Friday, December 11, 2020

MY ANCESTORS

 என் முன்னோர்கள்  -    J K  SIVAN 


           6.   அக்னிப்ரவேசம்  

சமுதாயத்தில் எப்படியோ சில  பழக்கங்கள் இடம் பெற்றுவிட்டால் அவற்றால் விளையும் பாதகங்கள் கொடுமையானவையா

க  கடுமையாக இருக்கும் பக்ஷத்தில்  அவற்றை நீக்கி விடும்படியாகி விடுகிறது.

அதில் ஒன்று தான் சககமனம், சதி , எனும் உடன் கட்டை ஏறுதல்.  கணவனை இழந்த மனைவி, தானாகவே முன் வந்து உடன்கட்டை ஏறி  தெய்வத்துக்குச் சமானமாக கொண்டாடப்படுகிறாள் . பிறரால் வலுக்கட்டாயமாக உ டன்கட்டை  ஏற  வைத்தால்  அது  கொலையாகிறது.  ஒரு சில சம்பவங்கள் சரித்திரத்தில் சொல்லப் பட்டவையை படிக்க நேர்ந்தது.   அவற்றைப் பற்றி எழுதி அமைதியைக் குலைக்க விருப்பமில்லை.

18ம் நூற்றாண்டில் இது அதிகமாக இருந்தது. பால்ய விவாகம் பழக்கத்தில் இருந்ததால்  12-13 வயது பையனுக்கு  8 -9 வயது பெண் மனைவியாகி  உடல்நலக்குறைவால், வியாதியால் அந்த பையன்  சில வருஷங்களில் இறக்க நேர்ந்தால் அந்த சிறு பெண் கல்யாணம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுமுன், கணவனைத் தெரிந்து, புரிந்து கொள்ளு முன், விதவையாகி, சமூகத்தில் ஒரு துரதிர்ஷ்ட ஜீவனாக பார்க்கப்பட்டாள் . அவளுக்கு சமூகத்தில் அந்தஸ்து இல்லை,  அமங்கலப் பெண் என்பதால் அவள் முகத்தில் விழிக்கக் கூடாது,  வெள்ளை  ஆடை, தலையை மழித்து,  குங்குமம், வளையல்கள் அணியாமல் ஒதுக்கி வைக்கப்பட்டாள் .  ஒரு தவறும் அறியாத இளம் குழந்தைகள் இவ்வாறு அலங்கோலமாக வாழ்நாள் முழுதும் வாழ நேரிட்டது.  இதற்கு சிகரம் வைத்தால்  போல்  கணவன் இறந்தவுடன், அவன் உடலை சிதையில் இட்டு, தீ யிட்டு எரியும்போது அந்த பெண்ணை சிங்காரித்து, மலர்மாலைகள் அணிவித்து  எல்லோரும் வணங்கி அவளை நெருப்பில் அவள் கணவன் உடலோடு சேர்த்து எரித்து விடும் வழக்கம்  நாடெங்கும் இருந்தது.  இறந்தவன் உடலோடு உயிருள்ள பெண்ணை பிணைத்து சேர்த்து எரி மூட்டும் வழக்கம் இருந்தது.  அவள் உடல் கருகி வெந்து, கத்தக்கூடாது என்பதற்காக மேள  தாளங்கள் சத்தம் அதிகமாக கேட்டது.  டப்  என்று அவள்  மண்டை வெடித்த சத்தம் கேட்கிறதா என்று உன்னிப்பாக கேட்டு  ஆஹா  அவள்  மோக்ஷம் சேர்ந்து விட்டாள்  என்று சந்தோஷப் பட்டவர்கள் இருந்த காலம். தீயிலிருந்து தப்பிக்க வெளியே  ஓடி வரும் பெண்ணை பிடித்து தீயில் தள்ள சில தயாராக நிற்பார்கள்.

