Wednesday, January 13, 2021

SANKRANTHI


                       சங்க்ராந்தி. J K   SIVAN 


இன்று மகர சங்க்ராந்தி.  சக்ரந்தி என்றால் சக்கரம் சம்பந்தப்பட்டது.  சுழலத்தானே செய்யும்.  நமது பூமி, மற்ற  எல்லா க்ரஹங்களும்  உருண்டை என்பதால்  சுழன்றுகொண்டே  இயங்குகிறது. இதைச் சார்ந்த நம் வாழ்க்கையை அதனால் தான் வாழ்க்கை சக்கரம் என்கிறோம்.

சங்கராந்தியை உத்தராயணம் என்று சொல்வது தவறோ ?  கி.பி. 1000 மாவது வருஷம் சங்கராந்தி டிசம்பர் மாதம் 31 அன்று வந்தது. இன்னும் 9000 வருஷங்கள் கழித்து பொங்கல் ஜூன் மாதம் தான் வரும் என்கிறார்கள். என்ன கணக்கோ? சுழற்சியில் நாள் தேதி நேரம் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளி தள்ளி தான் வரும்.  பொங்கல்  ஜனவரி 1 மார்கழி 14 ,  அப்புறம்   1 - 15,   1-16,  1-17  என்று  மாறி மாறி வந்தது. இந்த வருஷம் மறுபடியும்   1-14.  என்கிறது. ஜூன்மாதத்தில் பொங்கல்  நம்  வாழ்நாளில் வரப்போவதில்லை. 

பண்டிகைகள்  கொண்டாடும் விதம் மாறினாலும் கோட்பாடு ஒன்றே தான்.  சங்கராந்தி  உத்தராயணம் என்று புண்யகாலம்.  புனிதமானது.  உத்தராயணம் அன்று தான்  சூரியன் வட கோள யாத்ரை போகிறான். சூரிய னின் மகன் சனீஸ்வரன். மகர ராசிக்கு அதிபதி. தந்தை மகனது இல்லத்துக்கு செல்கிறான் என்று வழிபடு வதும் உண்டும். சூரியன் இன்றி நமக்கு ஒளியோ சக்தியோ, உணவோ கிடையாதே.

பொங்கல்  தமிழ் தேசத்தில்  சிறப்பான பண்டிகை. சுபிட்சத்தால் உண்டாகும் மகிழ்ச்சி தருவது.  இறைவன் இயற்கை உற்பாதங்களை நீக்கி நிறைய மழை பொழிந்து ஏரி, குளம், குட்டை, ஆறு எல்லாம் நிரம்பி பூமியை வளமாக்கி, விளைச்சல் அமோகமாகி விலை வாசி குறைந்து, மக்கள் வேண்டிய பொருள்களை வரிசையில் நின்று கிட்டே வரும்போது தீர்ந்து விட்டது அடுத்த வாரம் வந்து பார் என்று வார்த்தை கேளாமல் பெறுவதற்கு. இறைவனுக்கு நன்றி கூறும் நாள். 

சூரியனின்  அருமை சமீபத்தில் வெள்ள அனுபவம் கண்ட சென்னை வாசிகள் நன்றாக உணர்வார்கள். சங்கராந்தி சூரிய நாராயணை வணங்கும் நாள்.  மஹா விஷ்ணு அனைத்து அசுரர்களையும் அழித்து அவர்கள் தலைகளை மந்திர மலையின் கீழே வைத்த  நாள்  என்று புராணம் சொல்கிறது.  தீய சக்திகளை ஒழிக்க, தீய எண்ணங்கள் நீங்கி நல்லெண்ணங்கள் நெஞ்சில் குடிபுக ஒரு பண்டிகை வேண்டாமா?  நல்லவை உள்ளத்தில் பொங்க ஒரு பொங்கல் பண்டிகை நமக்கு அவசியம் அல்லவா?

சூர்ய கிரணம் ஒரு  அக்னிப் பிழம்பு. ஒவ்வொரு கிரணமும் அண்டமுடியாத, நெருங்க இயலாத அக்னி. ஆனால் ஒரு துணியை வெய்யிலில் காட்டினால் அதில் தீப்பற்றிக் கொள்ளவில்லை. லென்ஸ் என்ற பூதக் கண்ணாடியை வெய்யிலில் காட்டி அதன் கீழ் ஒரு துணியைப் பிடித்தால் உடனே அதில் தீப்பற்றிக் கொள்கிறது. நாமே சிறு வ
தில் லென்ஸ் வைத்து காகிதத்தை பற்ற வைத்து மகிழ்ந்திருக்கிறோம். லென்ஸ் பூதக் கண்ணாடி என்கிறோம். பூதக்கண்ணாடி அனேக கிரணங்களை ஒருமிக்கக் குவிக்கிறது. 

அப்படிதான்  எங்குமுள்ள ஈச்வரனுடைய அருள் நமக்குக் கிடைக்கும்படிச் செய்ய ஆலயம் பூதக் கண்ணாடியாக பயன்படுகிறது.  ஐம்பூதங்களையும் உள்ளடக்கம் செய்து வைத்திருப்பவனுக்கு   ஆலயம் பூதக் கண்ணாடி.  இன்று சூரியநாராயணனை வணங்கி ஆசி பெற்று காலை  11 மணிக்கு  மேல் பொங்கல் பானை வைத்து  அனைவரும் இன்புற அவன் அருள் வேண்டுகிறேன்.   என்னை விட  பெரியவர்களுக்கு அபிவாதயே  நமஸ்காரம்.  சிறியவர்களுக்கு  ஆசிர்வாதம்.  வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment