நாராயண தீர்த்தரும் தீர்த்த நாராயணரும்?!! - 1
J K SIVAN
அப்படிப் பாடியவர்களில் ஒருவர் தான் நாராயண தீர்த்தர். கிருஷ்ணனே அவரைத் தேர்ந்தெடுத்து ' 'நீ என்னைப்பற்றி பாடுகிறாயா? பாடு. நான் கேட்கிறேன்'' என்று கூறி அவர் இயற்றியது தான் ''ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி ''.
ஆந்த்ர ப்ரதேசத்தை சேர்ந்தவர் நாராயண தீர்த்தர். குண்டூர் ஜில்லாவில் காஜா என்ற சிறிய கிராமம். பானக நரசிம்மனின் மங்களகிரி அருகே உள்ளது. அங்கே ஒரு தெலுங்கு பிராமண குடும்பத்தில் ஏறக்குறைய 450 வருஷங்களுக்கு முன்பு பிறந்தவர் தீர்த்தர்.பெற்றோர் வைத்த பெயர் கோவிந்த சாஸ்திரி.
எங்கோ வெளியூர் சென்றவர் ஒரு ஆற்றைக்கடக்க நேரிட்டபோது திடீர் என்று வெள்ளத்தால் நீர் மட்டம் உயர, உயிர் தப்ப ஆபத் சன்யாசம் மேற்கொண்ட பின் நீர் மட்டம் குறைந்து உயிர் தப்பி அக்கரை சென்றார். வீட்டை துறந்து துறவியானார். காசி, கங்கை,கோதாவரி கிருஷ்ணா நதி தீர க்ஷேத்ரங்கள் சென்று திருப்பதி வந்தபோது கடுமையான வயிற்று வலி. அதோடு வெங்கடேச தர்சனம்.
'வேங்கடேசா, என் வயிற்று வலியிலிருந்து என்னை மீட்டு ஏற்றுக்கொள்'' என்று வேண்டினார் நாராயண தீர்த்தர். . 'நாராயணா, நீ தெற்கே பூபதிராஜபுரம் செல்'' என்றான் திருமலையப்பன். தமிழகத்தில் திருவிடைமருதூர், திருவையாறு,திருமழப்பாடி என்று பல க்ஷேத்ரங்கள் சென்றார். வயிற்று வலி அதிகரித்ததே தவிர குறையவில்லை. ''ஸ்ரீநிவாஸா, என்னப்பனே, எதற்கு இந்த சோதனை எனக்கு?'' ''நாராயணா, இதைக் கேள். நாளைக் காலையில் முதலில் ஓருவர் உன் கண்ணில் படுவார். அவர் பின்னாலே போ. நாளைக் காலையில் நீ கண் விழித்தவுடன் காண்பவர் பின்னால் செல். அவர் ஒரு இடத்தை உனக்கு காட்டுவார். அங்கே போனதும் உன் வயிற்று வலி மட்டும் அல்ல, நீ செய்த கர்ம வினைகளும் அகலும்'' என்றான் அன்று இரவு கனவில் திருமலையான்.வேங்கடேசன் மஹிமை, அதிசயங்கள் சொல்லி மாளுமா? திடுக்கிட்டு கனவில் இருந்து விழித்து பொழுது விடிய காத்திருந்தார் நாராயணர். பறவைகள் கூவின. உலகம் உறக்கத்திலிருந்து மீண்டது. . அருணன் உதயமானான். ஆவலாக வெளியே வந்து யார் வரப்போகிறார் என்று காத்திருந்தவர் கண்ணில் தென்பட்டது மனிதர் எவருமல்ல. ஒரு வெள்ளை நிற பன்றி. ''ஓ, வராஹனே நீதானா அது ... அது ஓட அவர் துரத்த, எங்கெங்கோ போய் கடைசியில் தஞ்சாவூர் பூபதிராஜபுரம் கிராமத்தில் நுழைந்த பன்றி அங்கே இருந்த வேங்கடேசபெருமாள் ஆலயத்தை நோக்கி ஓடியது. நாராயணர் பின் தொடர்ந்தார். பெருமாள் ஆலயத்தில் நுழைந்த பன்றியை எங்கே காணோம்? ''அடாடா, வெங்கடேசா, என்னே உன் அருள். நீயா இப்படி எனக்காக ஸ்வேத வராஹனாக (வெள்ளைப் பன்றியாக) உருவெடுத்து இங்கு என்னை அழைத்து வந்தவன்?'' நாராயண தீர்த்தர் கண்களில் பிரவாகம். பன்றிமட்டுமா மறைந்தது. வயிற்று வலியும் காணோமே.! ''கூற்றாயினவாறு....வயிற்றினகம் ஜெயதேவரின் மறு பிறப்பு தான் கிருஷ்ண லீலா தரங்கிணி இயற்றிய நாராயண தீர்த்தர் (1675-1745) என்று சொல்வதுண்டு.
வேதவியாசர் கலியுகத்தில் மூன்று பிறவி எடுத்ததாக சொல்வார்கள். ஒன்று ஒடிஸ்ஸாவில் ஜெயதேவராக அவதரித்து கீத கோவிந்த அஷ்டபதிகளை அளித்தார். ரெண்டாவது பிறவி சிருங்கார மஹாகவி க்ஷேத்ரஞர் (1484 – 1564), 24000 பதங்கள் இயற்றியவர். அடுத்தது நாராயணதீர்த்தர்.
இதுவரை நாராயண தீர்த்தரை அறிந்து கொண்டீர்களே ''''தீர்த்த நாராயணரை தெரியுமா?
இதற்கு விடை: '' ஹுஹும்.. யார் அவர்? நாராயண தீர்த்தரை பெயர் மாற்றி சொல்கிறீர்களா?'' அப்படியாகி விட்டது அவர் விஷயம். மஹா பெரியவா என்றால் நாம் ஒருவரைத் தான் நினைவு கொள்வோம். நேதாஜி என்றால் தெரியாது நேருஜியா என்று வேறொருவரை மாற்றி நினைக்கிறோம். அந்த அளவு ஒருவர் பெயர் மற்றொருவர் பெயரால் மறைந்து போகிறது. தீர்த்த நாராயணர் என்றால் நாராயண தீர்த்தர் தான் கண் முன் நிற்கிறார். இனி தீர்த்த நாராயணர் பற்றி சொல்கிறேன் .
|
No comments:
Post a Comment