அக்பர் காலத்தில்  ராஜபுத்திர பெண்கள் கணவர்கள் கொல்லப்பட்டதும்  தீ மூட்டி அதில் உயிர் இழந்தது சரித்திர பக்கங்களில் இருக்கிறது.    கிழக்கிந்திய கம்பெனி வெள்ளைக்காரன் இந்தியாவில் கல்கத்தாவை தலைநகராகக் கொண்டு  வலுவடையும்போது,  ஒரு  வில்லியம் கேரி எனும்  ஒரு  ஆங்கிலேய பாதிரியார் ஓம்தஜா சதி  எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தனர்.  கல்கத்தாவை சுற்றி  19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்   30 மைல்  வட்டாரத்தில்,  438  சதி , உடன்கட்டை ஏறுதல் நிகழ்ச்சிகள்  நடந்தததை குறிப்பிட்டிருக்கிறான்.

இதற்கு ஏன் சதி  என்று பெயர் வந்தது?  புராணத்தில்  சிவபெருமானை  தாக்ஷாயணி யின் தந்தை  யாகத்திற்கு அழைக்காமல், மற்றவர்களை கௌரவித்து  அவமதிக்கிறான்.  போகாதே  என்று சிவன் சொல்லியும் அப்பாவின் யாகத்தில் பங்கு ஏற்ற சிவன் மனை தாக்ஷாயணி  கணவனுக்கு நேர்ந்த அவமதிப்பை பொறுக்கமுடியாமல்  தந்தை வளர்த்த யாகத்தீயில் விழுந்து மாய்கிறாள்.    கணவன்  (பதி ) பெருமைக்காக , மதிப்பிற்காக   தனது   உயிரை விடுபவள் ஒரு  பதிவ்ரதை , (கணவனுக்கு பிறகு உயிர் வாழாமல்  அவனோடு இறப்பேன் எனும் விரதம் அனுஷ்டிப்பவள்  பதி  வ்ரதை)   உத்தம பத்தினியின் செயல் என்று போற்றப்பட்டு  அந்த பழக்கம் கணவன் இறந்தவுடன்  அவனோடு தானும்  இறக்கும் பழக்கமாக  சதி  என்று நடைமுறைக்கு வந்தது.  வங்காளத்திலும் ராஜஸ்தானிலும்  ரொம்ப ஜாஸ்தி.   ராமாயணத்தில்  சீதை  ராமர் சொல்லியதால்  இலங்கையில் தீக்குளிக்கிறாள்.   மஹாபாரதத்தில்  பாண்டு வின் மனைவி மாத்ரி, அவன் உடலோடு உடன் கட்டை ஏறியவள்.

வெள்ளையன் அரசாங்கம் இதை தடை செய்தது. அதன் விளைவு  இந்த வழக்கம்  ரெட்டை மடங்காக உயர்ந்தது. 1838ல்  378 ஆக முன்பு இருந்தது  839 ஆக  உயர்ந்தது.   வங்காளத்தில்  ராஜாராம் மோகன் ராய் முயற்சியில், தடையை அமுல்படுத்த  கோரிக்கை வலுத்தது.   பெண்டிங் பிரபு  அப்போது  ஆங்கிலேய  கவர்னர் ஜெனரல்.  அவன் ஒரு சட்டம் பிறப்பித்து   சதி   தடை செய்யப்பட்டது, தடையை மீட்டுபவர்கக்கு கடும் தண்டனை என்று ஆணையிட்டும்  நாடு முழுதும் அங்கங்கே நடைபெறும் சம்பவங்கள் தொடர்ந்து தான் வந்திருக்கிறது.  நாளாவட்டத்தில் குறைந்துவிட்டது.   விதவைகள்  மறு  விவாகம் புரிய சட்டம்  வந்தது.  அதற்கும் மேலாக பின்னர்  சாரதா சட்டம் என்று பால்ய விவாகம் தடை செய்யப்பட்டு எத்தனையோ இளம் பெண்கள் உயிர்  காக்கப்பட்டது.

