Monday, March 15, 2021

BEWARE THE IDES OF MARCH




 

அந்தநாள்  இந்த நாளோ?   நங்கநல்லூர்   J  K  SIVAN

இன்று  மார்ச் 15..  காலையிலிருந்து  இதை எழுத நினைத்த போதெல்லாம் ஏதோ ஒரு வேலை தட்டிக் கழித்தது. உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.  ஷேக்ஸ்பியர் படித்தவர்களுக்கு கட்டாயம்  மறக்க முடியாத நாள்.


நமக்கு  பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை  பக்ஷம் வருவது போல்  ரோமானியர்களுக்கும்  ஒரு நம்பிக்கை.  ஒவ்வொரு மாதமும்  மத்தியில், ''பாதியில் ''   IDES  ஐட்ஸ்  வரும்.   இது  முக்யமாக  மார்ச்,  மே , அக்டோபர்   மாதங்களில் 15ம் தேதி வரும்.  மற்ற மாதங்களில் 13ம் தேதி வரும். ரோமானியர்கள் ஒவ்வொரு மாத முதல் நாளையும் '' காலெண்ட் ''  என்று சொல்வார்கள். அதனால் தான்  மாதத்தை,  நாளைக்,   காட்டும் காகிதத்துக்கு  காலண்டர் என்று பெயர் வந்தது. நமது காலண்டர்கள்  ஜூலியஸ் சீசர் அறிமுகப்படுத்தியதின்  பிரதிபலிப்பு.  வருஷத்துக்கு   365.நாள். 12 மாதங்கள்.

இன்றைய தினமான  15ம் தேதி மார்ச்  பற்றி மட்டும்  சொல்கிறேன். அந்த தேதியை   ரோமானியர்கள்  கடன் பைசல் பண்ணும்  நாளாக, கணக்கு தீர்க்கும் நாளாக, கெடுவாக  உபயோகித்தார்கள் .  ரோமானியர்கள் சரித்திரத்தில் அது மறக்க முடியா நாளாகி விட்டது. .  நம்மை மாதிரி ஒன்று இரண்டு என்று அவர்கள் எண்ணுவதில்லை.  5 அல்லது 7 லிருந்து ஒன்பது நாட்கள் எட்டு நாள்கள் தள்ளி பார்ப்பார்கள்.  அது 15வது தேதியாக இருந்தால்  விசேஷம்.  பௌர்ணமியிலிருந்து  எண்ணுவார்கள்.  புது வருஷத்தில் பவுர்ணமி யிலிருந்து 15ம் நாள்  ஐட்ஸ். ரோமானியர்களின் பிரதான கடவுள்  ஜூபிடர் (வியாழன்,  குரு)  ஆகையால்  ஒவ்வொரு மாத  15ம் தேதி,  ஐட்ஸ்  அன்று  நிறைய  ஆடுகளை ஊர்வலத்தில் மாலை போட்டு அழைத்துச் சென்று   பாவம்  ஜூபிடருக்கு நைவேத்தியம் பண்ண வெட்டிவிடுவார்கள்.    இது தவிர  15ம் தேதி மார்ச்  ஐட்ஸ்  OF  மார்ச் அன்று  வருஷாந்திர தேவதை  அன்னா  பரேன்னா என்பவளுக்கு  ANNA PARENNA  ஸ்பெஷல்  விருந்து வேறே.   ரோமானியர்கள் அன்று குடியும்  கூத்துமாக  கொண்டாடுவார்கள்.   கிரேக்கர்கள்  ரோமானியர்கள்  கூட  நம்மைபோல  நிறைய  சுவாரசியமான  கதைகள் பழக்கங்கள்  வைத்திருக்கிறார்கள்.   முடிந்தால் ஒருநாள் அது பற்றி பேசுவோம்.

ரோமானியர் கடவுள்களில் ஒருவன்  ஆட்டிஸ்  ஒரு காட்டாறு, பிரிஜியன் என்று அதன் பேர்.  அதன் கரையில்  நாணல் புதரில் பிறந்தவன்,   ஆண்டாள் துளசி நந்தவனத்தில் வில்லிபுத்தூரில் கிடைத்த மாதிரி,   இவனை  ஆட்டிடையர்கள்  ஒருநாள் கண்டெடுத்தார்கள் .அன்று  15ம் தேதி மார்ச்.    ஒரு வாரம்   கழித்து  22 மார்ச் அன்று  ஆட்டிஸின்  மறைவு  ஒரு பைன் மரத்தடியில்  நடந்ததாம். அதற்குப்பிறகு  ஒவ்வொரு வருஷமும்  அன்றைய தினம்  ஒரு மரம் வெட்டி அதை ஆட்டிஸ்  மாதிரி  செய்து,  பெரியம்மா கோவிலில்  (மேக்னா மாட்டர், MAGNA MATER  கோவிலில் தொங்க விடுவது வழக்கம்.

