ஸ்வதேஜஸா விஶ்வமிதம் தபன்தம் || 19 || த்யாவாப்றுதிவ்யோரிதமன்தரம் ஹி வ்யாப்தம் த்வயைகேன திஶஶ்ச ஸர்வாஃ | த்றுஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம் லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மன் || 20 || அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா விஶன்தி கேசித்பீதாஃ ப்ராஞ்ஜலயோ க்றுணன்தி | ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்தஸம்காஃ ஸ்துவன்தி த்வாம் ஸ்துதிபிஃ புஷ்கலாபிஃ || 21 || ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா விஶ்வேஉஶ்வினௌ மருதஶ்சோஷ்மபாஶ்ச | கன்தர்வயக்ஷாஸுரஸித்தஸம்கா வீக்ஷன்தே த்வாம் விஸ்மிதாஶ்சைவ ஸர்வே || 22 || ரூபம் மஹத்தே பஹுவக்த்ரனேத்ரம் மஹாபாஹோ பஹுபாஹூருபாதம் | பஹூதரம் பஹுதம்ஷ்ட்ராகராலம் த்றுஷ்ட்வா லோகாஃ ப்ரவ்யதிதாஸ்ததாஹம் || 23 || னபஃஸ்ப்றுஶம் தீப்தமனேகவர்ணம் வ்யாத்தானனம் தீப்தவிஶாலனேத்ரம் | த்றுஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதிதான்தராத்மா த்றுதிம் ன வின்தாமி ஶமம் ச விஷ்ணோ || 24 || தம்ஷ்ட்ராகராலானி ச தே முகானி த்றுஷ்ட்வைவ காலானலஸம்னிபானி | திஶோ ன ஜானே ன லபே ச ஶர்ம ப்ரஸீத தேவேஶ ஜகன்னிவாஸ || 25 || அமீ ச த்வாம் த்றுதராஷ்ட்ரஸ்ய புத்ராஃ ஸர்வே ஸஹைவாவனிபாலஸம்கைஃ | பீஷ்மோ த்ரோணஃ ஸூதபுத்ரஸ்ததாஸௌ ஸஹாஸ்மதீயைரபி யோதமுக்யைஃ || 26 || வக்த்ராணி தே த்வரமாணா விஶன்தி தம்ஷ்ட்ராகராலானி பயானகானி | கேசித்விலக்னா தஶனான்தரேஷு ஸம்த்றுஶ்யன்தே சூர்ணிதைருத்தமாங்கைஃ || 27 || யதா னதீனாம் பஹவோஉம்புவேகாஃ ஸமுத்ரமேவாபிமுகா த்ரவன்தி | ததா தவாமீ னரலோகவீரா விஶன்தி வக்த்ராண்யபிவிஜ்வலன்தி || 28 || யதா ப்ரதீப்தம் ஜ்வலனம் பதம்கா விஶன்தி னாஶாய ஸம்றுத்தவேகாஃ | ததைவ னாஶாய விஶன்தி லோகாஸ்தவாபி வக்த்ராணி ஸம்றுத்தவேகாஃ || 29 || லேலிஹ்யஸே க்ரஸமானஃ ஸமன்தால்லோகான்ஸமக்ரான்வதனைர்ஜ்வலத்பிஃ | தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம் பாஸஸ்தவோக்ராஃ ப்ரதபன்தி விஷ்ணோ || 30 || ஆக்யாஹி மே கோ பவானுக்ரரூபோ னமோஉஸ்து தே தேவவர ப்ரஸீத | விஜ்ஞாதுமிச்சாமி பவன்தமாத்யம் ன ஹி ப்ரஜானாமி தவ ப்ரவ்றுத்திம் || 31 || ஶ்ரீபகவானுவாச | காலோஉஸ்மி லோகக்ஷயக்றுத்ப்ரவ்றுத்தோ லோகான்ஸமாஹர்துமிஹ ப்ரவ்றுத்தஃ | றுதேஉபி த்வாம் ன பவிஷ்யன்தி ஸர்வே யேஉவஸ்திதாஃ ப்ரத்யனீகேஷு யோதாஃ || 32 || தஸ்மாத்த்வமுத்திஷ்ட யஶோ லபஸ்வ ஜித்வா ஶத்ரூன்புங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்றுத்தம் | மயைவைதே னிஹதாஃ பூர்வமேவ னிமித்தமாத்ரம் பவ ஸவ்யஸாசின் || 33 || த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச கர்ணம் ததான்யானபி யோதவீரான் | மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதிஷ்டா யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்னான் || 34 || ஸம்ஜய உவாச | ஏதச்ச்ருத்வா வசனம் கேஶவஸ்ய க்றுதாஞ்ஜலிர்வேபமானஃ கிரீடீ | னமஸ்க்றுத்வா பூய ஏவாஹ க்றுஷ்ணம் ஸகத்கதம் பீதபீதஃ ப்ரணம்ய || 35 || அர்ஜுன உவாச | ஸ்தானே ஹ்றுஷீகேஶ தவ ப்ரகீர்த்யா ஜகத்ப்ரஹ்றுஷ்யத்யனுரஜ்யதே ச | ரக்ஷாம்ஸி பீதானி திஶோ த்ரவன்தி ஸர்வே னமஸ்யன்தி ச ஸித்தஸம்காஃ || 36 || கஸ்மாச்ச தே ன னமேரன்மஹாத்மன்கரீயஸே ப்ரஹ்மணோஉப்யாதிகர்த்ரே | அனன்த தேவேஶ ஜகன்னிவாஸ த்வமக்ஷரம் ஸதஸத்தத்பரம் யத் || 37 || த்வமாதிதேவஃ புருஷஃ புராணஸ்த்வமஸ்ய விஶ்வஸ்ய பரம் னிதானம் | வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம த்வயா ததம் விஶ்வமனன்தரூப || 38 || வாயுர்யமோஉக்னிர்வருணஃ ஶஶாங்கஃ ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹஶ்ச | னமோ னமஸ்தேஉஸ்து ஸஹஸ்ரக்றுத்வஃ புனஶ்ச பூயோஉபி னமோ னமஸ்தே || 39 || னமஃ புரஸ்தாதத ப்றுஷ்டதஸ்தே னமோஉஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ | அனன்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம் ஸர்வம் ஸமாப்னோஷி ததோஉஸி ஸர்வஃ || 40 || ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம் ஹே க்றுஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி | அஜானதா மஹிமானம் தவேதம் மயா ப்ரமாதாத்ப்ரணயேன வாபி || 41 || யச்சாவஹாஸார்தமஸத்க்றுதோஉஸி விஹாரஶய்யாஸனபோஜனேஷு | ஏகோஉதவாப்யச்யுத தத்ஸமக்ஷம் தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம் || 42 || பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யஶ்ச குருர்கரீயான் | ன த்வத்ஸமோஉஸ்த்யப்யதிகஃ குதோஉன்யோ லோகத்ரயேஉப்யப்ரதிமப்ரபாவ || 43 || தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம் ப்ரஸாதயே த்வாமஹமீஶமீட்யம் | பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யுஃ ப்ரியஃ ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும் || 44 || அத்றுஷ்டபூர்வம் ஹ்றுஷிதோஉஸ்மி த்றுஷ்ட்வா பயேன ச ப்ரவ்யதிதம் மனோ மே | ததேவ மே தர்ஶய தேவரூபம் ப்ரஸீத தேவேஶ ஜகன்னிவாஸ || 45 || கிரீடினம் கதினம் சக்ரஹஸ்தமிச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ | தேனைவ ரூபேண சதுர்புஜேன ஸஹஸ்ரபாஹோ பவ விஶ்வமூர்தே || 46 || ஶ்ரீபகவானுவாச | மயா ப்ரஸன்னேன தவார்ஜுனேதம் ரூபம் பரம் தர்ஶிதமாத்மயோகாத் | தேஜோமயம் விஶ்வமனன்தமாத்யம் யன்மே த்வதன்யேன ன த்றுஷ்டபூர்வம் || 47 || ன வேதயஜ்ஞாத்யயனைர்ன தானைர்ன ச க்ரியாபிர்ன தபோபிருக்ரைஃ | ஏவம்ரூபஃ ஶக்ய அஹம் ன்றுலோகே த்ரஷ்டும் த்வதன்யேன குருப்ரவீர || 48 || மா தே வ்யதா மா ச விமூடபாவோ த்றுஷ்ட்வா ரூபம் கோரமீத்றுங்மமேதம் | வ்யபேதபீஃ ப்ரீதமனாஃ புனஸ்த்வம் ததேவ மே ரூபமிதம் ப்ரபஶ்ய || 49 || ஸம்ஜய உவாச | இத்யர்ஜுனம் வாஸுதேவஸ்ததோக்த்வா ஸ்வகம் ரூபம் தர்ஶயாமாஸ பூயஃ | ஆஶ்வாஸயாமாஸ ச பீதமேனம் பூத்வா புனஃ ஸௌம்யவபுர்மஹாத்மா || 50 || அர்ஜுன உவாச | த்றுஷ்ட்வேதம் மானுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜனார்தன | இதானீமஸ்மி ஸம்வ்றுத்தஃ ஸசேதாஃ ப்ரக்றுதிம் கதஃ || 51 || ஶ்ரீபகவானுவாச | ஸுதுர்தர்ஶமிதம் ரூபம் த்றுஷ்டவானஸி யன்மம | தேவா அப்யஸ்ய ரூபஸ்ய னித்யம் தர்ஶனகாங்க்ஷிணஃ || 52 || னாஹம் வேதைர்ன தபஸா ன தானேன ன சேஜ்யயா | ஶக்ய ஏவம்விதோ த்ரஷ்டும் த்றுஷ்டவானஸி மாம் யதா || 53 || பக்த்யா த்வனன்யயா ஶக்ய அஹமேவம்விதோஉர்ஜுன | ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேன ப்ரவேஷ்டும் ச பரம்தப || 54 || மத்கர்மக்றுன்மத்பரமோ மத்பக்தஃ ஸங்கவர்ஜிதஃ | னிர்வைரஃ ஸர்வபூதேஷு யஃ ஸ மாமேதி பாம்டவ || 55 || ஓம் தத்ஸதிதி ஶ்ரீமத்பகவத்கீதாஸூபனிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஶாஸ்த்ரே ஶ்ரீக்றுஷ்ணார்ஜுனஸம்வாதே விஶ்வரூபதர்ஶனயோகோ னாமைகாதஶோஉத்யாயஃ ||11 ||
No comments:
Post a Comment