ராஜ ராஜ சோழன் அம்மா  வானவன் மாதேவி, அவன் மகன் ராஜேந்திர சோழன் மனைவி வீரமஹாதேவி ஆகியோர்  உடன்கட்டை ஏறி மாண்டவர்கள் என்று கல்வெட்டோ,பட்டயமோ இருக்கிறது.  ராஜவம்சம் இல்லாத எத்தனையோ சாதாரண பெண்கள் மாண்டதற்கு கணக்கே இல்லை.

இதற்கு மேல் சரித்திரம் வேண்டாம். எனது தாத்தாவின் முன்னோர்கள் கதைக்குள் நுழைவோம்.
ராமசாமி பாரதி, வைத்யநாத பாரதி குடும்பங்கள் சாத்தனூரில் சந்தோஷமாக வாழ்ந்தனர்.

தில்லைஸ்தானத்துக்கு   மேற்கே   ஒரு   நாலுமைல்  நடந்தால் (அந்த காலத்தில்  நடக்கும்  தூரத்தை  வைத்து தான்  அடையாளம்  சொல்ல முடியும்)  மரூர்  கிராமம்  வரும்.  அதற்கு பக்கத்தில்  தான்  சாத்தனூர். பச்சைப் பசேலென்று   விளைச்சல் நிலங்கள் உள்ள  பூமி.  காவேரிப்  பாசனம்.  கேட்க வேண்டுமா விளைச்சலுக்கு?  அமோகம். விவசாய பூமி என்பதால் அங்கே  வேளாளர்கள் அதிகம். அவர்களில் சிலர்   பட்டப்பெயர்கள் கொண்டிருந்தார்கள்  அந்த  காலத்தில்.    சோழகர் ,
  மழவராயர்,  தஞ்சிராயர்,  வாண்டையார்,  ராஜாளியார்,  தென் கொண்டார்  என்றெல்லாம்  பட்டங்கள்  இருந்தது.

 காலாட்டி  சோழகர் என்று  ஒருவர் அப்போது  பெரிய  மிராசுதார் அந்த  ஊரில்.   நாட்டாமை  என்று  தான் அவரை  எல்லோரும் அழைப்பார்கள் தெய்வ பக்தி  உள்ளவர்  சோழகர்.  அவருக்கு  பிராமணர்களையே தெய்வமாக பார்க்கும் குணம்.  தரும சிந்தனை  எல்லோருக்கும்  இருந்த போதிலும் இந்த மாதிரி  தார்மீக குணம் படைத்த  மிராசுதாருக்கு  இருந்தால் பலருக்கு நன்மையல்லவா.

ரெண்டு பாரதிகளுமே  ராமநாடக  கீர்த்தனையில்  பயிற்சி  உள்ளவர்கள். தினமும் சாயந்திரமும்   ஊரே திரண்டு உட்கார்ந்துவிடும். காலாட்டி சோழகர்  ராமசவாமி  பாரதியின்  கீர்த்தனைகளில்  தன்னையே  இழந்துவிடுவார். சமஸ்க்ரிதத்தில்  கீத கோவிந்தமும் சங்கீத ஞானத்துடன்  பாடுவார்.   ஜெயதேவர்  அஷ்டபதி,  சதாசிவ ப்ரம்மேந்திரா கிருதிகள் அனைத்துமே  தினமும்  தனது  வீட்டில்  பாராயணம்  செய்வார்.  அனைவரும் இரவு  பின்னேரம்  வரை  அமர்ந்து ரசிப்பார்கள்.  

உடையார் பாளையத்துக்கும்  அவ்வப்போது  போய்  ஜமின்தாரை பார்த்து சிலகாலம் தங்கி பரிசுகள் பெற்று  வருவார்கள்.

ஜானகியும்  ஞானம்மாளும்  நகமும்  சதையுமாக  இருந் தார்கள்.  ஞானமமாவுக்கு புத்திர பாக்கியம் இல்லை.  ஜானகியின் ஐந்து ஆறு குழந்தைகளை ஆசையாக வளர்த்தாள்.

