Friday, November 20, 2020

RAMANA MAHARSHI


 மனப் போராட்டம்  J K  SIVAN 



இப்போது ஐப்பசி, அடுத்தது கார்த்திகை.  விசேஷமான மாசம். திருவண்ணாமலை தீபம் என்றால் எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள்  வந்து  வழக்கமாக அம்முவார்கள்.  ட்ரெயின்  பஸ் எல்லாம் அதிகமாக ஓடும். 

இந்த வருஷம் கொரோனா பகவான் என்ன  செய்ய அனுமதிப்பார் தெரியவில்லை.?  போகப்போக தான் தெரியும்.

அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் தரிசனம் எத்தனைபேருக்கோ  இந்த  வருஷம்?   ப்ரம்மா விஷ்ணு அடிமுடி தேடி காணாமல்
 ஸ்தாணுவாக ஒளிமயமாக நின்ற சிவனை வணங்கிய  க்ஷேத்ரம். அக்னி க்ஷேத்ரம் என்று பஞ்சபூதங்களில் புகழ் பெற்றது.  உமாதேவி  கௌதம ரிஷியின்  அறிவுரையின் படி தவமிருந்து சிவனை அடைந்த க்ஷேத்ரம்.   இன்றும்  எண்ணற்ற  ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள்,   உபாசிக்கும், வசிக்கும் மந்திர மலை அருணாசலம்.   நமக்கு தெரிந்த மஹான்கள்  ரமணர் , சேஷாத்திரி ஸ்வாமிகள், குகை நமசிவாயர், குரு நமசிவாயர், ஈசான்ய தேசிகர்,  விசிறி ஸ்வாமிகள்  போன்றோர்  வாழ்ந்து அருள் புரிந்த க்ஷேத்ரம். நினைத்தாலே  மோக்ஷம் தரும்  ஸ்தலம்.  மலையைச் சுற்றி  எட்டு லிங்கங்கள் சந்நிதி,  எட்டு நந்திகள் உள்ளது.  360 புனித  தீர்த்தங்கள் உள்ள ஒரே க்ஷேத்ரம். அவற்றில் இந்திர தீர்த்தம்,  அக்னி தீர்த்தம், ஈசான்ய தீர்த்தம், கட்க தீர்த்தம், ப்ரம்ம தீர்த்தம்,  சிவகங்கை,  ஆகிய சிலவற்றையே  கண்ணால் காண முடியும்.  
முலைப்பால் தீர்த்தம்  மலை மேலே உள்ளது. இதைப் பற்றி எழுத வந்தேன். 
 ரமணர் முலைப்பால் தீர்த்தம் அருகே  வாசம் செய்தபோது  ஒருநாள்  நடுத்தர வயது மனிதர் ஒருவர் ரமணர் முன் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். அவரைப்பார்த்ததும்  ரமணர்  புன்னகைத்தார்.  

''சௌக்கியமா இருக்கியா?'' 

முப்பது வருஷங்களுக்கு முன்னால்  ரமணரு
டைய வாழ்வில்    அவரிடம் முதலும் கடைசி
யுமாக  கன்னத்தில்  அறை  வாங்கிய ஒரே மனிதர் இந்த உலகில்  இந்த மனிதன்  தான் !! என்ன  இது?. ஆச்சர்யமான ஒரு விஷயமாக  இருக்கிறதே. உண்மையில் நடந்ததா?  

கிட்டத்தட்ட  முப்பது வருஷங்களுக்கு   முன் .....
அப்போது  ஜடை ஸ்வாமிகள் என்று ஒருவர்   முலைப்பால் தீர்த்தம்  அருகே  மாமரத்து குகை என்ற இடத்தில் இருந்தார்.    இந்த அறை வாங்கிய மனிதன் அப்போது 8வயது பையன்.  ரமணர் மற்றும் யோகிகளிடம் சில்மிஷம் பண்ணி விளையாடி, தொந்தரவு பண்ணும்  பொல்லாத பையன். பையன் ரமணரிடம் வந்தான்..

.''சாமி  மாமரத்து குகை  ஜடை சாமியார்  உங்க கிட்ட  பக்கெட்  வாங்கியாற  சொன்னார்'' 

 ரமணர் ஒன்றுமே பேசவில்லை.  யாரையும் கேட்காமல் அங்கே இருந்த பக்கெட்  ஒன்றை எடுத்துக் கொண்ட பையன் நகர்ந்தான்.   பழனி சுவாமி என்கிறவர்  ரமணரின்  தேவைகளை   கவனித்துக் கொள்பவர்  அப்போது  அங்கே 
இல்லை.   ஆகவே  ரமணர்  பையன்  பக்கெட்டுடன்  சென்ற சில  நிமிஷங்களில்
 ஜடை ஸ்வாமியை பார்க்க சென்றார்.
அதற்குள்   பையன் நேராக  ஜடை சுவாமியிடம் சென்று 

''சாமி,   மலை மேலே  இருக்கிற  பிராம்மண சாமி உங்களுக்கு  பக்கெட் கொடுத்தனுப்பிச்சாரு ''  என்றான்.

''பக்கெட்டா , நான்  கேட்கவே இல்லையே..''  என்று வியந்தார்  ஜடை சுவாமி.  சில நிமிஷங்களில் ரமணர் நேரில் வந்ததும் ஜடை சுவாமி   நடந்த விஷயத்தை   ரமணர் மூலம்  கேட்டறிந்தார்.  ரமணர் அந்த பையனை அறைய கையை ஓங்கினார்.  மனசு ஒரு பக்கம் அவனை கன்னத்தில் அறைய உடன்படவில்லை.  மனதில் வாக்குவாதம். அறைவதா வேண்டாமா, இல்லை பையனை அறைவது சரி'' என்று தோன்றியதும்  அவ்வாறே  அறைந்தார். 

அந்த மனிதன் பூர்வ ஜென்ம புண்யம் பண்ணிய
வனாக இருக்கவேண்டும். பகவானை நெருங்கி அவரால் தொடப்பட்டு அறையும் வாங்கியவன்... பல வருஷங்கள் தொடர்ந்து வந்து  மகரிஷியை வணங்குபவன் ...

No comments:

Post a Comment