Monday, March 23, 2020

VAI MU KO.



      
ஆஹா,  இன்னொரு  திருக்கோளூர் பெண் பிள்ளையா?
                                               J K   SIVAN  

அந்த காலத்திலேயே   சில சிறந்த  பெண் எழுத்தாளர்கள் ரொம்ப  அற்புதமாக ஜொலித்திருக்கிறார்கள்.  வீட்டிலேயே  முடங்கி இருக்கும் நிலையில்  அன்பர்கள் கொடுத்த புத்தகங்களில் ஒரு சிலவற்றை படிக்க முடிந்தது.

ஒரு பெண் பட்டணத்தில் வளர்ந்தவள். நாட்டுப்புரம் என்றாலே  அடிக்க வருபவள்  பெற்றோர்களால் தீர்மானிக்கப்பட்ட ஒரு  கிராம போஸ்ட்மாஸ்டரின் மனைவியாகிறாள். கணவன் கிராமத்தில் போஸ்ட்மாஸ்டர் என்பது தெரியாமல் திருமணம் ஆகிவிட்டது.  அழகன், நல்லவன், அவன் கிராமத்திற்கு செல்கிறாள். விஷயமறிந்து பெற்றோர் மீது கடும் கோபம்.  அவர்களோடு பேசவோ தொடர்போ கொள்ளவில்லை.  கணவன் மேல் எரிந்து விழுகிறாள்.   கிராமத்தில்  வீட்டிலேயே  முன்பக்க அரை, திண்ணை போஸ்டாபிஸ்  எல்லாவேலையும் அவன் ஒருவனே செயகிறான். க்ரமத்தார்களுக்கு லெட்டர் எழுதிக்கொடுக்க, படித்துக் காட்ட , கார்ட் கவர் விற்க வேண்டும்.   பட்டணத்திலிருந்து க்ராமத்திற்கான  தபால்களை வாங்கிக்கொண்டு வருவது, அவற்றை பிரித்து விநியோகம் செய்ய உதவிக்கு ஒரு கிழவன்.  ஆகவே  பாதிநேரம் கணவன் வீட்டில் இல்லை. இரவில் வெகுநேரம்  கழித்து வருவான். அன்றைய கணக்குகளை சரிபார்த்து பணம் பட்வாடா  வரவு செலவு எல்லாம் எழுதி வைத்துவிட்டு தூங்குவான்.  மனைவியின் மனநிலை புரிகிறது. விட்டுப் பிடிக்கலாம் என்று எண்ணுகிறான்.

மனைவி பொழுதுபோகாமல்  வரும் தபால்களை படிக்கிறாள், (ஆசிரியர்  பிறர் கடிதங்களை படிக்கும் பழக்கம் கொண்டவர் அல்லர்) .  கதையில் பிறர் எழுதிய கடிதங்களை போல் ஆச்சர்யமாக வெவ்வேறு  த்வனியில் , வெவ்வேறு வாசகங்களில், ,  எத்தனையோ மனிதர்களின் எண்ணம், குமுறல்கள், சந்தோஷம், துக்கம்,  கிராமம் பட்டண வாசம் பற்றியும்  இதுவரை அவள் அறியாத விஷயங்கள், எப்படி குடும்பத்தில் இருக்கவேண்டும்  நடக்கவேண்டும் என்று (யாரோ யாருக்கோ எழுதியதை போல்  தானே எழுதி ) பிறர் கடிதங்களை  எல்லாம் படிக்கிறாள். மற்றவர்களின் மனநிலை, நல்லது, கெட்டது , எல்லாம் அறிகி றாள்.  அவளுக்கு உலகம் புரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக  கிராம வாழ்க்கை இனிக்கிறது. உள்ளூர் படிக்கதமக்களுக்கு கதிதான் எழுதி தருவது, படித்துக் காட்டுவது , பிரச்னைகளை தீர்க்க வழி சொல்வது என்று படிப்படியாக  சிறந்த பெண்மணியாகி, கணவனுக்கு மகிழ்வூட்டுகிறாள். அவள் போக்கிலேயே விட்டு அவள்  மனதை வெல்கிறான் அந்த இளைஞன்.  

இது தான் கதை. இதில் 112 பக்கங்கள், அற்புதமான முறையில் வெவ்வேறு நடையில், வினோதமான மனித எண்ணங்களை விவரிக்கும் கடிதங்கள் தான் கதையின் வலு.  இதை பின்னணியாக கொண்டு ''தபால் விநோதம் '' என்ற புத்தகத்தை எழுதிய பெண்மணி  ''ஜகன்மோகினி'' ஆசிரியை  ஸ்ரீமதி வை.மு. கோதைநாயகி அம்மாள்.    இவரைப் பற்றி விஷயம் தேடினேன்:


1901ல் பிறந்த வைத்தமாநிதி முடும்பை  கோதை நாயகி,  ஒரு சகலகலா வல்லி.  59 ஆண்டுகள் வாழ்ந்தவர்.  நான்  திருக்கோளூர் பெண்பிள்ளை ரஹஸ்யம் எழுதி  வருகிறேன்.  இவரும் ஒரு  திருக்கோளூர் அதிசய பெண்பிள்ளை என்று தெரிகிறது.

துப்பறியும் நாவல்  எழுதிய முதல் பெண்.  பள்ளி சென்று படிக்காதவர்.  தேச பக்தர்,  சிறந்த மேடைப் பேச்சாளர்.  கர்நாடக இசை பாடகி.  D.K .பட்டம்மாளுக்கு பாட்டு சொல்லிக்கொடுத்தவர்... மஹாகவி பாரதியார்  ''ஆடுவோமே பள்ளு பாடுவோமே ''  பாடலை  வை.மு.கோ. விற்காகவே எழுதியதாகவும். அதை அவர்  DKP  யை விட்டு பாடவைத்து இன்றளவும் பிரபலமான பாடலாகிவிட்டது.  போதுமா?

அன்னிபெசன்ட், அம்புஜம் அம்மாள், சத்யமூர்த்தி  ஆகியோர் நல்ல நண்பர்கள். மஹாத்மா  காந்தி அவர் பெற்றோர் வீட்டுக்கு வந்திருக்கிறார்.  கள்ளுக்கடையை எதிர்த்து திருவல்லிக்கேணியில் மறியல் செயது சிறை சென்றவர்.    எத்தனையோ பேருக்கு  மருத்துவச்சியாக  குழந்தைப்பேறு சமயங்களில் உதவியவர்.

வை.மு.கோ.வின் தேச சேவையை  பாராட்டி காங்கிரஸ் அரசாங்கம்  செங்கல்பட்டுக்கு அருகே 3 ஏக்கர் நிலமும் மற்றொரு இடத்தில் 7 ஏக்கர் நிலமும் வழங்கியது . வை.மு.கோ.  தனக்கு கிடைத்த  நிலத்தைப் பூமிதான இயக்கத்திற்காக வினோபாவேயிடம்  வழங்கிவிட்டார்.

 ராஜாஜி  இவரை தனது கூட்டங்களில் மேடையில் பேச அழைப்பார். கவிஞர்,  நாடகாசிரியர், சமூக நல  ஊழியர், பத்திரிகாசிரியர்,  ''நாவல்ராணி, கதா மோகினி, ஏக அரசி’’ என ;புகழப்பட்டவர். 115 நாவல்கள் எழுதியவர். தான் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் எழுத்தே உலகம் என்று  வாழ்ந்தவர்.  5-6 வயதிலேயே கல்யாணம். கணவனுக்கு 9 வயது.  



No comments:

Post a Comment