கிளாடியஸ் என்ற  ரோமானிய ராஜா காலத்தில்  (d. 54 AD)  மூன்று நாள் துக்க விழா ஆட்டிஸுக்காக   அனுஷ் டித்தார்கள்.  புரூட்டஸ் அரியணை ஏறிய பின்  வெளியிட்ட  ஒரு நாணயத்தின் பின்புறம் (42 BC) EID MAR (Eidibus Martiis – ஐட்ஸ் OF  மார்ச்  என்று காட்டுகிறது.

15 மார்ச் அன்று  ஐட்ஸ் ஆப்  மார்ச்  ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்டான். (44 BC)  அவன் கணக்கை  பைசல் பண்ணி கடனைத் , தீர்த்து விட்டார்கள்.    சீசரின் கொலை நடந்த   அன்று  மந்திரிகள் தளபதிகள் கூடிய  ஒரு கூட்டம் அரசவையில் நடந்தது.  கிட்டத்தட்ட  அறுபது பேர்  இருந்தார்கள்.  அவர்கள் அனைவருக்குமே  அன்று சீசர் கொல்லப்படுவான் என்று ஏற்கனவே தெரியும்.  புரூட்டஸ்  தான் தலைவன்.

முதல் நாளே  விடியற்காலையில்  ஒரு ஜோசியன், நம்ம ஊர்  குடுகுடுப்பைக் காரன் போல் வாசலில் எதிர்காலம் பற்றி சொல்லிக்கொண்டே போகிறவன்  ஜூலியஸ்  சீசர்  மாளிகையின் வாசலில் நடந்து போகும்போது உரக்க ஏதோ சொல்கிறான்.   அவன் என்ன சொல்கிறான் என்றால்  ''15ம் தேதி மார்ச்  வருகிறது ஜாக்கிரதை''  ''BEWARE THE   IDES OF  MARCH''     
ராஜாவுக்கு ஏதோ  ஆபத்து என்று புரிகிறது  அது  15 மார்ச் வரலாம் என்று சொல்கிறான்.

ராஜா  ஜூலியஸ் சீசர்  பாம்பெய்  POMPEII மண்டபத்துக்கு செல்கிறான் வழியே  அந்த ஜோசியன் மீண்டும் சொல்கிறான்..BEWARE THE IDESOF  MARCH ''.  
''யாரவன் நிறுத்து அவனை''   சீசர் எதிரே  இழுத்து நிறுத்தப்பட்டான் .

'அடே,  ஜோசியா , 15தேதி  மார்ச்  IDES ஆப்  மார்ச்  பிறந்து விட்டதேடா. என்னடா  புருடா விடுகிறாய்?'' என்று கேலி செய்கிறான் சீசர்.
''ஐயா  சீஸர்  அவர்களே, ஆரம்பித்து விட்டது சரிதான். ஆனால் அது இன்னும்  முடியவில்லை அல்லவா ?''  என்கிறான் ஜோசியன். 

 பாம்பேய்  மண்டபத்தில் கூட்டம் நடக்கிறது. உள்குத்து.  எல்லோரும் ஒரு கத்தியால் சீசரை குத்தி கொல்கி றார்கள் . ரோமானிய குடியரசு  பிறக்கிறது.'  ஜூலியஸ் சீசருக்கு பிறகு அவன் உறவினன் ஆக்டேவியஸ் சீசர் அரசனாகிறான். சீசரைக்  கொன்றவர்களை பழி வாங்குகிறான்.

ஆங்கில கவிஞன்  வில்லியம்  ஷேக்ஸ்பியர் அற்புதமாக  ஜூலியஸ் சீசர் நாடகம் எழுதி இருக்கிறான். அதை  இன்று ஞாபகப்படுத்திக் கொண்டதால் இதை எழுதினேன்.

No comments:

Post a Comment