குற்றால   புராணத்தில்  அக்கால  பெண்களின்  சிறப்பு  குணங்கள்  எழுதப்பட்டி ருக்கிறது.  அதன் படி  அந்தக்காலத்தில்  ஒரு குடும்ப ஸ்திரீயிடம்  என்ன  எதிர்பார்த்தார்கள்  தெரியுமா?

அதிகாலையில்  எழுந்து  ஸ்நானம் செய்து  புலாலன்றி  சுவையோடு  சமைத்தல்,  வீட்டிற்கு   யார் வந்தாலும் இன்முகத்தோடு விருந்த மைத்தல், மகப்பேறு,  அச்சம்  மடம்  நாணம்,  பின்னுறங்கி முன்  எழுதல்,  காலையில் கணவன்  காலைத்தொட்டு கண்ணில்  ஒற்றிக் கொண்டு பிறகு   கடவுள்  வழிபாடு. (இதை  இப்போது  யாராவது அமுலுக்கு கொண்டு வரமுடியுமா?  அமுல்  பால்  டப்பா வேண்டுமா னால்  வாங்கி வந்து கொடுக்கலாம்.    நான்  சொன்ன இப்படிப்பட்ட  பெண்  ''ஏ, மழையே பெய்' என்றால் வருணன் உடனே கொட்டோ கொட்டு  என்று  மழையைக்  கொண்டுவந்து தருவான்.' ராமசாமி பாரதிக்கு குழந்தைச் செல்வம் இல்லை. அவர்மனைவி ஞானம்மாள் ஜானகியின் குழந்தைகளுக்கு தாயாக அன்போடு அவர்களை வளர்த்தாள் .  இருவரும் உடன் பிறவா சகோதர்கள் போல் அன்போடு பழகினார்கள்.

ராமஸ்வாமி பாரதி  68வயதில்  கைலாச  பதவி  அடைந்தார்.  ஞானம்மாள்  கணவன் உடலை எல்லோருடனும்  இருந்து அந்திம   க்ரியைகளுக்கு வேண்டிய  உதவி செய்து  உடன்  இருந்தாள் . துளியும் அவளிடம்  கண்ணீரோ கவலையோ   இல்லை. அவரது  சடலம்  தூக்கிச்  செல்லப் படும்போது கூடவே  போனாள்    காவிரிக்கரையில்  மந்திரங்கள் சொல்லி  கனல்  மூட்டும் சமயம்,  ஞானம்மா ஸ்நானம் செய்து, மஞ்சள்  குங்குமம்  அணிந்து,   ஈர  வஸ்த்ரத்தோடு   ''அவரைப் பிரிந்து   நான்  அரைக்கணமும் இரேன் ''  என்று  அனைவரிடமும் சொல்லிவிட்டு, எரியும்  சிதையில்  தாவினாள் .

'அம்மா  நீங்கள்  எங்களோடு இருங்கள்''  என்று  வேண்டிக் கொண்டவர்களிடம் அவரைத் தனியே விடுவதாவது.  அவருக்கு  யார்  சிச்ருஷை செய்வார்கள்  என்ற   பதில் தான்  வந்தது.  நீங்கள்  எல்லோரும்   சௌக்கியமாக வாழவேண்டும்  என்ற  ஆசியுடன் கனலானாள்.

மேலே  சொன்ன   ராஜாராம்  மோகன் ராயோ,  வில்லியம்  பெண்டின்க் பிரபுவோ   அப்போது  சதியை சட்டபூர்வமாக  நீக்கவில்லை. எண்ணற்ற பத்தினிகள்  கணவனோடு  தங்கள்  வாழ்க்கையையும்  முடித்துக்கொள்வது வழக்கத்தில்  இருந்தது.  நிறைய குடும்பங்களில் இத்தகைய  பெண்டிரை சுமங்கலிப் பிரார்த்தனையில் இன்னும்  வணங்கு கிறார்கள்  அவர்கள்  ஆசியுடன்   அக்குடும்பங்கள் சுபிக்ஷமாகவும்  உள்ளன.



No comments:

Post a Comment